தற்கொலை மரம் (Sucide Tree) - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) | அறிவியல் கட்டுரைகள் (Tamil Science Article) - www.bookday,in

தற்கொலை மரம் (Sucide Tree) – ஏற்காடு இளங்கோ

நான் நவம்பர் 2024 ஆம் ஆண்டில் ஒரு தாவரத்தை முதன் முதலில் பெங்களூருவில் பார்த்தேன். அதன் பெயரைக் கேட்டபோது நர்சரில் உள்ளவர் இந்திப் பெயரைச் சொன்னார். பிறகு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள புல் தரையில் இது நடப்பட்டிருப்பதைக் கண்டேன். பிறகு பெங்களூரூ நகரின் பல இடங்களில் இது வளர்க்கப்படுவதைப் பார்த்தேன். இதில் பூக்கள் இல்லாததால் இதன் தாவரவியல் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். அடுத்த நாள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா அரங்க வளாகத்தில் இந்தத் தாவரத்தின் இரண்டு வகைகள் பூவுடன் இருப்பதைக் கண்டேன். பிறகு வள்ளுவர் கோட்டம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் இந்தத் தாவரத்தில் பூக்கள் இருப்பதைப் பார்த்தேன். பூக்கள் மிக அழகாக இருந்தன. அதன் பிறகே இதன் தாவரவியல் பெயரைக் கண்டுபிடிக்க முடிந்தது.

சிவப்பு பாங் பாங்

சிவப்பு பாங்-பாங் மரம் (Red Pong-Pong Tree) என்பது ஒரு அழகான சிறு மரமாகும். இதன் இலைகள் இளஞ்சிவப்பு அல்லது அடர் கரும்பச்சை அல்லது இளம் ஊதா பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு அல்லது இளம் ஊதா சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இதன் பூக்களிலிருந்து லேசான மணம் வீசும். ஆகவே இது அலங்காரத் தாவரமாக வளர்க்கின்றனர். இதன் பழம் சிவப்பு நிறம் கொண்டது. ஆனால் சாப்பிடக் கூடாது. இதன் விதை அதிக நச்சுத் தன்மைக் கொண்டது மற்றும் உயிருக்கு ஆபத்தானது. இதன் தாவரவியல் பெயர் செர்பெரா ஓடோலம் ரூபரா (Cerbera odollam rubra) என்பதாகும்.

தற்கொலை மரம்

இது ஒரு சிறு மரமாகும். இதை நான் முதன் முதலில் சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள விக்டோரியா பொது அரங்கத்தின் வளாகத்தில் பார்த்தேன். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களைப் பூர்வீகமாகக் கொண்டது. இதன் இலை அடர் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் பூ வெள்ளை நிறத்தில், சிறிய மஞ்சள் மையத்துடன் காணப்படும். இதிலிருந்து லேசான நறுமணம் வீசும். இதன் கனி பச்சை நிறத்தில் இருந்து சிவப்பாக மாறும். இது ஒரு சிறிய மாம்பழம் போல் தோற்றமளிக்கும்.

 

இதன் விதை மிகவும் நச்சுத் தன்மைக் கொண்டது. இதில் செர்பெரின் என்ற நச்சுப் பொருள் உள்ளது. இது இறப்புக்கு வழி வகுக்கிறது. இந்த விதை அடிக்கடி தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மடகாஸ்கரில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்துகிறது. ஆகவே இது தற்கொலை மரம் (Sucide Tree) என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செர்பெரா ஓடோலம் (Cerbera odollam) ஆகும்.

இது தமிழில் காட்டலரி என அழைக்கப்படுகிறது. இது கடலோர உப்பு சதுப்பு நிலங்களில் சிறப்பாக வளர்கிறது. இதன் பழம் மற்றும் தாவரத்திலிருந்து மரப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விதைகள் நச்சுத்தன்மைக் கொண்டிருப்பதால் உயிரியல் பூச்சிக்கொல்லிகள், பூச்சி விரட்டிகள் மற்றும் எலியைக் கொல்வதற்கான மருந்து ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இது அழகான தாவரம் என்றாலும், ஆபத்தைத் தரக் கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

📚 எழுதியவர்:

 – ஏற்காடு இளங்கோ

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *