ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 23 | தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 23 | தங்க.ஜெய்சக்திவேல்



போட்டி என்று வந்துவிட்டால், நாம், எதிலும் நம்மை மட்டுமே முன்னிலைப் படுத்திச் செல்வோம். ஆனால் அமெச்சூர் வானொலியில் அப்படியெல்லாம் நடந்துவிடாது. எதிர் பக்கத்தில் எவ்வளவு பெரிய ஹாம் வானொலி தாத்தா இருந்தாலும், இளம் ஹாம் வானொலி நிலையத்துடனும் நல்லதொரு தொடர்பினைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. ஏன் அனுபவம் மிக்க ஹாமும், புதிய ஹாமுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என, உங்களில் பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம். இது தான் மற்ற எந்த துறைக்கும் இல்லாத சிறப்புகளில் ஒன்றாக இதில் கருதப்படுகிறது.

அமெச்சூர் வானொலியில் அனுபவம் மிக்கவர், அனுபவம் குறைந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு காலத்தில் ஹாம் வானொலியை ஒரு சிலருக்கும் மட்டும் சொந்தம் என்பது போல் வைத்திருந்தனர். ஏதோ ஒரு பெரிய ரகசியத்தினைப் பாதுகாப்பது போலவும், தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்பதுபோலவும் வைத்திருந்தனர். எளிதாக தேர்வினை எழுதித் தேரமுடியாது என்றெல்லாம் கூறி, இந்தத் துறையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்திய காலமும் உண்டு.

Picture credit: http://www.carnut.info

இன்னும் ஒரு சில ஹாம் மன்றங்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபர்கள் சிலரைத் தேர்ச்சி பெறவைக்க வேண்டி, உண்மையில் ஆர்வமுள்ளவர்களையெல்லாம் தேர்வெழுத அழைத்து, அவர்களைத் திட்டமிட்டே தோல்வியாக்கிய கதையெல்லாம் ஒரு காலத்தில் நடந்துள்ளது. இன்னும் ஒரு சில மூத்த ஹாம்கள், தனக்குத் தான் அனைத்தும் தெரியும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான ஹாம்கள் உதவும் நோக்கத்திலேயே இருந்துவந்துள்ளனர்.

ஹாம் வானொலி என்பது ஒரு கடல். அதில் ஒரு சிலர் ‘ஹோம்பிரீவிங்கில்’ (Homebrewing) ஆர்வம்கொண்டிருப்பர். அது அவரின் விருப்பம், இன்னுமொரு ஹாம் ‘மோர்ஸ்’ தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருப்பார். இப்படி பல்வேறு துறைகள் ஹாமில் உண்டு. ஒன்று தெரிந்து, இன்னொன்று தெரியவில்லை என வருத்தமடையத் தேவையில்லை. ஆனால் ஒரு காலத்தில் “உனக்கு என்ன தெரியும், நீயெல்லாம் ஹாமாகிவிட்டாய்” என்று‘கலாய்த்த’ காலம் ஒன்றும் இருந்தது.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு காரணத்திற்காக ஹாம் வானொலியில் செயல்பட்டுவருகின்றனர். எனது நோக்கம், ஹாம் வானொலி பற்றி சமூகத்திற்குத் தெரிவிப்பதே. குறிப்பாக இளைஞர்களுக்கு இதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறுவதாகும். யாரும், யாருக்கும் குறைந்தவர் இல்லை என்பதால் தான் இன்றும் சர்வதேச அளவில் ஹாம் வானொலி புகழ்பெற்று இருந்துவருகிறது. நம் நாட்டிலும் இதனை வளப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

போட்டிகளில் முன்னவர்

ஹாம் வானொலியில் பல்வேறு போட்டிகள் அனைத்துலக அளவில் நடத்தப்பட்டு வருவதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த போட்டிகள் அனைத்திலும் மிக முக்கியமான அடிநாதமாக இருப்பது, முடிந்த மட்டும் அதிகமான ஹாம் நிலையங்களைத் தொடர்பு கொள்வதாகும். அது சீனியர் ஹாமோ, ஜூனியர் ஹாமோ, எண்ணிக்கை தான் முக்கியம். இதன் காரணமாக தான், அமெச்சூர் வானொலியில் ஜாம்பவானாக திகலும் ஹாம் நிலையத்தினைக் கூட, இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் போது பிடிக்க முடியும்.

எவ்வளவு பெரிய ஹாமாக இருந்தாலும், போட்டிகளில் கலந்துகொள்ளும் போது, பொறுமையாக, நிறுத்தி நிதானமாக புதிய ஹாம்களுக்கு பதில் கொடுப்பார்கள். அதற்கு காரணம், உங்களின் அழைப்பும் அவர்களுக்கு முக்கியம். ஒரு சில ஹாம்கள் மிகச் சக்தி வாய்ந்த  ஒலிபரப்பியைக் கொண்டு உங்களை வந்தடைவர். உங்களின் ஒலிபரப்பு அந்த அளவிற்கு இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். நம்மிடம் எந்த வானொலிப் பெட்டி இருக்கிறது என்பது முக்கியமல்ல, இருக்கும் வானொலிப் பெட்டியைக் கொண்டு எத்தனை நிலையங்களைப் பிடிக்கிறோம் என்பதே முக்கியம்.

ஒரு சாதாரண ஹோம்பிரீவிங் வானொலிப் பெட்டியினை கொண்டு, பல்வேறு சாதனைகளைச் செய்த பல ஹாம்கள் உள்ளனர். எனவே, நம்மிடம் சக்திமிக்க ஹாம் வானொலிப் பெட்டி இல்லையே என்ற கவலை அறவே வேண்டாம். போட்டிகளுக்கான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, போட்டியில் கலந்து கொள்வதே முக்கியம்.

போட்டியில் பங்குபெறல்

அமெச்சூர் வானொலி போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு முறை இதில் நீங்கள் இறங்கிவிட்டால் போதும், உங்களை அந்த போட்டியே உள்ளே இழுத்துக்கொள்ளும். அந்த அளவிற்கு இது சுவாரஸ்யம் மிகுந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் நிலையம், அடிப்படையில் எப்படி ஒலிபரப்பும் என்று தெரிந்துகொள்வது அவசியம். இங்கே, ஒரு அடிப்படையான ஹாம் பேச்சு எப்படியிருக்கும்? போட்டியின் போது அமெச்சூர் வானொலியினர் என்ன பேசுகின்றனர்? என்று கேட்க நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இதோ ஒரு உதாரணம். போட்டியின் பெயர் ‘ஆர்டிக் ரன்’ (Ardic Run). அந்த போட்டியில் கலந்துகொள்ளும் நிலையம் எப்படியான உரையாடலை மேற்கொள்ளும். இதோ…

VU3UOM: CQ Ardic Run CQ Ardic Run from Victor Uniform Three Uniform Oscar Mic.

VU3IJX: Victor Uniform Three India Juliet X-ray.

(ஹாம் வானொலியில் பேசும் போது, அந்த நிலையத்தின் பெயரைக் கூறுவது முக்கியம். இங்கு நிலையத்தின் பெயர் VU3UOM. மேலும் நிலையான ஒலிப்பு (Standard Phonetics) முறையில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும்.)

VU3UOM: VU3IJX, you are five-nine in Chennai. (“உங்களின் ஒலிபரப்பு எனக்குத் தெளிவாகக் கிடைக்கிறது” என்பது தான் இதன் அர்த்தம்.)

VU3IJX: QSL, VU3UOM, you’re five-nine in Madurai. (“உங்கள் ஒலிபரப்பு எனக்கும் தெளிவாகக் கிடைத்தது”)

VU3UOM: Thanks, QRZed Ardic Run Victor Uniform Three India Juliet X-ray. (போட்டியில் கலந்து கொண்டதற்கு நன்றி)

மேற்கண்ட உரையாடல் அனைத்தும் 10 நொடிகளில் முடிந்துவிடும். இப்படிச் செய்யும் பொழுது நிறைய நிலையங்களைப் போட்டியில் பெற முடியும். இரண்டு நிலையங்களுக்கும் தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு இந்த நேரம் போதுமானது.  உங்களில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். அது என்ன five-nine plus? ஹாம் ஒலிபரப்பில் இதற்கு அர்த்தம் “உங்கள் ஒலிபரப்பு எனக்குத் தெளிவாகவும் சத்தமாகவும் கிடைத்தது” என்பதாகும்.

Picture Credit: https://www.reddit.com

ஒரு நிலையத்தினை தொடர்பு கொண்ட பிறகு, அடுத்த நிலையத்தினை தேடிச் செல்லவேண்டும். இதனை ஆங்கிலத்தில் searching and pouncing என்று கூறுவர். பொதுவாக ஹாம் அலைவரிசையில் அமெச்சூர் வானொலிகளைப் பிடிப்பது என்பதே ஒரு சவால் நிறைந்த பணி தான். இது பற்றி வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கலாம். இப்படி வேகமாக புதிய வானொலிகளை பிடிக்கும் பொழுது, ஒரு சில சமயங்களில், அனைத்து நிலையங்களும் தெளிவாக இருக்காது. தெளிவாக கிடைக்காத நிலையங்களை மீண்டும் ஒரு முறை அழைப்பது முக்கியம்.

என்ன பேசுவது?

ஹாம் வானொலி என்பது ஒரு குட்டி வானொலி நிலையம் தான். வானொலியில் ஒலிபரப்பும் போது நம் குரலினை கேட்க நமக்கே ஆர்வமாக இருக்கும். காரணம், குரல் வான்வெளியில் பயணிக்கிறது. உலகெங்கும் உள்ள ஹாம்கள் உங்களின் குரலினைக் கேட்பார்கள் என்பதால், நமக்கே ஒரு சில சமயங்களில் ஒரு தயக்கம் இருக்கும். அதுவும் போட்டியில் கலந்துகொள்ளும் போது வேகமாகப் பேசவேண்டும். இதனால் இயற்கையாகவே பதட்டம் ஏற்படும். அந்த பதட்டத்தினை தவிர்க்க ஒரு வழி உண்டு. என்ன பேச வேண்டும் என்பதை ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு பேசலாம்.

போட்டியின் போது பொதுவாக எல்லா நிலையங்களுடனும் ஒரேப் போலவே பேசவேண்டியதாக இருப்பதால், இது போன்று எழுதி வைத்துக்கொண்டு, விரைவாக பேசலாம். உலகெங்கும் உள்ள அனைத்து நிலையங்களும் பொதுவான மொழியாக ஆங்கிலத்தினை எடுத்துக்கொண்டுள்ளது. சரளமான ஆங்கிலம் இதற்குத் தேவையில்லை. பேசுவதைப் புரிந்துகொள்ளும் அளவு போதுமானது.

போட்டியில் எத்தனை ஹாம் நிலையங்களைக் கேட்கிறீர்களோ, அந்த ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். அந்த நிலையமும் எந்த அலைவரிசையில் கேட்டீர்கள் என்பதைப் பொருத்து மதிப்பெண்கள் வேறுபடும். போட்டியின் வகைகளைப் பொருத்தும் மதிப்பெண்கள் மாறுபடும். உதாரணமாக அனைத்து மாநிலங்கள், நாடுகள், கண்டங்கள், தீவுகள், கலங்கரை விளக்கங்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் வைக்கப்படுகின்றன.

மூத்த ஹாம்களைப் போன்று போட்டியின் போது வேகமாக பேச முடியவில்லை என வருத்தப்படாதீர்கள். நிறுத்தி நிதானமாகப் பேசினாலே போதும். இரண்டாவது முறை கேட்டார்கள் எனில் மட்டும் பதில் கூறுங்கள், இல்லாத பட்சத்தில் அடுத்த நிலையத்தினை தேடிப் போய்விடலாம்.

 

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

https://hamradioschool.com/phonetic-alphabets/

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: ardicdxclub@yahoo.co.in



தொடர் 1ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 2ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 2 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 3ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 4ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 5ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 6ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 6 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 7ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 7 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 8ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 9ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 10ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 10 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 11ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 12ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 12 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 13ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 13 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 14ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 14 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 15ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 16ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 16 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 17ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 17 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 18ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 19ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 20ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 20 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 21ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 21 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 21ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 22 | தங்க.ஜெய்சக்திவேல்

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *