உழவனுக்கு உரித்தாக்குவோம் – சுசீலாமண்ணோடு வாழும்
மாந்தர்கள்
எங்கள் உழவர்கள்..

தன் வாழ்வையே
மண்ணுக்கு உரமாக்கும்
உத்தமர்கள்..

எங்கள் வயிறு நிரப்ப
வயக்காடே கதியென கிடக்கும்
கடவுள்கள் இவர்கள்..

விதை விதைக்க
தன் வியர்வையே பெரும்
சொத்தாய் விழச்செய்யும்
மண்ணுலக எம் மைந்தர்கள்..

அவர்களை
ஆயுளுக்கும் வாழ்த்துவோம்
வணங்குவோம்..