நேற்று மாலைவரை
கூடியிருந்த கூட்டம்
இரவில் எங்கோ போய்
அடைந்து விட்டது.
அது விட்டுப் போன
மிச்சங்கள் அழுதுகொண்டிருக்கின்றன
குடை ராட்டினமும்
பலூன் வியாபாரியும்
பஞ்சு மிட்டாய்க் காரனும்
நின்றிருந்த இடங்கள்
பரிதவித்து நிற்கின்றன.
அம்மாவைக் காணோம்
என்று அழுத சிறுவனுக்கு
அம்மா கிடைத்தது
ஆஸ்கார் வந்த்து போல.
அத்தை மகனும்
மாமன் மகளும்
அங்குமிங்கும் கண்களை
அலையவிட்டுக் கொண்டு
கள்ளப் பாரவையால்
கவனம் இழுக்கிறார்கள்.
திருவிழா முடிந்த திடலில்
அன்றும் இன்றும்
அணில்கள்தாம்
ஆடிக் கொண்டிருக்கின்றன.
– வளவ. துரையன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

