இந்தியாவின் முதல் பெண்ணிய அறிவியல் புனைக்கதை நூல் என்றும் ஆசியாவிலேயே இதுதான் முதல் படைப்பு என்ற கருத்தும் கொண்ட நூல் தான் இது. 1905ல் இந்தியன் லேடீஸ் மேகசின் என்னும் இதழில் வந்த கதை தான் இது.
அப்பவே மேகத்திலிருந்து நேரடியாக தண்ணீர் பிடிக்கும் சிந்தனை, சமையலுக்கு சூரிய ஒளி என்று சிந்தித்த பெண்ணியச் சிந்தனையாளர் தான் ரொக்கேயா பேகம். 1926ல் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் வங்காளப் பெண்கல்வி மாநாட்டில் ரொக்கேயா பேகம் அவர்கள் பேசிய வார்த்தைகளே சாட்சி அவர் எவ்வளவு முற்போக்காக அப்பவே சிந்தித்திருக்கிறார் என்பதற்கான அடையாளம். அவர் பேசிய வரிகள் இதோ –
“கடந்த 22 ஆண்டுகளாக, இந்தியாவின் மிகவும் பாவப்பட்ட ஜீவன்களுக்காக நான் அழுதுகொண்டிருக்கிறேன். அந்த ஜீவன்கள் யாரென்று உங்களுக்குத் தெரிகிறதா? ஆம், இந்தியப் பெண்கள்தான், ஒரு நாய் அடிபட்டால் கூட அதற்காக வருத்தப்படும் அமைப்புகள் உள்ளன. ஆனால் நம்மைப் போல் வீட்டிற்குள்ளே அடைபட்டிருக்கும் பெண்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தக் கூட எவருமில்லை”.
அப்படிப்பட்டவர் தான் கனவு காண்பது போன்ற சிந்தனையுடன் அன்றைய ஆணாதிக்க சமூகத்தில் எப்படி மாற்றுச் சிந்தனையாக பெண்கள் சுதந்திரமாக வாழ்வது போன்ற தனது கனவின் வழியே இக்கதையை எழுதியிருப்பார். குழந்தைகள் வாசிக்க என்றிருக்கும் இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். மிகவும் அழகாக தமிழில் மொழிப்பெயர்த்த தோழர் #திவ்யாபிரபு அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
மேற்கு வங்கத்தில் பிறந்து பெண் கல்விக்காக போராடிய நூற்றாண்டு கண்ட பெண்ணியச் சிந்தனையாளர் ரொக்கேயா பேகம் அவர்களின் சிந்தனையை அனைவரும் வாசிப்போம் தோழர்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல்
நூல் : “சுல்தானாவின் கனவு”
ஆசிரியர் : ரொக்கேயோ பேகம்
தமிழில் : திவ்யா பிரபு
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் [பாரதி புத்தகாலயம்], ஓங்கில் கூட்டம்
தொடர்புக்கு : 44 2433 2924, https://thamizhbooks.com/product/sultanavin-kanavu/
ஆண்டு : டிசம்பர் 2022
விலை : ரூ.55
எழுதியவர்
இரா. சண்முகசாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.