இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist Muthunayagam)

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம்

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist A. E. Muthunayagam)
தொடர் 99: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

Dr. A.E. முத்துநாயகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னணி விண்வெளி விஞ்ஞானி ஆவார். இந்தியாவில் ராக்கெட் உந்து விசையின் தலைமை வடிவமைப்பாளர் திரவ வந்து அமைப்பு மையத்தை உருவாக்க பொறுப்பேற்றுக் கொண்டவர். உலகஅளவில் வான் ஊர்திகளின் போரபல்ஷன் டெக்னாலஜி வளர்ச்சி பங்களிப்புகளுக்காக அறியப்படுபவர். விஞ்ஞானி முத்துநாயகம் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.. ஆனால் இஸ்ரோவில் இருந்து அதிகம் வெளியில் பேசப்படாத அங்கீகரிக்கப்படாத மாமனிதர்.

விஞ்ஞானி ஆபிரகாம் ஈ முத்துநாயகம் (Space Scientist A. E. Muthunayagam) FROM SPACE TO SEA .. MY ISRO JOURNEY AND BEYOND எனும் தலைப்பில் தன்னுடைய இஸ்ரோ நாட்களை குறித்த அற்புதமான சுயசரிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். விண்வெளியியல் குறித்த ஆர்வமுடைய அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது. துருவ செயற்கைக் கோள் ஏவுதல் வாகனம் மற்றும் ஜியோ சிங்க்ரோனஸ் செயற்கைக் கோள் ஏவுதல் வாகனத்தின் திரவ எரி பொருள் சோதிப்பதற்காக மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் சோதனை ஆய்வுக்கூடங்களை உருவாக்கிக் கொடுத்தவர். அவர் திரவ உந்து அமைப்பு மையத்தின் நிறுவனர் இயக்குநராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து இந்திய ராக்கெட்டுகளின் வெற்றிகரமான பயணத்தில் முக்கிய பங்களிப்புகளை செய்தவர். உந்துவிசை தொழில்நுட்பத்தின் மூன்று முக்கியமான உரிமங்கள் உலகளவில் தன் கையில் வைத்திருப்பவர்.

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist Muthunayagam)

1939 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் அறிஞர் முத்துநாயகம் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் பிறந்தார். ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ் வளாகத்தில் ஆரம்பத்தில் அவர் இளம் அறிவியல் பட்டத்திற்கு இயற்பியலை எடுத்துக் கொண்டார். பிறகு கிண்டியிலுள்ள பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலைப் பட்டத்தை பொறியியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி பெற்ற ஆண்டு 1960. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் முதுகலை பட்டப் படிப்பை ஏரோநாட்டிகல் துறையில் முடித்தார். அமெரிக்காவிலுள்ள பர்டு பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆய்வகத்தில் தன் முனைவர் பட்ட கல்வியை மேற்கொண்டார். இங்கு தான் அவருக்கு வானூர்திகளின் எரி பொருட்கள் குறித்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

விண்கலம் உந்துதல் அல்லது ROCKET PROPULSION என்பது வின்கலம் மற்றும் செயற்கைகோள்களை அனுப்புவதில் விரைவுபடுத்த பயன்படும் முறை ஆகும். விண்வெளியில் உள்ள உந்துவிசையானது விண்வெளியின் வெற்றிடத்தில் பயன்படுத்தப்படும் உந்துவிசை அமைப்புகளை பிரத்தியேகமாக கையாளுகிறது. இது விண்வெளி ஏவுதல் துறையில் பயன்படுகின்ற எரிபொருள் குறித்து கவனம் செலுத்துகிறது. நடைமுறை விண்கல உந்துவிசையில் பல முறைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன ஒவ்வொன்றும் அதன் சொந்த குறைபாடுகள் மற்றும் நிறைவு கொண்டவை ஆகும்.

ராக்கெட் உந்துவிசை இயலின் சியால்காவ்ஸ்கி சமன்பாட்டை திரவ எரிபொருள் குறித்த செயல்பாட்டுக்கு வெற்றிகரமாக மாற்றங்களின் மூலம் கட்டமைத்து உலக அளவில் புகழ் பெற்றவர் தான் முத்துநாயகம். கிரயோஜெனிக்ஸ் ஏனும் துறையின் வித்தகராக அவரை உலகம் போற்றுகிறது. ராக்கெட் உந்துவிசை எரிபொருளை பொறுத்தவரையில் கிரயோஜெனிக் என்று அழைக்கப்படுகின்ற மிக குறைந்த வெப்பநிலையில் எரிபொருளை கையாளுகின்ற முறையை இந்தியாவில் அறிமுகம் செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

சர்வதேச அளவில் இது குறித்த நிபுணத்துவம் மிக்க விஞ்ஞானிகளை பெற்றிருந்த நாசா இந்த விஷயத்தில் நமக்கு உதவ முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் நம்முடைய விண்வெளி ஆய்வு குறித்த அடுத்த பல படிநிலைகளை அடைவதற்கு கிரயோஜெனிக் முறை தேவை என்பதை உணர்ந்து அதற்காக பல வகையான ஆய்வுகளில் ஈடுபட்டு நாம் கண்ட வெற்றியின் பின்னணியில் இருப்பவர் முத்துநாயகம்.

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist Muthunayagam) | SCE-200 : 🇮🇳's First Semi-Cryogenic Engine

விஞ்ஞானி முத்துநாயகம் வெளியிட்ட கிரையோஜெனிக் திரவங்கள் குறித்த பட்டியல் அவருடைய மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளது. ஹீலியம் 3 எனும் குறிப்பிட்ட திரவமாக்கப்பட்ட வாயு குளிர்நிலையில் -269 டிகிரி செல்சியஸ் அளவில் அற்புத ராக்கெட் உந்துவிசை எரிபொருளாக பயன்படுத்த முடியும். அதே போல ஹைட்ரஜன் -196 டிகிரி செல்சியஸில் நமக்கு அதே பலனை வழங்க முடியும். இது போன்ற திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஹீலியம் போன்றவற்றின் கிரயோஜெனிக் பயன்பாட்டின் மூலம் இந்தியாவினுடைய ராக்கெட் தொழில்நுட்பத்தை உலக தரத்திற்கு உயர்த்திய அற்புத கண்டுபிடிப்பாளர் தான் முத்துநாயகம். கிரையோஜெனிக் என்கிற இந்தத் துறையின் பயன்பாட்டை திரவ ஹைட்ரஜனைக் கொண்ட ராக்கெட்டுகளுக்கான கிரயோஜெனிக் எரிபொருள்களாக மாற்றுகின்ற அந்த படி நிலைகளை சுய கல்வியின் மூலம் தானே ஒன்றிணைத்து இந்தியாவுக்கான பங்களிப்பாக மாற்றிய பெருமை அவரை சாரும்.

LOX என்பதைRP-1 என்று அழைக்கப்படும் சாதாரண மண்ணென்ணேய் கொண்டு கிரயோஜெனிக் அல்லாத ஹைட்ரோகார்பன் உடன் வினைபுரிய வைத்து அதை விண்வெளி திட்டத்திற்கு பயன்படுத்துகின்றன. முத்துநாயகத்தின் திட்டம் மிகக் குறைந்த விலையில் இந்தியா விண்வெளித்துறையின் அடுத்த படிநிலையை சாதித்தது.

ஒரு காலத்தில் தும்பாவில் இருந்து மட்டுமே ராக்கெட்டுகளை அனுப்பிக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரி கோட்டாவை தேர்வு செய்தோம். ஸ்ரீ ஹரி கொட்டாவின் ஒட்டுமொத்த திட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டவர்தான் விஞ்ஞானி முத்துநாயகம். பிரெஞ்சு ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கொண்ட VIKAS எனும் இஸ்ரோவின் திட்டத்தின் திட்ட மேலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இஸ்ரோவின் ராக்கெட் வாரியத்தினுடைய தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். ரோஹினி 125 முதல் SLV3, ASLV என்று இவருடைய பங்களிப்புகள் அடுத்தடுத்து வெற்றியை சாதித்துக் கொடுத்தன. துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மற்றும் ஜியோ சிங்க்ரோனாய்ஸ் செயற்கைக் கோள் ஏவுதல் வாகனத்தின் பிரதான நிலைகளை பரிசோதிப்பதற்காக மகேந்திரகிரியில் ஒரு தனி ஆய்வு மையத்தையே உருவாக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist Muthunayagam)

PSLV என்று அழைக்கப்படும் துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பு ஆகும். இந்தியா தனது இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை சிங்க்ரோனைஸ் ஆர்பிட் என்று அழைக்கப்படுகின்ற பிரத்தியேக இடங்களுக்கு செலுத்த இது உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தின் புவிநிலை பரிமாற்ற சுற்றுப் பாதையில் செலுத்துவதற்கான திரவ எரிபொருள் வாகனத்தை உருவாக்கும் முழு பொறுப்பையும் முத்து நாயகம் ஏற்றுக்கொண்டார். அதற்கு முன் நாம் இதுபோன்ற செயற்கை கோள்களை அனுப்புவதற்கு வாணிகரீதியில் ரஷ்யாவை நம்பி இருந்தோம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செலுத்து வாகனங்களை விலை குறைவாக நமக்கு உருவாக்கி கொடுத்த பெருமை முத்துநாயகம்த்தை சேரும்.

நம் இந்தியாவின் மிகப் பிரபலமான வின் ஆய்வு திட்டங்களான சந்திரயான் முதல் ஆதித்யா வரை பல்வேறு வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ள விஞ்ஞானி முத்துநாயகம் தயாரித்து கொடுத்த PSLV பயன்பட்டு இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இப்போது PSLV என்கிற துருவ செயற்கைக் கோள் ஏவுதல் வாகனம் நான்காவது படி நிலையை எட்டிவிட்டது. 2022 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 36 நாடுகளில் இருந்து 345 செயற்கைகோள்களை விண்ணிற்கு ஏவுவதற்கு PSLV உதவியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று PSLV-C37 எனும் ராக்கெட் வாகனம் 104 செயற்கைக்கோள்களை சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி உலக சாதனை ஒன்றை புரிந்தது.

இந்திய ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம் (Space Scientist Muthunayagam)

இஸ்ரோவின் பணிகளுக்கு பிறகு கடல் மேம்பாட்டு துறையின் செயலராக அவர் சிலகாலம் பதவி வகித்தார். கடல் ஆராய்ச்சித் துறையின இந்திய பெருங்கடல் பிராந்திய மூன்று ஆய்வு நிறுவனங்களை நிறுவிய பெருமை அவரை சாரும். கேரள மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கவுன்சிலின் நிர்வாக துணைத் தலைவராக அப்போது அவர் பணியாற்றி கொண்டிருந்தார். ஐ ஐ டி மெட்ராஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானி முத்துநாயகம் நஸ்ரூல் இஸ்லாம் பல்கலைக்கழகம் காருண்யா பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களின் வருகை தரும் பேராசிரியராக இருக்கிறார்.

சர்வதேச அளவில் மத்திய இந்திய பெருங்கடல்லுக்கான அரசுகளுக்கு இடையிலான கடல்சார் ஆணையத்தின் பிராந்திய குழு தலைவராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார் அண்டார்டிகா கடல் வாழ் வளங்களின் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்ட பொழுது அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1970 ஆம் ஆண்டில் விண்வெளி மையத்தை சுற்றி துணை தொழில்துறை அழகுகளை நிறுவுவதற்கான ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார் விஞ்ஞானி முத்துநாயகம். உலக அளவில் பிரசித்தி பெற்ற நியூ யார்க் பர்க்மன் பிரஸ் நடத்துகின்ற இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஹீட் அண்ட் மாஸ் டிரான்ஸ்பர் என்னும் ஆய்விதழின் ஆசிரியராகத் தொடர்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையினுடைய முனைவர் பட்ட தேர்வாளராக முத்துநாயகம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

விஞ்ஞானி முத்துநாயகம் இந்திய விண்வெளி சங்கம், ஏரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா, இந்திய தேசிய பொறியியல் அகாடமி ஆகியவற்றினுடைய வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறார். ரஷ்யாவின் உடைய அகாடமி ஆஃப் காஸ்மோடிக்ஸ் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் ஒரே விஞ்ஞானி எனும் பெருமை பெற்றவர் இவர். விண்வெளி மற்றும் கடல் அறிவியலுக்கான தேசிய விருது இவருக்கு 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆசிய அறிவியல் கழகம் வழங்கும் டாக்டர் வீ எம் காட்டேஜ் விருது பெற்ற அறிஞர் முத்துநாயகம் அவர்களின் அறிய கண்டுபிடிப்புகள் உலகெங்கும் விண்வெளி ஆய்வுத்துறையை மேம்படுத்தி இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India’s finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *