கண்காணிப்பு முதலாளித்துவம் - சிந்துஜா | Surveillance Capitalism Based Article Written By Sinduja | www.bookday.in

கண்காணிப்பு முதலாளித்துவம் (Surveillance Capitalism) – சிந்துஜா 

கண்காணிப்பு முதலாளித்துவம்

– சிந்துஜா 

தமிழகத்தில் தேர்தல் சுடுப்பிடித்து வரும் 23ம் தேதி மக்கள் அனைவரும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி, தங்களுக்கான தலைவரையும் யார் தங்களை ஆட்சி செய்ய இருக்கிறார்கள் என்பதையும் நிர்நியிக்கும் மிக முக்கியமான தருணம்.

மக்கள் எல்லோருக்கும் தங்கள் தலைவரை தீர்மானிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் உங்களின் ஓரு விரல் புரட்சி, அடுத்த ஐந்தாண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் அரசியலையும் முன்னெடுக்க இருக்கிறது. ஓட்டு என்பதை ஏதோ செர்ப் பணக்களுக்கும்,நடிகர்களின் டலயக்களுக்கும்,மதவாத துண்டுதலுக்கும் ஆளாகாமல், அரசியல் புரிதலோடும், கொள்கை சார்ந்து இயக்கத்தையும்,வளர்ச்சியும் உள்ளடக்கிய உங்கள் ஓட்டு மட்டுமே அடுத்த தலைமுறைக்கான பாதையை உருவாக்கும்.

அதற்கும் நான் இப்போது பேச போகும் “கண்காணிப்பு முதலாளித்துவம்” என்பதற்கும் என்ன சம்பந்தம்? ஆம், சம்பந்தம் இருக்கிறது. முதலில், கண்காணிப்பு முதலாளித்துவம் என்றால் என்ன?

தனிநபர்களின் இணைய செயல்பாடுகள்,தேடல்கள் அவர்களின் நடத்தைகளையும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்காணித்து அந்த தகவல்களை அல்லது தரவுகளை லாபத்திற்காகப் பயன்படுத்தும் ஓரு நவீன பொருளாதார யுத்தி எனலாம்.

கண்காணிப்பு முதலாளித்துவம் என்ற வார்தையை முதன் முதலில் உருவாக்கியவர் ஹர்வர்டு பல்கலைகழக பேரராசிரியை ஷோஷனா சுபோஃப் (Shoshana Zuboff). இவர் எழுதிய “The Age of Surveillance Capitalism” புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இதைப்பற்றி பேசும் இவர், இது தொழிற்சாலை முதலாளித்துவத்திற்கு (Industrial Capitalism) மாறாக, மனித நடத்தையையே ஓரு மூலப்பொருளாக பயன்படுத்தி அதையே கட்டுபடுத்தி சுரண்டும் ஓரு அமைப்பாக ” Surveillance Capitalism” இருக்கிறது என்கிறார்.

கேம்பிரிட்ஜ் அனலாடிக்கா (Cambridge Analytica) போன்ற அரசியல் ஆலோசனை நிறுவனங்கள் பேஸ்புக்,கூகுள், இன்ஸ்டா போன்ற சமூக தளத்திலிருந்து பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி தரவுகளை திருடி (Data Scraping), அவற்றை தரவு சுரண்டலுக்கு (Data Exploitation) உட்படுத்தி இனையவழி அரசியல் பரப்புரையில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாமும் விதிவிலக்கல்ல.

இந்தியாவிலும் கடந்த (2014-19) தேர்தலில் நடந்த கள ஆய்வுகளில், குறிப்பாக வலுதுசாரிகட்சிகள் இம்மாதிரியான பெரும் நிறுவனங்களின் உதவி கொண்டு வாக்காளர்களின் தகவலை திருடி, அவர்களின் நடத்தை தரவுகளை (Behavioural targeting) ஆராய்ந்து தங்களுக்கு சாதகமான (Manipulating) விளம்பரங்களாக மாற்றி, பெருமளவிலான வாக்காளர்களை தன் வசப்படுத்தியும் நடந்தேறியது.

இப்படி கேம்பிரிட்ஜ் அனலாடிக்கா (Cambridge Analytical) போன்ற பெரு நிறுவனங்கள் மக்களின் தரவுகளை கையாள்வதில் 2024ல் தனது சிகரத்தை எட்டியுள்ளது . 2025ல் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மறைந்த மாபெரும் தலைவர்கள், அரசியல் பிரபலங்களின் போலி வீடியோக்கள் (Deepfake Videos) சமூக ஊடகங்களில் பரப்பட்டன. இது வாக்காளர்களின் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் “கண்காணிப்பு முதலாளித்துவத்தின்” ஓரு செயல் வடிவமாகவும் கருதப்படுகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் கூகுள்,பேஸ்புக்,இன்ஸ்டா போன்ற தளங்களில் இருந்து பயனர்களின் தரவுகள் அவர்களின் ஓப்புதலின்றி அறுவடை செய்யப்பட்டு, அதனை ஊளவியில் ரீதியான வணிக விளம்பரங்களும்,அரசியல் விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை Pyscographic targeting” எனப்படுகிறது. தனிநபர்களின் இணைய செயல்பாடுகளை அவர்களின் நடத்தையை (Behavioural targeting) முன் கூட்டியே கனித்து அரசியல் கருத்துகளை மாற்றும் கருவியாகவும் இந்த “கண்காணிப்பு முதலாளித்துவம்” செயலாற்றுகிறது.

தற்போது தமிழகத்தில் 2026ஆண்டிற்கான தேர்தலை சந்திக்க போகும் நாம், வெறும் பேஸ்புக்,இன்ஸ்டா,வாட்ஸ்அப் பில் பரிமாறப்படும் சமூகவலை தளங்களின் செய்தியை மட்டும் கொண்டு உங்களின் வாக்குகளை தீர்மானிக்காதீர்கள். அரசியல் தளத்தில் இணைய தளங்கள் மூலம் வாக்காளர்களின் முடிவையைத் தீர்மாணிக்கும் ” Micro targeting” தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா அமெரிக்க அரசு தேர்தலில் நடந்த சம்பவம் ஓரு எச்சரிக்கையாக பார்க்கப்பட்டாலும் 2026ல் கண்காணிப்பு முதலாளித்துவம் மேலும் முதிர்ச்சியடைந்து தனது கால்களை எல்லா துறையிலும் தடம் பதித்த வருகிறது. என்ன தான் தரவு பாதுக்காப்பு சட்டங்கள் இருந்தாலும்,புதிதாக சட்டங்களை கொண்டுவர முயன்றலும் போலி தகவல்கள் (Misinformation) மூலம் ஜனநாயக செயல்முறைகளை தகர்க்கும் முயற்சியும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இப்படி நம் கண்ணுக்கே தெரியாமல் நம்மை யாரோ ஓருவர் உளவு பார்த்து கொண்டியிருப்பதும்,நமது கருத்தைகளையும்,சிந்திப்பதையும் ,செயல்பாடுகளையும் மாற்ற முடியும் என்கிறது வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்கள். ஆக, உங்களது ஒவ்வொரின் வாக்கும் ஜனநாயகத்தை நிர்நியிப்பதில் பெரும் பங்குண்டு. ஆக குறைந்தப்பட்ச அரசியல் அறிவோடும்,கொள்கையாலும்,இயக்கத்தின் வேலைப்பாடுகளையும் அறிந்து நாளை உலகை அறிவார்ந்த சமூகமாக மாற்றும்.

📚 எழுதியவர்:

சிந்துஜா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *