மனிதர்களின் பற்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்
அதிக பற்கள் கொண்ட மனிதர் – உலக சாதனை!
தஞ்சாவூரைச் சேர்ந்த கல்பனா பாலன் என்றபெண்ணுக்கு, வாயில் 38 பற்கள் உள்ளன. அதாவது ஒரு மனிதனுக்கு சாதரணமாக 32 பற்கள்தான் இருக்கும். அவருக்கு சாதாரண மனிதரைவிட 6 பற்கள் கூடுதலாக உள்ளன. அவருக்கு பதின்மவயதில் கூடுதலான பற்கள் வளரத் தொடங்கியது. இப்படி கூடுதல் பற்கள் உள்ள நிலையை ஹைப்பர்டோன்டியா (Hyperdontia) என்ற மருத்துவ நிலை என அழைக்கப்படுகிறது. இது உடலுக்கே தேவையில்லாத அதிகபட்ச பற்கள் வளரும் நிலையாகும்.
இப்போது அவருக்கு 27 வயது ஆகிறது. கல்பனா, ஒரு மனிதனின் வாயில் அதிக பற்கள் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதனை அவர், 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24ஆம் நாள், அன்று, கின்னஸ் உலக சாதனை என்றே பெற்றார்.
ஆண்களுக்கான இதே கின்னஸ் சாதனையை கனடாவைச் சேர்ந்த இவானோ மெலோன் என்பவர் 1919 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அவரது வாயில் 41 பற்கள் உள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த வி.ஏ. விஜயகுமார் என்பவர் அவரது வாயில் 37 பற்கள் இருந்ததிற்காக 2014 ஆம் ஆண்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு 5 அதிகப்படியான பற்கள் இருந்தன!
ஒரு மனிதருக்கு மிக மிக அதிகமான பற்கள்!
இந்தியாவின் பெங்களூருவில் வசித்த, 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனுடைய வாயில் 232 பற்கள் வளர்ந்திருந்தன. இது “Complex Composite Odontoma” என்ற ஒரு மருத்துவப் பிரச்சனை காரணமாக ஏற்பட்டது என மருத்துவர் கூறுகிறார். மருத்துவர் குழு ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்து அதன் மூலம் 232 பற்கள் அகற்றினார்கள். இது ஒரே மனிதருக்கு இருந்த அதிகபட்ச பற்கள் என்ற சாதனை ஆகும்.
மிகப்பெரிய பல் – உலக சாதனை!
அதிக நீளம் கொண்ட பல்
ஜெர்மனியின் டாக்டர் மேக்ஸ் லூக்காஸ் (Dr.Max Lukas), 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒரு நோயாளியின் வாயிலிருந்து 37.2 மி.மீ. (1.46 அங்குலம்) நீளமுள்ள பல்லை அகற்றினார்.
பொதுவாக, ஒரு மனிதனின் பல்லின் நீளம் 2-2.5 செ.மீ. அளவே இருக்கும். இந்த பல் அதைவிட 1.5 மடங்கு பெரியது.
2019ஆம் ஆண்டு, ஜெர்மனியில் ஒரு மனிதரிடம் 1.46 இன்ச் (3.7 செ.மீ.) நீளமான ஒரு பல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மனிதர்களுக்கு காணப்பட்ட மிகப்பெரிய பல் என்று உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் மத்திய பிரதேச மாநில டாக்டர். சௌரப் ஸ்ரீவத்சவ், 2020ஆம் ஆண்டில், 20 வயது மாணவர் ஒருவர் வாயிலிருந்து 39 மி.மீ நீள பல்லை அகற்றினார். ஆனால் இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவில்லை.
அதிக அகலம் கொண்ட பல்
சுவிட்சர்லாந்தில், 2021 ஆம் ஆண்டில், ஒருவரிடம், 1.68 செ.மீ அகலம் (0.68 அங்குலம்) உள்ள பல் அகற்றப்பட்டது. அதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு, 1.67 செ.மீ அகலம் உள்ள பல் சாதனைப் பட்டியலில் இருந்தது.
பழங்கால மனித இனங்கள்
பராந்த்ரோப்பஸ் போய்சி (Paranthropus boisei) என்ற 2,000,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித இனத்தில், பற்களின் அளவு, நவீன மனிதர்களை விட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது. 1959 ஆம் ஆண்டில் தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் மண்டையோட்டில், பற்கள் பெரியதாக இருந்தது. எனவே அதற்கு நட்கிராக்கர் (Nutcracker man) என்ற பெயரைச் சூட்டினர்.
பிறப்புக்கு முன்பே பற்கள் (Natal Teeth) & பிறந்த உடனேயே பற்கள் (neonatal teeth)
மேலே குறிப்பிட்ட இரண்டுமே கொஞ்சம் அபூர்வமானவைதான். சாதாரணமாக, குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்து 6-12 மாதங்களுக்குப் பின்னரே பற்கள் வளரத் தொடங்கும். ஆனால் 1,000 குழந்தைகளில் 1 குழந்தைக்கு பிறக்கும்போதே ஒரு அல்லது இரண்டு பற்களுடன் பிறக்கும்.
இது “Natal Teeth” என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அபூர்வம் சர்வதேச மருத்துவ குறிப்பின்படி, சில குழந்தைகள், 8-12 பற்களுடன் பிறந்ததாக பதிவுகள் உள்ளன. ஆனால் இவை பற்றி கின்னஸ் புத்தக பதிவு இல்லை.. சில குழந்தைகளுக்கு பிறந்து 30 நாட்களில் பற்கள் வெடிக்கும்.இது (Neonatal teeth) எனப்படுகிறது. பொதுவாக பிறப்பின் போதே இருக்கும் இந்த பற்கள் கீழ்த்தாடையில் முன் வெட்டும்பற்களாகவே உள்ளன. அரிதாக மேல்தாடையில் இருக்கும்.இதன் காரணி மரபணு என்றும் கூறப்படுகிறது. தாயின் சுகாதார நிலையும் கூட இதற்கு காரணியாகும். இவை பெரும்பாலும் மஞ்சள்/கருப்பு நிறத்தில் இருந்தால், அவை தானாகவே உதிர்ந்து விடும்.
பிரான்ஸ் நாட்டு சக்ரவர்த்தி நெப்போலியன் போனபர்ட்டுக்கு (Napoleon Bonaparte) பிறந்தபோது பற்களுடன் இருந்தார் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.மேலும், பிரான்ஸ் பேரரசர் லூயிஸ் xiv. பிரான்ஸின் முக்கிய தளபதி,மதத்தலைவர், கார்டினல் மஜாரின் ,மற்றும் ரோமானியர்களின் எதிரியான ஹன்னிபால் என்னும், கார்தேசிய மன்னனுக்கும் இவ்வாறே பிறக்கும்போதே பல் இருந்தது என வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. இவை எல்லாம் அவர்களின் அரசியல் ஆளுமை, நுண்ணறிவு, துணிச்சல் போன்றவற்றைக் காட்டும் குறியீடாக மக்கள் நம்பினர்.
உலகின் மிகபழமையான பல்
உலகின் பழமையான மனிதப் பல் என்பது சுமார் 560,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனிதப் பல். இது 560,000 ஆண்டுகள் பழமையானது. இது நியாண்டர்தால் மனிதன் (Neanderthal) காலத்திற்குட்பட்டது என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இது காணப்பட்ட மிகப்பழமையான மனித பல்லாகும்.
பல் தொடர்பான புராணக் கதைகள் & வித்தியாசமான சம்பவங்கள்!
மக்கள் பற்களை விநோதமானவையாகவும், மந்திர சக்தி கொண்டதாகவும், மற்றும் சாபம் தரக் கூடியதாகவும் கருதிக்கொண்டு பல புராணக் கதைகள் உருவாக்கியுள்ளனர். இவற்றில் சில வித்தியாசமான கதைகள் இதோ. புராணம் என்றாலே அது உண்மைச் சம்பவம் அல்ல என்றே பொருள்.
விஷ்ணு பகவான் – நரசிம்ம அவதாரத்தின் பல் கதை!
நரசிம்மர் என்பது மனித உடலும், சிங்கத்தலையும் கொண்ட ஓர் அவதாரமாக கருதப்பட்டது. அவர் அரக்கர் ஹிரண்யகசிபுவை அழிக்க தன் கூர்மையான பற்களால் வெட்டி கொன்றார்.இதனால், நரசிம்மரின் பற்கள் நீதியின் ஆயுதமாக கருதப்படுகிறது.இன்று கூட சில கோவில்களில் “நரசிம்மரின் பல்” என்று அழைக்கப்படும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன!
புத்தரின் பல்
இலங்கையில் ஒரு கோயிலில் கௌதம புத்தரின் பல் இருப்பதாக கூறப்படுகிறது. புத்தரின் (Gautama Buddha) பற்களில் ஒன்று இலங்கையில் உள்ள கோயிலில் உள்ளது. அந்த கோயிலின் பெயர் “தலைமணிப் பல் கோயில்” (Temple of the Tooth) என்பதாகும். இந்த பல் புத்தமதத்தில் மிக முக்கியமான புனிதப் பொருளாக கருதப்படுகிறது.இன்று இலங்கையின் கண்டி (Kandy) நகரில் உள்ள கோயிலில் புத்த பல் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை தரிசிக்க வருகிறார்கள். இதேபோல சிங்கப்பூரில் உள்ள கோயில் ஒன்றிலும் புத்தர் பல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
விநாயகரின் பல் (தந்தம்)
இவர் மகாபாரதத்தின் எழுத்தாளர் என்றும் கூறப்படுகிறது.விநாயகர் தனது ஒரு தந்தத்தை முறிக்க, அதன் நுனியில் இருந்து மகாபாரதத்தை எழுதினார் என்று புராணம் கூறுகிறது. இதனால் இவருக்கு இது “ஏகதந்தன்” என்ற ஒரு சிறப்பு பெயரை விநாயகருக்கு கொடுத்தது என்றும் கூறப்படுகிறது. இன்றும் “பழையதை தியாகம் செய்து புதியதை உருவாக்கும்” குறியீடாக விநாயகர் தந்தம் பயன்படுத்தப்படுகிறது.
ராகுவின் பல்
இல்லாத கோள்களான ராகு, கேது இருவரும் சூரியனை கிரகணத்தின் போது விழுங்கும் அரக்கர்கள் என்று புராணங்களில் கூறப்படுகிறது.ராகுவின் பல்லால்தான் சூரிய கிரகணம் & சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று புராணம் கதைப்பவர்கள் சொல்லுகின்றனர்.
யானையின் பல்லை பாதுகாக்கும் கோயில்கள்
இந்தியாவில், சில கோயில்கள் யானையின் தந்தத்தை வைத்து வழிபாடு செய்கின்றனர்.யானையின் பல் தெய்வீக சக்தியை தரும் என்றும் நம்பப்படுகிறது. வாழ்நாளில் அதிக செல்வம், ஆரோக்கியம் தரும் என்று கருதப்படுகிறது. கேரளாவில், சில விநாயகர் கோயில்களில் “தந்த பூஜை” என்று ஒரு சிறப்பு வழிபாடு இருக்கிறது.
வல்லபி மன்னனின் தங்க பற்கள் – மரபுச் சின்னம்!
இந்தியாவின் வல்லபி அரசன் (Vallabhi King) தங்கத்தால் செய்யப்பட்ட பற்கள் வைத்திருந்தார் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை ஐயமே. அவருக்கு பல் மாறும் வயதில் வழக்கமான பற்கள் இல்லை, அதனால் தங்கம் பதிக்கப்பட்ட பற்கள் வைத்தார். இதனால், அவர் “தங்க பல் மன்னன்” என்று அழைக்கப்பட்டார்.
சீனர்கள்
பழங்கால சீனர்கள், “மணி தந்தம்” (Dragon Tooth) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறப்பு பல் வைத்திருந்தனர். அவர்கள் நம்பிக்கை படி, அந்த பல் பாதுகாப்பை வழங்கும் என்று கருதப்பட்டது.
பழங்கால சாமுராய் வீரர்கள், தங்கள் உடலில் “மணிதந்தம்” வைத்திருந்தால் யுத்தத்தில் ஜெயிக்கலாம் என்று நம்பினர்!
ரஷ்யர்களின் நம்பிக்கை
பல்லை எரித்தால் அது சாபமாக மாறும் என்பது பழைய ரஷ்ய நம்பிக்கை பழைய ரஷ்யாவில், ஒரு மனிதனின் பல் எரிக்கப்பட்டால், அந்த மனிதன் மிகவும் கோபமடைவான் என்று நம்பப்பட்டது. இதனால், குழந்தைகளின் பல் விழுந்தால், அதை எரிக்காமல் புதைப்பார்கள். இது அந்த குழந்தைக்கு எதிராக யாரும் சூனியம் செய்ய முடியாதபடி பாதுகாக்கும் என்றும் கருதினர். பல் என்பது ஒரு உயிரின் சக்தியைக் கொண்டிருக்கும், அதனால் அதை எரித்துவிடக்கூடாது. பல்லை எரித்தால் அந்த மனிதனின் உடலில் கோப சக்தி பெருகும் என்று பழங்கால மக்கள் நம்பினர்.
