ஆ.சூரியாதேவி எழுதிய ஐந்து தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Surya Devi Tamil Haiku Kavithai | ஆ.சூரியாதேவியின் ஹைக்கூ கவிதைகள் | www.bookday.in

ஆ.சூரியாதேவியின் ஹைக்கூ கவிதைகள்

ஆ.சூரியாதேவியின் ஹைக்கூ கவிதைகள்

*************************************************

1.

என்றோ கசக்கி எறியப்பட்ட காகிதங்கள்
குப்பையில் கண்டெடுக்க
மீண்டும் மலர்கின்றன கவிதைகள்

*************************************************

2.

வற்றிப்போன நதியின்
பிளவுற்ற கீறல்கள்
விரியும் முடிவில்லா தேடலாய்

*************************************************

3.

சிலைகள் சிரித்துப் பேசுகின்றன
சிந்தனையற்ற மனிதர்கள்
தன்னிடம் மண்டியிடுவது கண்டு

*************************************************

4.

கருவறைக் குழந்தையிடம்
கைநிறைய வளையல் ஓசையால்
உரையாடுகிறாள் அன்னை..

*************************************************
5.

பசித்திருக்கும் பக்தருக்கு
பழையதும் கிடைக்கவில்லை.
படையலாக. ருசிக்கும் பலகாரம் ..

*************************************************

எழுதியவர்:

✍🏻 – ஆ.சூரியாதேவி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *