நூல்: ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்
ஆசிரியர்: ஜெ. பால்முருகனின்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 120
பக்கம்:128
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
தமிழில் தரமான புத்தம் புதிய தொழில்நுட்பசெய்தியை கொண்ட விண்வெளி சார்ந்த உலக அளவில் நடைபெற்று வரும், ஆராய்ச்சிகளை பற்றிய விளக்கங்களை எளிமையாக எடுத்துரைக்கும் புத்தகம்.
விண்வெளி ஆய்வில், உலகில் உள்ள எல்லா ராக்கெட்டுகளை விட சிறந்த மற்றும் மலிவு விலையில் ராக்கெட்டை உருவாக்கி பல்வேறு நாடுகளின் அரசு சார்ந்த நிறுவனங்களை கூட
ஆச்சர்ய படவைத்த எலன் மாஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிறுவன அமைப்புகள், எலன் மாஸ்கின் எதிர்கால திட்டம் உள்ளிட்ட பற்பல செய்திகளை சுவைபட எளிமையாய்
எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம். தொழில் முனைவோராக உருவாக விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை செய்தியையும் அழகாய் ஊட்டுகிறது. எந்த துறையில் இருந்தாலும் அதற்கான ஆர்வம், அதைபற்றிய ஆழ்ந்த அறிவு, கடின உழைப்பு இவை இருந்தால் எல்லோரும் வெற்றி பெறமுடியும் என்பதன் அறிவியலை அழகாய் புரிய வைக்கிறார் ஆசிரியர். ஆசிரியரும் ISRO நிறுவனத்தில் பணிபுரிவதால் ராக்கெட் அதன் என்ஜின், எரிபொருள் இதன் ஆரம்பகால கட்ட வளர்ச்சி, தற்போதைய வளர்ச்சி (SLV, PSLV, GSLV, ESCAPE ROCKET) ஆகியவற்றை தரவுகளோடு ஒப்பிட்டு எளிமையாய் எல்லோருக்கும் புரிய வைக்கிறார். பதினைந்து உப தலைப்புகளோடு எலன் மாஸ்கின் மனித இனம் Multi Planet
இனமாக மாற வேண்டும் என்ற சிந்தனை ஒட்டி, Space X நிறுவனத்தின் செயல்பாடுகளை அவற்றின் வெற்றி ரகசியங்களை மறுபயன்பாடு மூலம் நிறுவனம் பெற்ற பணபலன்களை பட்டியலிடுகிறார்.
ராக்கெட்டின் வடிவம், வடிவமைப்பு, இயக்கநிலை 1,2,3 எரிபொருள் (திட, திரவ, வாயு), எடை, சுமந்து செல்ல எடை (Pay Load) அவற்றின் விலை நவீன வகை ராக்கெட் அவற்றின் சிறப்பு அம்சங்கள் பால்கன் வகை ராக்கெட்டை Space X நிறுவனம் ஏன் பயன்படுகிறது? என்பது உள்ளிட்ட சாதக, பாதக அம்சங்களை அலசுகிறது இந்த புத்தகம்.
மறு பயன்பாடு (Reuse) சுற்றுச் சூழலோடு மட்டுமல்ல விண்வெளிதுறைக்கும் மிக முக்கிய பயன்பாடு தருகிறது என்பது புதிய சிந்தனை. Space X நிறுவனத்தின் புதிய செயற்கை கோள் மூலம் நிறுவப்படும் இணையதள சேவை, விண்வெளி சுற்றுலா, HyperLoop ஆராய்ச்சி, மூலமாக உலகில் எந்த ஒரு மூலையிலும் அதிகபட்சமாக 90 நிமிடங்களுக்குள் செல்லமு டிகி றது . புதிய
தொழில்நுட்ப செய்தி நம்மை வேறு உலகிற்கு கொண்டு செல்லும்.
“நிலாவிற்கு போய் வடை சாப்பிட்டு விட்டு வரலாமா? அப்படியே ஒரு டீயும் சாப்பிட செவ்வாய் கிரகத்திற்கு சென்று வர முடியும்’’ என்பதனை எதிர் வரும் ஆண்டுகளில் தொழில்நுட்பம் எளிமைப் படுத்த போகிறதை அழகாக எடுத்துரைக்கிறது. இந்த புத்தகம் அறிவியல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் வாங்கி வாசியுங்கள்.
அறிவியலை நேசிக்கிற அனைவருக்கும் ராக்கெட், விண்வெளி நவீன தொழில்நுட்பங்களை அழகு தமிழில் எளிமைபடுத்தி இருக்கிறார் ஆசிரியர் பால் முருகன். அறிவியல் தமிழுக்கு புதிய அறிவியல் கொடை வழங்கிய பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் நன்றிகள்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.