காலத்தின் இரை
எனக்கான தானியம்
அவன் பைகளில் கனக்கிறது.
என் வலை சேகரித்த மீன்கள்
அவன் கூடைகளில் நிறைகின்றன.
என் தாகத்துக்கான நீர்
அவன் கடைவாயில் ஒழுகுகிறது.
எனக்கான இறைச்சி
அவன் தொடைகளில் கொழுக்கிறது.
என்னுடைய பசிக்கும் சேர்த்து
அவன் வயிறு வளர்க்கிறான்.
என் குழந்தைகளின் புத்தகங்கள்
அவன் யாகத்தில் நெருப்பை சேர்க்கிறது.
என் இரைப்பை
அவன் கால் கட்டை விரலில்
எடறிக்கிடக்கிறது.
நின்றபடி குனிந்து பார்க்கிறான்
பார்வை தரை சேரவில்லை
அப்போது
கடந்து செல்லும் குடிமகனின்
தானியங்கள்
அவன் கண்களை
உறுத்த தொடங்குகிறது .
-ஸ்டாலின் சரவணன்
தமுஎகச மற்றும் ஆனந்தாயி கலை இலக்கியப் பயிலகத்தின் வெளியீடான “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து.