வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதற்கும் ஒலிபரப்புவதற்கும் ஒரு சில இடங்கள் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன. இதனால் தான் வெளிநாடுகளில் உள்ள ஒலிபரப்பாளர்கள் ஆண்டிற்கு ஒரு முறை சிறந்த இடங்களைத் தேடி பயணமாகின்றனர். இந்தியாவிலும் மேற்கு வங்கம் மற்றும் கேரள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்கள் தொலைதூர வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதற்காக இது போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.

Picture Credit: https://www.sota.org.uk

கடற்கரையோரங்களில் வெளிநாட்டு வானொலிகளைத் தெளிவாகக் கேட்பதற்கு முடியும் என்பதால், இந்த இடங்களையே பெரும்பாலான ஹாம் வானொலியினர் தேர்வு செய்கின்றனர். இன்னும் சிலர் மலைப்பிரதேசங்களில் இருந்து ஒலிபரப்ப ஆர்வமுடன் உள்ளனர். அதற்குக் காரணம், இது போன்ற இடங்களில் மின் காந்த அலைகள் எந்தவித சிரமங்களும், இடையூறுமின்றி பயணிக்கவும் கிடைக்கவும் செய்யும்.

தமிழகத்தில் பல ஹாம்கள் ஏற்காடு, ஏலகிரி, கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளுக்கு சென்று வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கின்றனர். இது போன்று மலைப்பிரதேசங்களுக்குச் சென்று கேட்பதனை ஆங்கிலத்தில் mountaintopping என்று அழைக்கின்றனர். இந்த மலைப்பகுதி வானொலி கேட்டல், சமீப காலமாகத் தமிழகத்திலும் புகழ்பெற்று வருகிறது. அதிலும் வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் போன்ற ஒலிபரப்புகளை மலைபாங்கான பகுதிகளுக்குச் சென்று ஒலிபரப்ப விரும்புகின்றனர். அதற்குக் காரணம், இந்த வானொலிகளுக்குத் தேவையான ஆண்டனாக்கள் பெரிதாக இருப்பதில்லை. அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக உள்ளது.

பிரபலமான DX-ing முறைகளையெல்லாம் இந்த மலைப்பகுதிகளில் நாம் கையாள முடியாது. இருக்கும் இடத்தினைப் பொறுத்தே அங்கு ஹாம் வானொலி நிலையங்களை அமைக்க முடியும். மலைப் பகுதிகளில் சரியாக எந்த இடத்தில் ஒலிபரப்பியை அமைக்கப் போகிறீர்கள் என்பதுவும் முக்கியம். வி.எச்.எஃப் / யு.எச்.எஃப் வானொலிகளின் ஆண்டெனாக்கள் சிறியவை, அதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எளிதாக அமைத்துக் கொள்ள முடியும் என்பதனால், நினைத்த இடத்தில் எல்லாம் அமைத்துவிட முடியாது.

Picture Credit: Kimpokusan

உயரமான கட்டிடங்கள், மலைகளின் முகடுகள், தீயணைப்புத் தளங்கள் மற்றும் மலை உச்சிகளில் இந்த ஆண்டனாக்களை எளிதாக அமைக்க முடியும் என்பதால் தான் அனைவரும் இந்த ஆண்டனாக்களை இன்றும் விரும்புகின்றனர்.

உங்கள் நிலையத்தின் உயரத்தினைப் பொருத்து அந்த ஒலிபரப்பானது தொலைதூரத்திற்கு பயணிக்கிறது. அயனோஸ்பியர், வானிலையின் தன்மையைப் பொருத்து இது பயணிக்கும் தன்மையில் வேறுபடுகிறது. இது போன்ற மலைப்பாங்கான இடத்தில் கையடக்க வானொலிப் பெட்டிகளும் கூட தொலைதூரத்திற்கு பயணிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது எனலாம். உலகம் முழுவதும் வி.எச்.எஃப் ஒலிபரப்பில் பல போட்டிகளை வைக்கின்றனர். அதில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வாங்குவதற்காகவும், இது போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர்.

இது போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் தற்காலிக வானொலி நிலையத்தினை அமைக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் மாநிலத்தின் நிலப்பரப்பு வரைபடத்தினை எடுத்துக்கொண்டு, உங்கள் வானொலி கியர், மற்றும் ஆண்டனாக்களை எடுத்துக் கொண்டு புறப்படுவது மட்டுமே! இதன் ஊடாக ஒரு புது உலகத்தினைக் காணலாம்.

இது  போன்ற மலைப்பகுதியிலிருந்து செயல்படும் நிலையங்களுக்கு என்று ஒரு தனியான போட்டியை ‘சம்மிட்ஸ் ஆன் த ஏர்’ (The Summits On the Air) அமைப்பு நடத்துகிறது. இவர்களின் இணையத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் எளிதாகப் புரியும்படி விளக்கியுள்ளனர். குறிப்பாக மலைப்பகுதி வானொலி நிலையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள், இது போன்ற சமயங்களில் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? உலகம் முழுவதும் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலையிலிருந்து ஒலிபரப்பும் சிறப்பு ஹாம்  வானொலிகள் என அனைத்துத் தகவல்களும் இந்த இணையதளத்தினில் கிடைக்கிறது.

Picture Credit: www.amateurradio.com

இதில் விஷேசம் என்னவெனில், குறைந்த சக்தியில் இது போன்ற மலைப்பகுதியிலிருந்து ஒலிபரப்பினாலே, அதிக தூரத்திற்கு ஒலியலைகள் பயணிக்க வாய்ப்புள்ளது. அதனால், இது போன்ற மலைப்பாங்கான இடத்தில் பல்வேறு புதிய சோதனைகளைச் செய்து பார்க்க ஹாம்களுக்கு ஒரு வாய்ப்பு. இது போன்ற சோதனைகளைச் செய்து பார்க்கப் பெரிதும் உதவியாக இருப்பது டி.எக்ஸ் வோல்ட் (DX World) போன்ற இணையதளங்களாகும். இந்த இணையதளங்களின் உதவியோடு, எந்த நேரத்தில், புதிய நிலையங்கள் கிடைக்கின்றன. இதில் விஷேசம் என்னவெனில், ஒலிபரப்புகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களே, தகவல்களைப் பதிவிடுவதால், உடனடியாக அந்த ஒலிபரப்புகள் எப்படி உங்கள் பகுதியில் கிடைக்கிறது என்பதனை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது.

வி.எச்.எஃப் டி.எக்ஸ் விருதுகள்

நம் அனைவருக்கும் போட்டிகள் என்றாலே ஒரு குதூகலம் பிறந்துவிடும். வானொலிப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கினால், சும்மா இருப்போமா?  வி.எச்.எஃப் டி.எக்ஸ் தொடர்புகள் சாதாரணமாக அனைவரும் செய்வது தான் என்றாலும் பொதுவாக அவற்றின் ஒலிபரப்புகள் தொலைதூரத்திற்கு  உலகளாவிய நேயர்களைச் சென்றடையும் என்றால், அது ஒரு சாதனையே.

Picture Credit: K5ND-Satellite-VUCC

இந்த போட்டிக்கு வேண்டி, உலகினை பல்வேறு கட்டங்களாகப் பிரித்துள்ளது அமெரிக்க வானொலி ரிலே லீக். இதனை ஆங்கிலத்தில் ‘கிரிட் ஸ்கொயர்ஸ்’ என்கின்றனர். சிறிய அளவு சதுரங்களாக இவை பிரிக்கப்படுகின்றன. இதில் ஒரு கட்ட சதுரம் என்பது 1 ° அட்சரேகையை 2 ° தீர்க்கரேகை கொண்டதாகும்.

ஒவ்வொரு கட்ட சதுரத்திற்கும் இரண்டு எழுத்துக்கள் (புலம் என அழைக்கப்படுகிறது) மற்றும் இரண்டு எண்கள் (சதுரம் என்று அழைக்கப்படுகின்றன) வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, சியாட்டலுக்கு அருகிலுள்ள ஒரு இருப்பிடத்திற்கு சி.என்.87 கட்ட சதுரம் எனப்படும். கட்ட சதுரங்கள் மேலும் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அப்படிப் பிரிக்கப்படுபவை இரண்டு கூடுதல் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இது ஆறு எழுத்துகள் கொண்ட கட்ட சதுரம் CN87sk. (துணை எழுத்துக்கள் பொதுவாகச் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்படுகின்றன.)

வட அமெரிக்காவில் செயல்பட்டுவரும் அமெரிக்க வானொலி லீக், ‘செஞ்சுரி கிளப்’ (வி.யூ.சி.சி) என்ற விருதினை இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு  வழங்குகிறது. இந்த விருதினைப் பெற நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்ட சதுரங்களின் எண்ணிக்கையை விரிவாக அவர்களின் இணைய தளத்தில் விளக்கியுள்ளனர்.

மிகக் குறைந்த இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில் (6-மீட்டர் மற்றும் 2-மீட்டர்) மேற்கொள்ளப்பட்டத் தொடர்புகளும், செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட தொடர்புகளும் 100-கட்ட சதுரங்களை நிறைவு செய்யும் போது, இந்த விருதுக்குத் தகுதி படைத்தவர் ஆகின்றீர்கள். இதில் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டவர் விருது, அனைத்து மாநிலத்தினையும் தொடர்பு கொண்டதற்கான விருது எனப் பல்வேறு விருதுகள் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் போது வழங்கப்படுகிறது.

Picture Credit: www.emeshack.com

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், இது போன்ற போட்டிகளுக்கு ஹாம்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக வழக்கமான VHF / UHF ஒலிபரப்பில் மட்டும் இல்லாமல் அனைத்து வரம்பிற்குள்ளும், அதிகமான நாடுகளைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இது போன்று இன்னும் பல சிற்றலை டிஎக்ஸ் விருதுகளும், விஎச்எஃப் / யுஎச்எஃப் வானொலிகளுக்கு வழங்கப்படுகின்றன.

பல வி.எச்.எஃப் / யு.எச்.எஃப் விருதுகள், வெவ்வேறு நாடுகளைத் தொடர்புகொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், உலக அளவில் உள்ள ஹாம்களைப் பற்றிய அடிப்படையான தகவல்களை வைத்துக்கொண்டு களத்தில் இறங்குவது உத்தமம்.

டிஎக்ஸ்-கில் தொலைதூர பதிவு இல்லாமல் இருந்தால், அதற்குப் பெயர் டி.எக்ஸிங்கே அல்ல. அதனால் தான் ஷார்ட்வேவ் பேண்டுகளில், உலகெங்கிலும் சமிக்ஞைகள் விருப்பப்பட்டு ஹாம்களால் அனுப்பப்படுகின்றன. இது  அதிகபட்ச நிலப்பரப்புளைச் சென்றடைகின்றன. தொலைதூர பதிவுகள் நீண்ட காலத்திற்கு முன்பு ஹாம் வானொலியினரால் விரும்பி செய்யப்பட்டன. சமீப காலமாக அனைவரும் VHF / UHF ஒலிபரப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

https://www.sota.org.uk

http://dxworld.com/props.html

www.arrl.org/awards/vucc

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]



தொடர் 1ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 2ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 2 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 3ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 4ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 5ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 6ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 6 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 7ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 7 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 8ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 9ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 10ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 10 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 11ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 12ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 12 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 13ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 13 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 14ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 14 | தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 15ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 16ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 16 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 17ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 17 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 18ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 19ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 20ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 20 | தங்க.ஜெய்சக்திவேல்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *