இயற்கை எனும் இளையகன்னி..
என்று திரைஇசையை
துவங்கிய SPB அவர்களுக்கு
அஞ்சலி..
விடியல் பொழுதுகளும்
பயண நேரங்களும்
தன் குரல் வழியே
என் மனநிலையை
சமநிலைப் படுத்திய
மாயக் குரலோன்..
காந்தக் குரலோனே
மறைந்தும் மறையாது
உன் கான ஓசை ..
இனிவரும் தலைமுறைகளும்
இணையத்தில்
உன் குரல் தேடும்..
கவிஞர்களின் வரிகளுக்கு
உன் கம்பீர குரலில்
நவரசங்களை வடித்த
குரல் சித்தன் நீ…
உன் கான ஒலி
தாலாட்டி காதல் கசிந்துருகி
உயிரிலே கலக்கின்றது..
உன் குரலுக்கு
நிகரென்று எதுவுமில்லை
இவ்வுலகில்..
இயற்கை உள்ளவரை
வாழும் உன் கானங்கள்..
கவிதா பிருத்வி


வாழ்த்துகள் தோழர் அருமையான கவிதை.
வரிகள் அருமை…எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்த பாலுசாருக்கான எங்களின் எண்ணங்களை வரிகளாக நீங்கள் வடித்து விட்டீர்கள்👍💐
அருமையான கவிதை..