சூரியாதேவி ஹைகூ கவிதைகள் - Suryadevi Haiku Poems - Poetry - Tamil Haiku -bookday - kavithaikal https://bookday.in/

சூரியாதேவி ஹைகூ கவிதைகள்

சூரியாதேவி ஹைகூ கவிதைகள்

1

குழந்தையொடு சேர்ந்து
எட்டுமேல் எட்டு வைத்து நடைபழக
கற்றுக்கொள்கிறது நடைவண்டி….

2

விண்ணில் இடிமுழங்க வந்து இறங்கிய
ஈரமழை அம்புகள் குத்திக் கிழித்த விதையிலிருந்து
புத்துயிர் பிறக்கின்றன பூமியில்.

 

3

இரவினை உறங்க வைக்க இசையமைத்து
பாடல் பாடுகின்றன
ரீங்காரமிடும் வண்டுகள்..

 

4

வேர்கள் ஏன் மேலே இருக்கின்றனவென்று
அப்பாவிடம் மகன் கேட்கிறான்
பட்டுப்போன மரத்தினைப் பார்த்து.

 

5

தொலைந்துபோன டைரி கிடைத்தது
புரட்டிப் பார்க்கின்றேன்
வார்த்தைகள் மட்டுமே வாழ்க்கை எங்கே?

6

நாற்று நடும் வயலில்
வியர்வையில் நனையும் விவசாயி
வீசிடும் தென்றலே ஏசி.

7

அருகருகே இருந்தும் கூட காணமுடியாது
பரிதவித்துப் போய் பார்த்துக் கொள்கின்றன
பாதரசக் கண்ணாடியில் கண்கள்…

8
தலைமேல் கொட்டும்போதெல்லாம்
குதூகலமடைகிறது மனம்
குளிர்ந்த நீரின் வருடல்…

எழுதியவர் :

சூரியாதேவி

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *