சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு-ப‌.திருமாவேலன்- அரசியல் கட்டுரை -விகடன் பிரசுரம் – பக்கங்கள் -139 முதல் பதிப்பு  -2014

இந்த புத்தகம் எழுத பட்ட ஆண்டு 2014 அதற்கு ஏற்றது போலவே மகாத்மா முதல் மன்மோகன் வரை என்று ஆசிரியர் சொல்லிவிட்டதால் .  1947 இந்தியா  முதல்  2014 முன் நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஊழல்கள் பற்றி மட்டும் இந்த புத்தகம் பேசுகிறது.

புத்தகம் பற்றி

மொத்தம்  42 தலைப்புகளில்  கட்டுரை வருகிறது முதல் கட்டுரை இந்தியாவின் ஊழல் வரலாறை  சொல்கிறது . அதாவது கிழக்கிந்திய கம்பெனி வந்த நோக்கம் அவர்கள் இங்கு இருந்து அடித்த கொள்ளை அதற்கு அவர் கையாண்ட கொடூர தந்திரம் என்று பல விஷயங்கள் இதில் சொல்லி உள்ளது உண்மையில் பிரிட்டிஷ் வருவதற்கு முன்பு இருந்த இந்தியாவும் அது விட்டு சென்ற இந்தியாவும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று தான் இருந்த போதும் பல சவால்களை தாங்கி  கொண்டு நாம் முன்னே வந்தாலும்  நம்முன் முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல் தான் கிட்டதட்ட  நேரு ஆட்சிக்காலம் தொடங்கி மன்மோகன் ஆட்சி வரை ஓவ்வொரு  ஆட்சியிலும் ஓவ்வொரு ஊழல் என்ன எனப்தையும் அதை அம்பல படுத்தியது யார்  பற்றிய வரலாறும் இதில் இருக்கிறது.

இந்த புத்தகம் சுவாரசியம் நிறைந்த பல தகவல்கள் இருக்கிறது குறிப்பாக நேரு
பெரோஸ் காந்தி இடையே நிகழ்ந்த பாராளுமன்ற உரையாடல் , மற்றும் இந்திரா மொராஜ் தேசாய் இடையே நடந்த பனிப்போர் , எமெர்ஜெனசி போது இந்தியா பட்ட கஷ்டங்கள் அதில் தமிழகத்தின் பங்கு , என்று நிறைய தகவல்கள் இருக்கிறது அது போல காங்கிரஸ் , பிஜேபி  என்று இருகட்சிகளிலும் ஆட்சிகளிலும் நிகழ்த்த தவறுகள் ஊழல்களை இது சொல்கிறது .இந்த புத்தகம் படித்து விட்டு நிறைய தகவல்கள் கிடைப்பது போல நிறைய கேள்வியும் எழுகிறது.அது போல உங்களுக்கும் எழ வாய்ப்பு இருக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *