இந்திய கட்டமைப்பு உயிரியல் துறையின் வித்தகர் எஸ். ராமஸ்வாமி (Structural Biology Indian Scientist Dr. Ramaswamy Subramanian)
தொடர் 84: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
ராம்ஸ் என்று அறிவியல் உலகில் பிரபலமாக அறியப்படும் டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) கட்டமைப்பு உயிரியல் என்னும் துறையை சேர்ந்தவர் பெங்களூரு ஐயோ கிளஸ்டர் சென்டர் ஃபார் செல்லுலார் மற்றும் மாலிக்குலர் பிளாட்பார்ம் என்று அழைக்கப்பட்ட C-CAMP ஆய்வகத்தின் நிறுவன தலைவர் மற்றும் இயக்குனராக 2016 வரை பணியாற்றி ஏராளமான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அர்ப்பணித்தவர். இவரது கரப்பான் பூச்சி புரதம் என்கிற முக்கியமான ஆய்வு உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சுப்ரமணியம் ராமஸ்வாமி கோயம்புத்தூரில் 1964 ஆம் ஆண்டு பிறந்தார். வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் எடுத்து படித்தார். இந்திய அறிவியல் கழகம் பெங்களூருவில் பேராசிரியர் எம்.ஆர்.என் மூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில் மூலக்கூறு உயிரியல் மற்றும் இயற்பியலில் ஒரு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் கழகத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) சார்ந்திருக்கும் துறை உயிரியல் கட்டமைப்பு துறை என்று அழைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக புரத படிக்கவியல் துறையைச் சார்ந்தவராக விஞ்ஞானி ராமஸ்வாமி உள்ளார். உயிரியல் மூலக்கூறு கட்டமைப்பு தகவல் துறை சார்ந்த பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். inSTEM என்று அழைக்கப்படும் ஆய்வகம் ஒன்றை தானே வழிநடத்தி உருவாக்கி சிறப்பாக அங்கு தன்னுடைய ஆய்வு மாணவர்களோடு இணைந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆய்வகம் பர்டு பல்கலைக்கழகத்திலும் இந்தியாவிலுமாக நிறுவப்பட்டுள்ளது. இது ஸ்டெம் செல் உயிரியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம் சம்பந்தப்பட்டதாகும்.

InSTEM ஆய்வகம் அமெரிக்கா ஸ்வீடன் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சி குழுக்களுடன் இணைந்து திட்டங்களை இயக்குகிறது. என்சைமாலஜி தொடர்பான ஆய்வு பணிகளுக்காக டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) உலகமெங்கும் இன்று பிரபலமாக பேசப்படுகிறார். குறிப்பாக கரப்பான் பூச்சி புரதம் பற்றிய இவரது ஆராய்ச்சி அறிவியல் சமூகம் மற்றும் ஊடகங்களில் மிகப் பிரபலமாக உள்ளது. ராம்ஸ் கரப்பான்பூச்சி புரத்தை ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறார். ஏனெனில் அதன் அதிக கலோரி உள்ளடக்கம் மற்றும் புரதத்தின் கட்டமைப்பில் உள் பொதிந்து உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற அத்தியாவசியமான உயிர் மூலக்கூறுகள் மனிதன் உட்கொள்ளும் வகையில் மாற்றப்படும் பொழுது எருமை பாலில் உள்ள ஆற்றலை விட மூன்று மடங்கு அதிக ஆற்றலை தரும் என்று அவருடைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ராமஸ்வாமியின் ஆய்வின்படி 100 கிராம் கரப்பான் பூச்சியில் 65.6 கிராம் புரதம் உள்ளது. அதில் கச்சா கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சாம்பல் சத்தும் உள்ளது கரப்பான்பூச்சி பால் (Cockroach Milk) என்று அழைக்கப்படுவது ஒரு மஞ்சள் நிற திரவம் ஆகும். இதில் புரதம் அமினோ அமிலங்கள் ஆரோக்கியமான சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் அடங்கியுள்ளதாக ராமஸ்வாமியின் கண்டுபிடிப்பு உலகிற்கு அறிவித்தது. கரப்பான் பூச்சிகளில் இது கருப்பையை போன்ற அடைகாக்கும் பையால் சுரக்கப்படுகிறது. மேலும் கரப்பான் பூச்சிகளின் வயிற்றில் படிகங்களாக இவை திடப்படுத்தப்படுகின்றன. ஒற்றை பால் படிகமானது வழக்கமான மாடுகளின் பாலை விட அதிக ஆற்றலை கொண்டுள்ளது என்பது ராமஸ்வாமியின் கண்டுபிடிப்பு.
இந்த வகை உணவை, எளிதாக ஒருவர் உற்பத்தி செய்து விட முடியும் உலகெங்கிலும் உள்ள உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒரு மாற்று வழியாக பஞ்சம் ஏற்பட்ட பகுதிகளில் இதை அறிமுகம் செய்ய முடியும். சிறிய அளவு மற்றும் நிலைத்தன்மையினால் அதிக கலோரி உள்ளடக்கம் கொண்டிருப்பதால் இதை தற்போது விண்வெளி வீரர்களும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் விண்ணிற்கு சென்று ஆக்கிரமிக்க போகும் மனித வான் இடங்களில் உணவாக கண்டிப்பாக கரப்பான் பூச்சி புரதம் மட்டுமே இருக்க முடியும் என்பது டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) ஆய்வு குறிப்பு ஆகும்.

அது என்ன கரப்பான் பூச்சி புரதம்? ராமஸ்வாமி கரப்பான் பூச்சியின் உடலிலுள்ள ஒரு விநோத புரதத்தை மரபணு கட்டமைப்புக்கு உட்படுத்தினார். உலகில் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் பூச்சி வளர்ப்பு துறையில் கரப்பான்பூச்சிகளை வளர்த்தெடுப்பது எனும் புதிய அற்புதத்தை அவர் நிகழ்த்தி காட்டினார். கட்டுப்படுத்தப்பட்ட வசதியான சூழல்களில் கால்நடைகளாக கரப்பான் பூச்சிகள் வளர்க்கப்பட வேண்டும். மிகப்பெரிய கட்டிடங்களில் சீனாவில் தற்போது மில்லியன் கணக்கான கரப்பான்பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன. இது விவசாயத்தை விட பெரிய தொழிலாக அங்கு நிலவுகிறது என்று சொன்னால் நம்புவது கஷ்டம்.
கரப்பான் பூச்சிகளை உணர்த்துவதற்கு முன்னே கொதிக்கும் நீரில் வாட்களில் போட்டு அவற்றைக் ஒன்று அவை பயன்படுத்தப்படும் நோக்கத்தை பொருத்து.. செயலாக்கத்திற்கு தயாரிக்கிறார்கள். கரப்பான்பூச்சி பால் என்று அழைக்கப்படும் COCKROACH MILK அறிஞர் டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) அறிமுகம் செய்த மாற்று உணவு மருத்துவ தொழிலில் பல வகை சத்து மருந்துகளின் தயாரிப்பில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கரப்பான் பூச்சிகள் புரதத்தின் மலிவான மூலம் இறைச்சி தொழிலுக்கு மாற்றாக முன் மொழியப்படுகிறது. அழகு சாதன நிறுவனங்கள் கரப்பான்பூச்சி இறக்கைகளின் செல்லுலோஸ் போன்ற உபரி பொருட்களை பயன்படுத்துகின்றன. ராமசுவாமி அவர்கள் கட்டுடைத்து உலகிற்கு அறிமுகம் செய்த கரப்பான்பூச்சி புரதம் இன்று புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் உட்பட பல புதிய சிகிச்சை முறைகளின் ஆராய்ச்சி சாத்தியங்களுக்கு மருந்து நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. கரப்பான் புரதங்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு எப்படி பயன்பட முடியும் என்பதற்கான ஒரு ஆராய்ச்சி கட்டுரையை ராமஸ்வாமி ஸ்கூல் ஆஃப் ஃபார்மேஸீ அண்ட் கெமிஸ்ட்ரி இதழில் வெளியிட்டார்.

கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சீனாவில் மில்லியன் கணக்கான மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சீன அரசாங்கத்தின் அறிக்கையின்படி 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கதிர்வீச்சு புற்றுநோயிலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அணுகுண்டு வீசப்பட்ட பகுதிகளில் ஜப்பானில் எல்லா உயிரினமும் அழிந்த பிறகும் அழியாமல் மிச்சமிருந்த ஒரே பூச்சியினம் கரப்பான் பூச்சி இனம் தான் என்கிற ஒரு வரலாற்றின் பின்னணியில் தான் டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) கரைப்பான்களில் புரதங்கள் குறித்த தன்னுடைய ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்பது வரலாறு.
இந்தியாவில் பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் உயிரியல் மட்டும் மீள் உருவாக்கம் மருத்துவ நிறுவனம் ராமஸ்வாமின் வழிகாட்டுதலின் பெயரில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கரப்பான் பூச்சிகளை அவற்றின் உணவுத் தேவைகளுக்கான சாதியங்களுக்காக வளர்த்து வருகிறது. பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த வண்டு கரப்பான்பூச்சி என்கிற DIPLOPTERA PUNCTATA வகை உயிரினம் ஒரு படிகம் போன்ற பாலை உற்பத்தி செய்கிறது. இந்த வகை படிவத்தை ராமஸ்வாமி சாத்தியமான சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறார்.

தேவையில்லாமல் வீசி எறியப்படும் அழுகிய காய்கறிகளை உணவாக உட்கொள்ள கூடிய எளிதில கிடைக்க கூடிய மிக மலிவான உயிரினமாக கரப்பான் பூச்சிகளை விவசாயிகள் பார்க்கிறார்கள். அவற்றை வளர்ப்பதும் எளிது, அதே சமயத்தில் லாபகரமானது என்பது சீனாவின் விவசாயிகள் வெளியிட்டிருக்கும் மனப்பாங்கு என்று டாக்டர் எஸ். ராமஸ்வாமி குறிப்பிடுகிறார். உள்ளூர் உணவகங்களில் இருந்து கிடைக்க கூடிய உருளைக்கிழங்கு மற்றும் பூசணிக்காயை உரித்தல் போன்ற பிற தொழில்களின் கழிவு பொருட்களை எங்களுக்கு கொடுங்கள் என்று அந்த விவசாயிகள் கேட்கிறார்கள். இந்த பூச்சிகளை சேகரிப்பதும் ஒப்பீட்டளவில் எளிமையான செயலாகும். வெகு எளிதில் தங்கள் கூடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பலவகையான சந்தை தயாரிப்புகளுக்காக கொதிநீரில் இட்டு வெயிலில் உலர்த்தப்படுகின்றன. பொதுவாக கோழிகள் உள்ளிட்ட உணவு பராமரிப்பில் வரும் நோய்கள் இவைகளை தாக்குவதில்லை. எனவே எதிர்காலத்தில் இந்த வகையான மாற்று கால்நடை விவசாயம் விரைவில் அறிமுகமாகும் என்பது டாக்டர் எஸ். ராமஸ்வாமி (Dr. Ramaswamy Subramanian) நம்பிக்கை.
மிக்ரோ மாலிக்குலர் படிகவியல் புரதம் மற்றும் செயல்பாட்டு துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த ராமஸ்வாமி 2000 ஆம் ஆண்டு கார்வர் மருத்துவ கல்லூரியில் ஐயோவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இணைந்தார். இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த மருத்துவ பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று, உயிரி இயற்பியல் என்று அழைக்கப்படுகின்ற ஒரு துறையில் வல்லுனராக இவர் போற்றப்படுகிறார், இதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி துறையின் டீனாக இவர் பதவி உயர்த்தப்பட்டார். ராமஸ்வாமியின் ஆராய்ச்சி கட்டுரைகள் பல சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. 2015ல் அவருக்கு உலக பிரசித்திபெற்ற UIRF கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

உயிரியல் துறையின் வித்தகர் ராமசாமி சுப்பிரமணி அவர்களின் கண்டுபிடிப்பு பரவசமூட்டும் வகையில் உள்ளது. நமது வீடுகளில் கரப்பான் பூச்சியைக் கண்டாலே அருவருக்கத் தக்க மனநிலையில் இருக்கிறோம். ஆனால் அது தரும் உயர்ந்த வகை புரதம் புற்று நோயை குணப்படுத்த கூடிய அளவிற்கும் உள்ளது என்ற கண்டுபிடிப்பை வாசிக்கும் போது இந்திய விஞ்ஞானிகளை போற்றுவோம். மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் பெண்கள் , வளரிளம் பருவத்தினருக்கும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கும் இது பே என்ற கண்டுபிடிப்புகள் மிகுந்த பயனளிக்கும் ! இது போன்ற அறிவியல் அறிஞர்களை பள்ளிகளில் அறிமுகம் செய்து அறிவியல் மனப்பாண்மையை வளர்த்திடுவோம்.! எடுத்தாளருக்கும் Bookday இணைய தளத்திற்கும் மிகுந்த நன்றி
Pingback: இந்திய நரம்பியல் விஞ்ஞானி Dr. சுபா டோலே