ஸ்டான் சாமி: பழங்குடி மக்களின் அறப்போராளி
நூலாசிரியர் : டாக்டர் பிரகாஷ் லூயிஸ்
விலை : ரூபாய் 300/-
வெளியீடு: சவுத் விசன் புக்ஸ்
தொடர்பு எண்: 9445318520
“பழங்குடி மக்களின் அறப்போராளி ஸ்டான் சாமி”
நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சாமியின் மூன்றாவது நினைவு தினம் 05.07.2024
‘தேசிய வளர்ச்சி’ என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஆதிவாசி பழங்குடி மக்களை தங்களது நிலங்களில் இருந்தும் வாழ்விடங்களிலிருந்தும் அப்புறப்படுத்துவதை கையாண்டது இந்திய அரசு.
இந்திய அரசு ஆதிவாசிகளை ஆதார வளங்கள் அற்றவர்கள் ஆக்கியது. வீடட்டவர்களாக ஆக்கியது. மிக மோசமான வறுமைக்கு தள்ளியது இந்திய அரசு.
ஆதிவாசிகளின் ஆதார வளங்களை, வாழ்விடங்களை, பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது இந்திய அரசு. எதிர்த்து நின்றவர்களை காவல்துறையினரால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வனத்துறை மூலம் பொய் வழக்கு போட்டு சிக்கலை உருவாக்கினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை நக்சல்கள் என்று முத்திரைகள் குத்தியது பாதுகாப்பு படைகள். அம்மக்களை கொடூரமாக கொல்லப்பட்டதோடு பாலியல் வன்புணர்கள் செய்வதையும் தொடர்ந்து செய்து வந்தார்கள்.
கருத்துரிமைகள் மீதும், மனித உரிமைகள் மீதும், மனித கண்ணியம் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட அருட்தந்தை ஸ்டான் சாமி, ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு அவர்களின் உரிமைக்காக போராடி வந்தார்.
ஆதிவாசி பழங்குடியின மக்கள் விடுதலைகளத் தேடி வெளி உலகத்திற்கு வந்தனர். சமூக மாற்றத்திற்கான மார்க்சியத்தையும் இறையியலையும் இணைத்து ஒரு விவாதத்தை தொடங்கினார் அருட்தந்தை ஸ்டான் சாமி.
ஸ்டான் சாமியின் செயல்பாடுகள் அரசுக்கும் இந்துத்துவா சித்தாந்தவாதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
வனத்துறையும், காவல்துறையும் ஆதிவாசி மக்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை எதிர்த்து போராடியதோடு, சட்டபூர்வமான, ஜனநாயக பூர்வமான தலையீடுகள் செய்தார் ஸ்டான் சாமி.
நீதிமன்றங்களிலும் அதிகார அமைப்புகளிலும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்ததோடு ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார் ஸ்டான் சாமி.
நீதியின் மீதும் நல்லிணக்கம் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார் அருட்தந்தை ஸ்டான் சாமி.
ஆனால் அரசு அருட்தந்தையை மாவோயிஸ்ட், நக்சல்வாதி என முத்திரை குத்தியது.

கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகள், ஆதிவாசிகளின் அரசியல் சாசன உரிமைகள், சட்ட ரீதியான பாரம்பரிய உரிமைகள் போன்றவற்றிற்காக தொடர்ந்து போராடிய போராளி அருள் தந்தை ஸ்டான் சாமி மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ட(UAPA) த்தின் கீழ் கைது செய்து 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சிறையில் அடைத்தது இந்திய அரசு.
மிகவும் நெரிசலானதும் போதுமான மருத்துவ வசதியற்ற சிறைச்சாலையில் ஸ்டான்டசாமி அடைக்கப்பட்டு கொடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அருட்தந்தையின் மருத்துவக் கோரிக்கையை நீதிமன்றமும் புறக்கணித்தது. என் ஐ எ அமைப்பும் மருத்துவ சிகிச்சைக்கு மறுப்புத் தெரிவித்தது. உடல்நிலை மிகவும் மோசமானதால் 2021 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி 1:30 மணிக்கு அருட்தந்தை ஸ்டான்டசாமி காலமானார்.
சிறைச்சாலைகளில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் கண்டித்து பெரும் போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தினர். இது இந்திய அரசு செய்த ஒரு நிறுவன படுகொலையாகும்.
இந்த நூலினை இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.
இந்த நூல் பழங்குடி ஆதிவாசி மக்கள் சந்தித்த பிரச்சனைகளை அலசியதோடு இன்றைய தலைமுறையினருக்கு அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். பிரச்சனையின் வரலாற்று வேர்களையும் அலசி ஆராய்ந்து உள்ளார்கள்.
இந்நூல் ஸ்டான் சாமியின் வாழ்க்கை சுருக்கம், அவர் பங்கெடுத்துக் கொண்ட போராட்டங்கள், பிரச்சனைகள், ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கானபல்வேறு சட்ட விதிகள், ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், அருட்தந்தையின் கைதும் மரணமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஆதரவுகள், இந்துத்துவ அமைப்புகளின் தாக்குதல்களும் பதிலடியும் இது போன்ற ஏராளமான தகவல்களை பதிவு செய்துள்ளார்கள்.
இன்றைய இளைஞர்கள் அவசியம் இந்நூலிநை வாசித்தறிய வேண்டும்
இந்நூலினை தமிழில் பதிப்பித்துள்ள சவுத் விஷன் புக்ஸ் நிறுவனத்தாருக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