பல்லும் சூனியமும்
பல் விழுந்தால் சூனியம் செய்து ஒருவரை மயக்க வைக்கும் மந்திரம் செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்தது. குழந்தையின் பல் குற்றசாட்டல் செய்வதற்கும், சூனியத்திற்கும் பயன்படும் என்ற நம்பிக்கை பழங்கால மக்களிடம் இருந்தது. பற்கள் மந்திர சக்தி கொண்டவை, ஒருவனின் அதிர்ஷ்டத்தை தரும் என்று பலரும் நம்பினர். புதைத்தால் பழைய பல் கரைந்து, புதிய பல் வலுவாக வளரும் என்பது நம்பிக்கை. பழங்கால காலங்களில், ஒருவரின் பல்லை வைத்து மந்திரம் செய்து அந்த மனிதனை வசமாக்கலாம் என்றும் நம்பினர். வழிபாட்டில், அந்த பல்லை எரித்து, அதன் சாம்பலால் மந்திரம் செய்து, ஒருவர் மீது சூனியம் செய்யலாம் என்று சிலர் எண்ணினார்கள். இதனால், பல நாடுகளில் பல் விழுந்தால், அதை உடனடியாக புதைக்கவும், காற்றில் போடவும் செய்வார்கள். எனவே குழந்தையின் பல் மாறும்போது, அதைப் புதைக்கவோ, நெருப்பில் எரிக்கவோ பழக்கம் இருந்தது.இதன் காரணமாக, எகிப்தியர்கள் பல் விழுந்தால், அதை பாதுகாப்பாக புதைக்கும் பழக்கம் கொண்டார்கள். அந்த நம்பிக்கைகள் காரணமாக, பல நாட்டினரும் வித்தியாசமான சடங்குகளை கடைபிடித்தனர்.
வித்தியாசமான பல் சம்பவங்கள், தேவதைகள் & சடங்கு கதைகள்!
பல் என்பது வெறும் உடலின் ஒரு பகுதிதான். இருப்பினும் கூட பல நாடுகளில் மந்திர சக்தி, அதிர்ஷ்டம், மற்றும் சூனியம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியே இருந்துள்ளன. இதோ, பல் பற்றிய சில வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் சடங்கு கதைகள்.
ராணியின் பல்லை பாதுகாத்த மக்கள்
ராணியின் பல்லைப் பாதுகாப்பது என்பது, ஒரு ஒரு பிரிட்டிஷ் மரபு ஆகும். பழைய இங்கிலாந்தில், ஒரு மன்னரின் (அல்லது ராணியின்) பல் மாறினால், அதைப் பாதுகாக்க ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவர். இங்கிலாந்தில், மன்னர்களின் பற்கள் நாட்டு செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ராணி எலிசபெத் I (Queen Elizabeth I) தனது பல் தேய்ந்துவிட்டதாக கவலைப்பட்டபோது, அவருடைய மருத்துவர் பள்ளிக்கோயிலில் ஒரு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதன்பிறகு, ராணியின் பல் நன்றாக வளர்ந்ததாக சில வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அதன் உண்மைத்தன்மை ஐயமே.!
ஆதி காலத்தில் மன்னர்கள் தெய்வீக சக்தி கொண்டவர்கள் என்று கருதப்பட்டனர். எனவே அவர்களின் பல்லும் மந்திர சக்தி கொண்டதாக கருதப்பட்டது. மன்னரின் பல் நழுவி விட்டால், அந்த அரசரும், நாடும் பெரும் சங்கடத்திற்குள்ளாகும் என்றும் நம்பப்பட்டது.
பல்லும் அதிர்ஷ்டமும்
பல்லை மந்திரம் செய்து பத்திரமாக வைத்திருந்தால், அது தனிநபரின் அதிர்ஷ்டத்தை மாற்றும் என்பதால், மக்களால் பாதுகாக்கப்பட்டது. சில நாட்டினர்கள் பல் விழுந்தால், அதை வைத்து எதிரிகளை துரத்துவதற்கு சூனியம் செய்தனர்.இன்றும் சில நாடுகளில் பல் விழுந்தால், அதை கோயிலில் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
- பழனி, திருச்சியில் உள்ள சில கோயில்களில் பல் விழுந்தால், அந்த பல்லினை கோயிலில் கொடுக்கலாம் என்ற ஒரு வழக்கம் உள்ளது.
- பழனி முருகன் கோயிலில், பல் விழுந்தவர்கள் தங்கள் பற்களை கோயிலில் வைத்து, பிரார்த்தனை செய்வதாக ஒரு வழக்கம் உள்ளது.
- திருச்சியில் உள்ள சில கோயில்களிலும் இதே போன்ற ஒரு வழக்கம் உள்ளது.
- சில சமயங்களில், மக்கள் தங்கள் பற்களை கோயிலில் வைத்து, கடவுளிடம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொள்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
- சில ஊர்களில் குழந்தைகளுக்கு பல் விழுந்தால், அந்த பல்லோடு ஒரு சிறு காணிக்கையை கோயிலில் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
பல்லைக் கடிக்கும் கல்லறை பிசாசு!
பழைய ஜெர்மனியில், ஒரு மர்மமான விஷயம் நடந்தது.
மரணமடைந்த ஒருவரின் கல்லறையில் இருந்து பல் கடிக்கும் ஒலி கேட்டதாக மக்கள் கூறினர். மக்கள் பயந்துபோய் , அந்த கல்லறையை தோண்டி பார்த்தபோது, சடலம் தானாகவே பல்லைக் கடிக்கும் நிலையில் இருந்தது. அவர்கள் நம்பிகையைப் பொறுத்தவரை, சடலம் ஒரு “நிஜ பிசாசு” ஆகவே மாறிவிட்டது. இதனால், அவர்கள் அந்த பற்களைக் குத்திவிட்டு, அதன் வாயை பூட்டினர். இதனால், “பல்லைக் கடிக்கும்” என்றால் அது ஒரு பிசாசாக மாறும் என்று நம்பப்பட்டது.இதன் காரணமாக, பல மரண சடங்குகளில் இறந்தவரின் வாயைக் கட்டுவதற்கான வழக்கம் உருவானது.
பல்லுடன் தொடர்புடைய மரபுசார் பொருட்கள்!
பல் கொண்டு செய்யப்பட்ட நகைகள்!
- பழங்கால மக்களின் பற்களை கொண்டு கழுத்தில், காதில் அணியும், ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- மெக்ஸிகோவில் உள்ள மாயன் நாகரிக மக்கள், தங்கள் பற்களுக்குத் தங்கம், இரத்தினம், நீலம்,கோமேதகம், வைரம் பதித்து அழகூட்டினர்.
- !நெப்போலியனின் பல் – உலகின் விலையுயர்ந்த பல்.பிரான்ஸ் நாட்டின் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) பற்களில் ஒன்று 2011-ல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டபோது, அதற்கான விலை $19,140 (சுமார் ₹15 லட்சம்) இருந்தது. இது பேரரசர் நெப்போலியனின் உடல் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்லாகும்.
- வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பல், ஐசக் நியூட்டனின் பல் ஆகும்.
- ஜார்ஜ் வாஷிங்டனின் செயற்கைப் பற்கள் (False Teeth) பற்றிய தகவல் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) சிறிய வயதிலேயே பல பற்களை இழந்துவிட்டார்.பொய்யான தகவல் – “அவருடைய பற்கள் முழுவதுமாக மரத்தால் செய்யப்பட்டவை” என்று ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது உண்மையல்ல.
திருடனும் கடவுள் பல்லும், கதை!
பழங்கால எகிப்தில், ஒரு கொள்ளைக்காரன் கோயிலில் நகைகள் கொள்ளை அடித்தான். ஆனால், கோயிலில் இருந்த தெய்வசிலையின் பல்லை (Divine Tooth) தவறவிட்டு சென்றான். அந்த பல் சூனிய சக்தி கொண்டது. எனவே அதனால், திருடனின் பற்கள் ஒன்றாக ஒன்றாக விழ ஆரம்பித்தன. இறுதியில், திருடனுக்கு எந்த பல்லும் இல்லாமல், அவன் உணவு கூட சாப்பிட முடியாமல் இறந்தான்.
எழுதியவர்:-
பேரா. மோகனா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பல்வேறு மூட நம்பிக்கள் உட்பட்ட அறிவியல் பூர்வம் இல்லாத இந்த பற்கள் பற்றிய துணுக்கு தோரணத்தால் நமது பற்களை எப்படி பராமரித்து பயன்பெறுவது ?? என்று அறிந்து மிகுந்த பயன் அடைந்தோம்.
பற்களைப் பற்றிய ஆச்சரியமான கதைகள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. பற்களுக்கும் மனித உடலின் உள் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு ,பற்களை பாதுகாக்கும் முறை மருத்துவ குறிப்புகள் போன்றவற்றையும்இக் கட்டுரையில் சேர்த்து இருக்க வேண்டும். அப்போதுதான் இக்கட்டுரை முழுமை அடைந்திருக்கும்.