“ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)” சிறுகதை
. என்ன முருகா! வேகமா கிளம்பிட்டீங்க. உனக்கு விவரம் தெரியாதா பாலு.நம்ம முருகன் தியேட்டரை இன்னைக்கு இடிக்கப் போறாங்கங்களாம்.
. என்னையா சொல்லுறே! தியேட்டரை இடிக்க போறாங்களா?
ஆமா பாலு!ஆண்டிபட்டியின் அடையாளமாக இருந்த தியேட்டர் ஆண்டிபட்டி மக்களின் பொழுதுபோக்காக மட்டுமில்லை வாழ்வின் ஒரு அங்கமாய் இருந்தது. நாளையிலிருந்து அது இருக்காது. அதான் கடைசியாக ஒருமுறை பார்த்துட்டு வந்துடலாம்னு போறேன். நீங்களும் வாரீங்களா?
கண்டிப்பாக முருகா! நிச்சயம் வாரேன் சக்கம்பட்டியிலிருந்து இருவரும் கிளம்பினர். 15 நிமிடத்தில் முருகன் பாலு இருவரும் திரையரங்கம் வந்து சேர்ந்தனர்.
திரையரங்கம் இடிப்பதற்கு தயார் நிலையில் இருந்தது நூற்றுக்கணக்கான பேர் அங்கு கூடியிருந்தனர். இறக்கப் போகும் தாயின் முகத்தை கடைசியாக பார்ப்பது போல் அனைவரும் திரையரங்கத்தை பார்த்தனர்.
நம்ம தான் வந்திருக்கோம்னா சுத்துக் கிராமத்தில் இருந்து கூட வந்திருக்காங்க.
.
ஆமாம் முருகா! இந்த தியேட்டர் 1957 வாக்கில் கட்டப்பட்டிருக்கும் நினைக்கிறேன் சரியா தெரியலே. நாலு ஐந்து பார்ட்னர்களால் கட்டப்பட்டது. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல தியேட்டரை இழுத்து மூடிட்டாங்க.
. பாலு! இந்தத் தியேட்டர்லே எத்தனை சினிமா பார்த்து இருப்போம்?
.
அதையெல்லாம் கணக்கிலேயே வைக்க முடியாது. எனக்கு 65 வயசு ஆகுது நான் சின்ன பையலா இருக்குறப்போ எங்க அக்கா என்னை இடுப்புல தூக்கிட்டு சினிமாவுக்கு வருவாங்க நல்லா ஞாபகம் இருக்கு.
அதுமட்டுமா பாலு. எம்ஜிஆர் படம்னா ஒரு வாரம் கூட ஓடும்.மற்ற படங்கள் மூன்று நாள் நான்கு நாட்கள் வரைஓடும். நல்ல படமா இருந்தா தொடர்ச்சியாக இரண்டு காட்சிகூட பார்த்திடுவேன்.படம் இன்றே கடைசி போஸ்டர்ல வந்து ஒட்டுவாங்க.
. நாம சின்னப் பசங்களா இருந்தபோ ரெண்டு காட்சி தான். ஆறு மணிக்குஒரு காட்சி 10 மணி காட்சி. 10 மணி காட்சிக்கு கிராமத்திலிருந்து நடந்து வருவாங்க.மாட்டு வண்டி கட்டிக்கிட்டு வருவாங்க.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவர் அண்ணாச்சி நீங்க சொல்றது உண்மைதான். தோட்ட வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு ஏத்துக்கோயில் ரெங்கராம்பட்டி அனுப்பப்பட்டியின்னு சனங்க ஏழு கிலோமீட்டர் நடந்து சினிமா பார்க்க வருவோம். சில பேரு மாட்டு வண்டி கட்டிக்கிட்டு வருவாங்க. ஊருக்கு போகும்போது கூட இரண்டாவது ஆட்டம் முடிஞ்சு நடந்து போறவங்க கூட உண்டு.
அந்தக் காலமே தனி அண்ணாச்சி. நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு கையில் டார்ச் விளக்கு எடுத்துக்கிட்டு படத்தைப் பற்றியும் பழமை பேசிக்கொண்டும் மனதில் கவலையில்லாமல் வருவோம்
. அண்ணாச்சிக்கு எந்த ஊரு?
ஏத்த கோயில்.
அங்க இருந்தா தியேட்டரை இடிக்கிறதை பார்க்க வந்தீங்க . அண்ணாச்சி பேரு? பாலசுப்பிரமணி.
. இவர் பேரும் பாலு தான். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொண்டனர். என் பேரு முருகன்.
.
. அந்தக் காலமே வேற அண்ணாச்சி. சொந்த பந்தம்னு கூட்டு குடும்ப வாழ்க்கை வாழ்வோம். இப்ப பார்த்தீங்களா சொந்தக்காரர் எங்காவது ஒன்னா சேர்ந்து போகுறதை பார்க்க முடியுதா?
.
ஆமாம் முருகண்ணே. டிவியும் செல்போனும் வந்தது.வீட்டுக்குள்ளே முடங்கி போயிட்டோம். ஆளுக்கு ஒரு செல்போன் ஒரே வீட்டில் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்காத வாழ்க்கை .
.
. உண்மைதான் பாலசுப்பிரமணி. ஒரு சினிமாவுக்கு வரனும்னா உதாரணத்துக்கு படம் மாத்தியாச்சுன்னா சினிமா வண்டி ஊரைச் சுற்றி வரும். அதைச் சுற்றி சிறுவர்கள் கூட்டம். சினிமா நோட்டீசை வாங்குவதற்கு தியேட்டர் முன்பே சில சிறுவர்கள் திரண்டுவிடுவார்கள். சினிமா வண்டியை ஓட்டி வருபவர் பசங்க சில பேரிடம் சினிமா நோட்டீசை தருவார். ஆனந்தத்தில் அவர்கள் பின்னாடியே தெருவெங்கும் நோட்டீசை வழங்குவார்கள்.

. முருகண்ணே! அதுமட்டுமா தெருவில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவார்கள் போஸ்டரில் “பாடல்கள் எட்டு அத்தனையும் தேன் சொட்டு” என்ற விளம்பரம் நமக்கு படத்தை பார்க்க ஆவலைத் தூண்டும். அதைப் பார்த்தவுடன் இன்றைக்கு மாலை காட்சிக்கு செல்வோம் என்று பிளான் செய்துவிட்டு நெசவு வேலையை கூலி வேலையை வேகமாகச் செய்வார்கள்
. அண்ணே! பொம்பளைங்க எல்லாம் அப்படித்தான் 5 மணிக்கு எல்லாம் வேலையை முடிச்சிட்டு சமையல் வேலையை தொடங்கி வேலை முடியலைன்னா வீட்டுக்காரரிடம் குழம்பு அடுப்பில் இருக்கு இறக்கி வச்சிடுங்கன்னு சொல்லிட்டு புள்ள குட்டிகளை கூட்டிக்கிட்டு சினிமாவுக்கு வருவாங்க.
.
. பாலசுப்ரமணி! எங்க ஊர்ல மாத கார்த்தியை கொண்டாடுவது வழக்கம் அன்றைக்கு முருகன் தியேட்டர்லே தான் எங்க ஊரு சனமே இருக்கும். இரண்டாவது ஆட்டக்காட்சிக்கு அதிகப்பேர் வருவாங்க. மறுநாள் காலையிலே விடுமுறை என்பதனால்.
.
இந்த முருகன் தியேட்டர் எத்தனை உறவுகளை நமக்கு தந்திருக்கு இன்றைக்கு இளையராஜா பாடின மாதிரி” கலை வளர்ந்தது இங்கேதான் காதல் பிறந்தது இங்கேதான்”.
.
. எத்தனை காதல்கள் இங்கே பிறந்தது மக்கள் சினிமாலை சினிமாவாக பார்க்கவில்லை.
தங்கள் வாழ்வியலாக எண்ணிக் கொண்டு திரையில் வரும் சம்பவங்களை அவர்கள் சிரித்தால் சிரிப்பது அழுதால் அழுவது என்று தம்மையே சினிமாக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டனர்.
உண்மைதான் அண்ணே! எம்.ஜி.ஆர் திரைப்படம் பார்த்து திருந்தியவர்கள் எத்தனை பேர். பீடி குடிப்பது தவறு மது அருந்தக்கூடாது இப்படி காட்சிகளை பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனை பேர்? சிவாஜி படங்களை பார்த்து பாசத்தை பொழிந்தனர். இப்போது வருகிற சினிமாக்கள் மக்களை சாதியால் மதத்தால் பிரித்து வருகிறது. கதாநாயகர்கள் எத்தனை சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளனர். வன்முறை காட்சிகள் தான் சினிமாவில் அதிகமாக உள்ளன பாலசுப்பிரமணியின் புலம்பல்.
.
. தம்பி! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கலைவாணர் சிரிக்கவும் வைத்தார் சிந்திக்கவும் வைத்தார். பட்டுக்கோட்டையின் பாடல்கள் புரட்சிகர கருத்துகளைத்தந்தது. கண்ணதாசனின் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக வெளிவந்தது. கலைஞரின் கதை வசனம் பட்டி தொட்டி எங்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றை பறைசாற்றியது முருகனின் பேச்சு.
. முருகண்ணே! தியேட்டர்லே இடைவேளைவிட்டவுடன்” முறுக்கு முறுக்கு” என்ற தட்டு முறுக்கு காரர்கள் சத்தம் கேட்கும். எவ்வளவு ருசியாக இருக்கும் வெளியே டீக் கடை சுடச்சுட போண்டா: அதன் ருசியேதனி.தட்டு முறுக்கு போண்டாவை வாங்கி சென்று தன் குடும்பத்தாருக்கு கொடுத்துவிட்டு தானும் உண்டு மகிழும் சம்பவம் ஒவ்வொரு காட்சியிலும் அரங்கேறும்.
பாலண்ணே! தியேட்டர் முகப்பே தனிஅழகுதான்.வளைவான முகப்பில் ஆபரேட்டர் ரூம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம் இரண்டு காட்சி தான்.இப்போது நான்கு காட்சி வரை நடைபெறுகிறது. தியேட்டர் அழகே அழகு 36 எம் எம் திரை. அதன் இருபுறமும் தூண் போல வடிவம் அதன் நடுவில் ஒருபுறம் லட்சுமி ஓவியம் மற்றொரு புறம் சரஸ்வதி ஓவியம் மிக அழகாக வரையப்பட்டிருக்கும். திரையின் முன்பக்கம் ஒரு பெரிய மேடை. கூட்டம் அதிகமாக இருந்தால் அந்த மேடையில் அமர்ந்து கூடப் படம் பார்ப்பார்கள். சிறிதளவு தரை அடுத்தது பெஞ்சு. அதன் பின்பு மேலே பால்கனி. தரை டிக்கெட்டை எதிர்பார்த்து வரிசையில் நிற்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால் பெஞ்சுடிக்கெட். பால்கனி பணக்காரர்கள் வி.ஐ.பி குடும்பத்திற்கு மட்டும்தான்.
. முருகண்ணே! நீங்க வி.ஐ.பின்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது.”அன்னமிட்டகை” படத்திற்காக மூணாறு சூட்டிங் சென்றபோது எம்ஜிஆர்: ரசிகர்கள் எவர்க்கும் தெரியாமல் தியேட்டரில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு “குடும்பத்தலைவன்” திரைப்படத்தை கொஞ்ச நேரம் பால்கனியில் அமர்ந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார்.
அப்படிங்களா முருண்ணே!
ஆமாம் தம்பி!அது மட்டுமா இந்த முருகன் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய படம் “எங்க வீட்டு பிள்ளை”. 27 நாட்கள் ஓடியது. அதிக காட்சிகள் ஓடிய படம் “ஆட்டுக்கார அலமேலு” கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஐந்து காட்சிகள் ஓடியது
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் மலரும் நினைவுகளாக “முருகன் தியேட்டர்” பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
. பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் தியேட்டரின் அருகில் யாரும் இருக்க வேண்டாம். ரோட்டிற்கு அந்தப்புறம் செல்லுங்கள் காவல்துறை அறிவிப்பு.
. அனைவரும் கலைந்து சென்று ரோட்டிற்கு அந்தப்புறம் போய் நின்றனர். காவலர்கள் மற்றும் தியேட்டரின் உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.
தயாராக வைக்கப்பட்டிருந்த வெடிபொருளில் தீப்பற்ற வைத்துவிட்டு ஒருவர் ஓடி வந்தார். “டமால் டமால்” என்ற சத்தம். ஒரு நிமிடத்தில் சீட்டுக்கட்டு போல திரையரங்கம் நொறுங்கி விழுந்தது திரையரங்கம் இடிந்து விழுவதைக் கண்ட பொதுமக்கள் பலர் தங்கள் இதயமே வெடித்து சிதறியது போல் உணர்ந்தனர்.
. முருகனும் பாலுவும் கண்களில் கண்ணீர் பெருகியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆண்டிபட்டியின் அடையாளமான “ஸ்ரீ முருகன் திரையரங்கம்” ஒரு நொடியில் மண்ணோடு மண்ணானது பசுமை நிறைந்த நினைவுகள் அங்கே இருந்தவர்களின் மனதில் மீண்டும் இழையோடியது .
எழுதியவர் :
✍🏻 – அ.சீனிவாசன்
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

