Sundar Sarukkai's Siruvargalukkaana Thaththuvam Book Review by Vincent Soundaram. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: சுந்தர் சருக்கையின் ♥சிறுவர்களுக்கான தத்துவம்♥



சிறுவர்களுக்கான தத்துவம் என்ற நூல் சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தத்துவம் என்றவுடன் பிளேட்டோவிலிருந்து டெகார்ட் வழியாக பெர்ட்ரண்ட் ரசல் வரையிலும், இயற்கைவாதம் முதல் இருத்தலியல் வரையிலும் தத்துவத்தை சிறுவர்களுக்கு விளக்கும் நூலாக இருக்கும் என்று நினத்து இது எப்படி சாத்தியாகும் என்று நான் ஐயப்பட்டேன். வாழ்க்கையின் பொருள் பற்றிய கருத்துகளையும் நம்பிக்கைகளையும் ஆராய்வதும், எப்படி நடக்கவேண்டும் என்று விதிகள் தருவதும் தத்துவம் என்று சொல்வார்கள். ஆனால் இது அவை பற்றியெல்லாம் நேரடியாக எதுவும் கூறாமல் சிறார்கள் சிந்திப்பதற்குத் தேவையான வழிகளை மறைமுகமாகக் கற்பிக்கிறது.

இச்சிறு நூல் எட்டு இயல்களைக் கொண்டது. முதல் இயல் பார்ப்பது பற்றிப் பேசுகிறது. பார்த்தல் என்பது உற்றுநோக்கலுக்கு இட்டுச் செல்லும் ஒரு வழி. பார்க்கும் பொருளையும் அதன் தன்மையையும் நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒரு பொருளைப்பார்க்கிறோம், அதற்கான சொல்லும் அதன் தன்மையும் அதன் அடையாளமும் நம்மை அறியாமலேயே நமது அறிவுப் புலத்திற்கு எட்டி விடுகிறது. எப்படி அது நமது சிந்தனையில் நிகழ்கிறது என்று நாம் சிந்தித்துப்பார்ப்பதில்லை. நாம் பார்ப்பதால் அந்தப் பொருள் இருக்கிறதா அல்லது பொருளுக்கும் நாம் பார்த்தலுக்கும் தொடர்பில்லையா என்று நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

ஆனால் சிறார்கள் இதைப் பற்றிச் சிந்திக்கக் கற்கும்போது சிந்தனை செய்வது எனும் செயல்முறையில் பயிற்சி பெறுகிறார்கள். இவ்வாறு பயிற்சி தருவது ஆசிரியரின் நோக்கம். பார்ப்பது சிந்திப்பதற்கு இட்டுச் செல்லும். பார்ப்பது மட்டுமல்ல, ஐம்புலன்களால் உணரப்படுபவையும் இதனைச்சாத்தியமாக்கும்.
அடுத்த இயலான சிந்தித்தலில் இதுபற்றிய விளக்கம் தரப்படுகிறது. நாம் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். எதைப்பற்றி ஏன் சிந்திக்கிறோம் என்று நம்மால் பின்னர் எண்ணிப்பார்க்கமுடியும். ஆனால் எப்படிச் சிந்திக்கிறோம் என்று பார்ப்பதும் நல்ல பயிற்சி என்று ஆசிரியர் கூறுகிறார். அறிதிறன் (metacognition) வளரும். மாம்பழத்தை எப்படிப் பறிப்பது என்ற ஒரு குழந்தையின் சிந்தனையைக் கொண்டு இதனை ஆசிரியர் விளக்குகிறார். சிந்தனையை எப்படி மேம்படுத்துவது என்று அவர் விளக்குவதைச் சிறார்கள் செயல்படுத்தமுடியுமா எனற கேள்வி எழுகிறது.

May be an illustration of text that says 'நீங்கள் இந்தப் புத்தகம் இன்னொரு மற்றுமொரு புத்தகம் இந்தப் பாடங்களை ஆழமாகப் ங்களைத் முயல்கிறது. நீங்கள் படிக்கும்போது எழுதும்போது. சிந்திக்கும்போது மொழியைப் பயன்படுத்தும்போது வரையும்போது நல்ல மனிதராக அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும். சிறுவர்களுக்கான தத்துவம் சிறுவர்களுக்கான தத்துவம் பேராசிரியர் தனது கந்தர் மாணவர்களிடம் கருதுகிறார் தத்துவத்தை பொருட்டு 'பிலாஸ்பர்ஸ்' வழியாக சிறுவர்களுக்கெனப் தத்துவப் பயிலரங்குகளை நடத்திவருகிறார் இதன் தொடர்ச்சியே சிறுவர்களுக்கான தத்துவம் 90789396-811397 www.ethirvellyedu.in ellyedu.in சுந்தர் சருக்கை குரியன் த.ராஜன்,'

படித்தல் இயல் எப்படி நாம் வாசிக்கிறோம் என்பதை விளக்குகிறது. சொல்லிலிருந்து வாக்கியத்திற்கும் வாக்கியத்திலிருந்து பத்திக்கும் வாசிப்பு படிப்படியாகச் செல்கிறது. வாசிப்பது எப்படி எனபதை ஆசிரியர் விளக்குகிறார். இதனை இன்னும் எளிமையாகப் பயிற்சிகளுடன் சொல்லியிருக்கலாம். வாசிக்கும்போது நம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டும் என்பதும் படித்தபின் படித்ததைப் பற்றிச் சிந்தித்து அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதும் இன்று மொழிபயிற்றுநர் வலியுறுத்துகின்ற யுத்திகள். விகுதிகளை விட்டுவிட்டுப் பொருள்தருகின்ற வார்த்தைகளை (content words) மட்டுமே நமது கண்கள் தேடுகின்றன என்பதை விளக்கும் ஆசிரியர் தெரியாத சொற்களின் பொருளை நாம் ஊகித்துக் கொண்டே செல்கிறோம் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
வாசித்தலின் அடுத்த நிலை எழுதுதல்.

எழுதும்போதுதான் வாசித்தல் மட்டுமல்ல சிந்தித்தலும் முழுமை பெறுகிறது. அடுத்து கணிதம், கலை, நல்லவராக இருத்தல், கற்றல் ஆகியவை இடம் பெறுகின்றன. கணிதம் பற்றி இன்னும் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கலாம். தத்துவத்தின் நோக்கமே நல்லவராக வாழ வழிகாட்டுதல் என்றால் இதுவரையில் நூலில் கற்றதன் பயனாக அது எப்படி இருக்கிறது என்பதை இன்னும் விரிவாக விளக்கியிருக்க்கலாம்.

நூலை த. ராஜனும் சீனிவாசராமானுஜமும் மிக எளிய நடையில் அருமையாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பாராட்டுகள். புத்தகம் நிறையப் படங்கள் உறுதியாகச் சிறார்களைக் கவரும். வளுவளுப்பான தாளில் சிறப்பான வடிவமைப்பில் நூல் கண்களைக் கவர்கிறது. வடிவமைப்பாளருக்கும் வெளியீட்டாளருக்கும் பாராட்டுகள். சிறுவர் மட்டுமல்ல பெரியவர்களும் படித்து மகிழவேண்டிய நூல். பெரியர்கள்தான் வாசிப்பார்கள் என்பது வேறு விஷயம்.

ச. வின்சென்ட்

சிறுவர்களுக்கான தத்துவம்
சுந்தர் சருக்கை
தமிழில்: த. ராஜன். சீனிவாச ராமானுஜம்
சிறுவர்களுக்கான தத்துவம்
பக்கம்: 96
விலை: ரூபாய் 300

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *