கைநிறைய
கரன்சி வழியும் மகனின்
வெளிநாடு திரும்புதலில்
வீடெல்லாம்
உவகைப்பூக்கள்.
தீபாவளி
பட்சணங்கள் நிறைத்தலில்
மகனை கேட்கிறாள்
பாசம் வழிய..
வறுமை சூழ்
அடுக்களையில்
அன்று செய்த
எண்ணெய் குறைவாய்
வார்த்த
உப்புமா வேண்டுகிறான்.
குறிப்பறிந்து
அதைக்கிண்டி
தட்டில் கொட்டி
அடிபிடித்த காந்தல்
ஏடுகளை
கண்ணீரோடு
தருகிறாள்.
இரும்புக்கடாயின்
சிறாய்ப்பில்
எடுத்த
காந்தல் ருசியில்
கட்புலன்கள்
கவிழ்ந்து போகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

