என்னுடன் நிற்க: ஒரு விவசாயியின் பாடல் | ஆங்கிலத்தில் : அலோக் பல்லா | தமிழில் : வசந்ததீபன்பணக்கார நீதிமன்ற உறுப்பினர்கள்
அவர்களுடன் நிற்கிறார்கள்
செங்கல் சுவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள்

முள் கம்பிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள்
போலீஸ் தடியடிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள்.

நபிமார்களும் பார்வையாளர்களும் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள்
ரவிதாஸ், கபீர் மற்றும் ஃபரித் ஆகியோர்
எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள்
நானக் ஷா ஃபக்கிரி
எனக்கு ஆதரவாக நிற்கிறார்
நமதேவ் மற்றும் தன்னா
என்னை அறிவார்கள்
என்னுடன் நிற்கவும்,
எனக்கு ஆதரவாக நிற்கவும்…
அவர்கள் என்னை மதிக்கிறார்கள்,
அவர்கள் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

கலப்பை மற்றும் உழவுசால்
எனக்கு ஆதரவாக நிற்கின்றன
மண்ணாலான அடுப்பங்கரை
மற்றும் மரவிறகு
எனக்கு ஆதரவாக நிற்கின்றன
களிமண் கட்டி மற்றும் கூழாங்கல்
எனக்கு ஆதரவாக நிற்கின்றன
கோதுமையின் தண்டு,
நெல்தானியம்
எனக்கு ஆதரவாக நிற்கின்றன
மரங்களின் நிழல்கள்
மற்றும் இலைகளின் பச்சை
எனக்கு ஆதரவாக நிற்கின்றன.

அவர்களின் வார்த்தைகள் கல்
அவர்களின் நாக்குகள் பித்தளை
அவர்களின் சட்டங்கள்
தங்கக் கம்பிகள்.

என் தேவைகள்
வேர்களைப் போலவே தீவிரமானவை
எனது பாடல்கள் கலைத்துவமற்றவை (கபடற்றவை) மற்றும்
நிராயுதபாணியானவை
என் மதங்கள் கடினமானவை மற்றும்
காற்று வீசும்…
எனக்கு ஆதரவாக
நிற்க வாருங்கள்
எனக்கு ஆதரவாக நில்லுங்கள்.

என் கைகள்
சூரிய ஒளியின் வரைபடங்களைச்
சுமக்கின்றன
என் கண்கள்
பறவைகளின் பறத்தலை
நிறைவு செய்கின்றன
எனக்கு ஆதரவாக
நிற்க வாருங்கள்
எனக்கு ஆதரவாக நில்லுங்கள்.

எனக்கு ஆதரவாக நில்லுங்கள்
மழை பெய்யும் வரை
எனக்கு ஆதரவாக
நிற்க வாருங்கள்
எனக்கு ஆதரவாக நில்லுங்கள்
எனக்கு ஆதரவாக
நிற்க வாருங்கள்
மழை பெய்யும் வரை.

 

ஆங்கிலத்தில் : அலோக் பல்லா

தமிழில் : வசந்ததீபன்