நெட்கள் பழமையான ஹாம் வானொலி நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஊரிலும் அமெச்சூர் நெட்கள் செயல்பட்டுவருகின்றன. முதல் நெட் இரண்டு ஹாம் வானொலிகள் ஒலிபரப்பில் இருக்கும் போது தொடங்கப்படுகிறது. நெட்கள் வழக்கமாகத் திட்டமிடப்பட்டுள்ள பொதுவான நலன்களுக்காக ஒலிபரப்பப்படுகிறது. இதற்கு உதாரணமாகச் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது செயல்பட்ட ஹாம் நெட்களைக் கூறலாம். இது ஒரு பொதுவான நலனுக்காகத் தொடங்கப்பட்டு, உதவி தேவைப்படும் மக்களுக்கு ஒலிபரப்பியது.
சில நேரங்களில் தேவைப்படுபவர்களுக்கான பொருட்களை ஒலிபரப்பின் ஊடாக சேகரிப்பது, ரேடியோ செஸ் விளையாடுவது அல்லது பின்தொடர்வது போன்றவற்றை இதன் ஊடாக செய்யலாம். ஒரு சில நெட்கள் போட்டிகளுக்காகவும் செய்யப்படுகின்றன. அதன் ஊடாக சர்வதேச விருதுகளையும் பெறுகின்றனர். இன்னும் சில நெட்கள் போக்குவரத்தைக் கையாள்வதற்காகவும், அவசர சேவைகள், வானிலை அறிக்கையைக் கூறுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
கிட்டத்தட்ட அனைத்து ஹாம் நெட்களும் ஒரே மாதிரியான அடிப்படை அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு நெட் கட்டுப்பாட்டு நிலையம் (NCS) நெட்களின் செயல்பாடுகள், மற்றும் அதன் ஒழுங்கை பராமரிக்கிறது, நெட்களின் நடவடிக்கைகளை இயக்குகிறது, பின்னர் நெட்டின் செயல்பாடுகளை ஒரு ஒழுங்கான வழியில் ஒலிபரப்ப உதவுகிறது. இதுபோன்ற நெட்களில் பங்கேற்க விரும்பும் நிலையங்கள் NCS இணைந்து செயல்படப் பணிக்கப்படுகிறது. நெட்களின் மேலாளர் குறிப்பிட்ட நெட்டிற்கான கொள்கையை வரையறுக்கிறார்.
இது போன்ற நெட்களில் முறையான ரேடியோகிராம் அல்லது ஒரு வகையான வாய்மொழி செய்திகள் மற்றும் ஹாம் வானொலித் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. நெட்களின்போது பொதுவான அலைவரிசை பயன்படுத்தப்படுகிறது. இதன் ஊடாக புதிய ஹாம்களும் அந்த அலைவரிசைகளில் இணைந்துகொள்ள முடிகிறது. நெட்களின் முதன்மையாக விவாதத்திற்கு ஒரு பொதுவான தலைப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஏதேனும் ஒரு வகையில் இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் உள்ளது. சந்தையில் விற்பனை ஆகும் வர்த்தக உபகரணங்கள், குறிப்பாக ஹாம் வானொலிப் பெட்டிகள் அனைத்தையும் பற்றியும் இந்த குழுவில் விவாதிக்கப்படுகிறது.
ஒரு பொதுவான அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அனைத்து ஹாம்களும் பரிமாற்றங்களைச் செய்துகொள்கின்றனர். மேலும் இதுபோன்று பொதுவான அலைவரிசையில் ஒலிபரப்பப்படுவதால் இந்த ஒலிபரப்புகளை அனைவருக்கும் கேட்க முடிகிறது. இந்த நெட்கள் ஒரு சில சமயங்களில் போக்குவரத்தினைக் கையாள்வதற்கும் அல்லது அவசர உதவிகளுக்கும் செய்யப்படுகிறது.
ரேடியோகிராம்
பிரிட்டிஷ் ஆங்கிலத்தில், ரேடியோகிராம் என்பது ரேடியோ மற்றும் ரெக்கார்ட் பிளேயரை இணைக்கும் ஒரு கருவியாகும். ரேடியோகிராம் என்ற சொல் ரேடியோ மற்றும் கிராமபோன் ஆகியவை ஒன்றிணைந்து இயங்கக்கூடிய ஒரு சாதனமாகும். அமெரிக்க ஆங்கிலத்தில் இதற்குத் தொடர்புடைய சொல் கன்சோல். அமெச்சூர் வானொலிலும் இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஒரு விரிவான கையேட்டினை அமெரிக்க ரேடியயோ லீக் ARRL Operating Manual என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
என்.சி.எஸ் உங்களை மற்றொரு நிலையத்துடன் இணைக்கிறது. அமெரிக்காவில் உள்ளது போன்ற என்.சி.எஸ் இந்தியாவில் இல்லை. ஆனால் ஹாம் வானொலி மன்றங்கள் இங்கே இந்தப் பணியைச் சிறப்பாக செய்கின்றன. உங்கள் ஊருக்கான ரேடியோகிராம் எந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது என்பதை ஒவ்வொரு ஹாம்களும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
பொதுவாக முதன் முறையாக ஹாம் அலைவரிசையில் செல்லும் போது ஒரு வித பதட்டம் நமக்குள் இருக்கும். அந்த பதட்டத்தினை முதலில் போக்கிக்கொள்வது அவசியம். எனவே ஒலிபரப்பின் போது எந்தவித தயக்கமும் இல்லாமல், “இது எனது முதல் செய்தி, எனவே தயவுசெய்து மெதுவாக என்னோடு பேசுங்கள்.” ஒரு அனுபவமிக்க ஹாம் வானொலி ஒலிபரப்பாளர், இது போன்று புதிதாக வருபவர்களுக்கு நல்ல வகையில் உதவி செய்து, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பினை செவ்வனே செய்ய உதவிவார்.
ஒரு ரேடியோகிராம் கீழ்க்கண்ட பகுதிகளைக் கொண்டுள்ளது:
முன்னுரை: நீங்கள் ஹாம் வானொலியில் பெறும் முதல் தொகுதி தகவல், முன்னுரை செய்தி பற்றிய தகவல் – செய்தி மட்டுமல்ல, அதன் விபரங்களையும் தெளிவாக எழுதுவது அவசியம். அந்த செய்தியின் இயல்பு மற்றும் தோற்றம், அதன் மூலம் நீங்கள் அந்த வானொலியைக் கையாளவும், பதிலளிக்கவும் முடியும். நீங்கள் அவ்வாறு செய்ய அனுபவம் மிகவும் முக்கியம். முன்னுரை செய்தி துல்லியத்தை மேம்படுத்துகிறது. எனவே தெளிவாக எழுதிக் கொள்வது அவசியம்.
முகவரி: ஹாம் வானொலி நிலையத்தின் பெயருடன், அதன் முகவரி தெளிவாக எழுதிக்கொள்வது முக்கியம். தகவல் பொதுவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே தெரு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களையும் இணைத்து எழுதுவது அவசியம். சில செய்திகளில் பெயர் மட்டுமே இருக்கும். அதில் அந்த வானொலியின் நகரம் மற்றும் தொலைப்பேசி எண்களையும் குறித்துக்கொள்வது அவசியம். காரணம் ஒரு வேலை நீங்கள் தொலைப்பேசி மூலம் செய்தியை வழங்கும்பட்சத்தில் இந்தத் தகவல்கள் நமக்குத் தேவை.
செய்தி: ரேடியோகிராம்களில் 25 சொற்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், நீங்கள் நிறைய உரையை எழுதினால், அதைச் சமாளிப்பது கஷ்டம். எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவதும் மிக அவசியம். எழுதுவது சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த அசாதாரண சொற்களையும் பயன்படுத்த வேண்டாம். குழப்ப வேண்டாம். செய்தியின் முக்கியத்துவத்திற்கு தகுந்தவாறு எழுதுவது அவசியம். நிறைவாக நீங்கள் சரியான தகவலை எழுதியுள்ளீர்களா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
கையொப்பம்: செய்தியை எழுதியவரின் பெயர் அல்லது அழைப்புக் குறியீடு.
நீங்கள் தான் நகலெடுத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் நேரத்தை ஒதுக்கி முழு செய்தியையும் கவனமாகச் சரிபார்க்கவும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஒலிபரப்பும் நிலையத்துடன் தொடர்புகொண்டு சரிபார்க்கவும். தகவல் சரியாக இருக்கும்பட்சத்தில், “QSL!” (இதன் பொருள் “முழுமையாகப் பெறப்பட்டது”) என்று கூறி ஒலிபரப்பினை நிறைவு செய்யுங்கள்.
செய்தியை ஒலிபரப்புதல்
ஒரு செய்தியை ஒலிபரப்புவது என்பது சாதாரண விடயம் அல்ல. செய்தி ஒலிபரப்பினை கையாளுதலில் மிகவும் கவனம் தேவை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒலிபரப்பு செய்ய வேண்டிய வானொலியை அழைத்து, “ஹலோ, என் பெயர் —-, நான் ஒரு அமெச்சூர் வானொலி ஆபரேட்டர் மற்றும் நான் உங்களுக்காக ஒரு செய்தியை —- இதிலிருந்து வைத்திருக்கிறேன்.” என்று நீங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு டெலிமார்க்கெட்டர் அல்ல, அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம். உங்களிடம் உள்ளதையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதும் அவசியம்.
நீங்கள் செய்தியைப் பெறத் தயாரான பிறகு, அதை கவனமாக மீண்டும் படிக்கவும். ஒலிபரப்பில் வரும் எந்த எண்ணையும் தெளிவாகக் குறித்துக்கொள்ளவும். ரேடியோகிராம் ஊடாக நீங்கள் செய்தியை வழங்கினாலும் கூட மற்றொரு ஹாமிற்கு அது தெளிவாகப் போய்ச் சேர்ந்ததா என்கதையும் அறிந்துகொள்வது அவசியம். நீங்கள் ஒலிபரப்பு முடித்ததும், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மறுபுறத்தில் ஹாம் இருக்கிறாரா என்று வானொலி ஊடாகவே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
www.arrl.org/nts
www.arrl.org/shop/operating
www.arrl.org/FandES/field/forms
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க