காற்றில் வரும் அனைத்து இசையைவிட
அன்னையே!
உன் தாலாட்டுப் பாட்டில் வரும் இசைக்காக
ஏங்குகிறேன்!
ஏனோ என்னைவிட்டுச் சென்றாயம்மா
தெரு ஓரத்திலே!
எனக்கு காது கேளாதென்றாயோ எனைபெற்ற
நேரத்திலே!
உனக்கு தோன்றவில்லையா மருத்துவ உலகின்
முன்னேற்றம்?
இன்றும் நீ வருவாய் என எண்ணினேன் கிடைத்தது
ஏமாற்றம்;
உடலில் கண்ட ஊனத்தை நீ எண்ணினாய்
குறையென்று,
அன்னையே உன்னைக் காட்டாத உலகத்தை நான் நினைக்கிறேன்
சிறையென்று…..