“சு”தந்திரம்…
இன்றைய நவீன இந்தியா , கார்ப்ரேட் இந்தியாவாக அசுர வளர்ச்சியாக தன்னை அனைத்து மட்டத்திலும் கோலூன்றி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கார்ப்ரேட் தனியார்த் துறையில் நேரடியாகவும் , அரசியலில் மறைமுகமாகவும் இருந்த நிலைமை மாறி இன்று மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் அவர்களின் வியாபாரமே இறுதி செய்கிறது. தனிமனித சுதந்திரம் அனைத்தும் தந்திரமாக வேட்டையாடப்படுகிறது. இந்தியாவின் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமை.
உணவு , பண்பாடு ,மொழி , கலாச்சாரம் , மதம் என பலதரப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றாக சகோதரத்துவத்துடன், மத நல்லிணக்கமாக , நட்பாக , இந்தியா என்ற ஒற்றை மந்திர சொல்லில் ஒன்றாய் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் , வாழ்வோம்……
இப்படிப்பட்ட நம்முடைய நீண்ட நெடிய வரலாற்று உண்மைகளை சிதைத்து, கார்ப்ரேட் நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், யாருக்காக , எப்படி வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் ஒரு செயற்கையான நடைமுறைகளை இயற்கையாக , நடைமுறை உண்மைகளாக , யதார்த்தமாக அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது
மக்கள் விரோத சட்டங்கள் , ஆட்சியாளர்களின் விதி மீறல்களை மக்களிடம் கொண்டு
செல்லும் ஊடகத்துறையில் நேர்மையாக வேலை செய்யும் ஒரு நபரின் மனசாட்சி, ஒரு ஜனநாயகத்தின் முதுகெலும்பாக , அடி நாதமாக இருக்க வேண்டிய ஊடகத்துறை, உண்மையை மக்களிடம் கொண்டு செல்லாமல், எந்த செய்திகளை வெளியிடவேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் கார்ப்ரேட்டிம் உள்ளதை வாசகர்களின் மனசாட்சியின் முன்பு திரையிடப்படுகிறது தந்திரம் சிறுகதை.
வந்தே பாரத்….
வந்தே பாரத் அனைத்து ட்ரைன் கலையும் விட எப்படி வேகமாக செல்கிறது, இதனுடைய கட்டணம் விமான கட்டணத்தை க்கு நிகராக இருப்பதும் , ஒரு
சாமானியனுக்கு எட்டா கனியாக உள்ளதை விவரிக்கிறது…
அனைத்திலும் டிஜிட்டல் இந்தியா என்று முழக்கமிடும் ஆட்சியாளர்கள், ஒரு திட்டத் தொடக்க விழாவை ஆன்லைனில் செய்யாமல், பல கோடி ரூபாய் செலவு செய்து நேரடியாக சென்று துவக்குவது மற்றும் அது ஒரு சாதனைப்போல் மக்களிடம் விளம்பரப்படுத்த செய்யப்படும் வீண் செலவுகளுக்கு பதில் மக்களுக்கு பயனுள்ளதாக செலவிடலாம்.
யேய் நீ ரொம்ப அறிவா இருக்க ……
மனிதன் மற்றும் ஏஐ உடன் ஒரு ஆரோக்கிய உரையாடல் மூலம் வாசகர்களிடம் உள்ள உணர்வைகளை தட்டி எழுப்புகிறது….
அறிவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது . ஆனால் அறிவை அப்படியே எல்லா
இடத்திலும் 100% செயல்படுத்த முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவை பயன்படுத்த அனுபவம் முக்கியம். ஏஐ (AI) தொழில் நுட்பம் அனைவருக்கும் பிரமிப்பை இன்று வழங்கலாம் ஆனால், இதுவும் கடந்து போகும் என்பதுதான் யதார்த்தம் . ஏஐ (AI) தொழில் நுட்பம் உருவாக்கியதே மனிதனின் அனுபவம் , முயற்சி , செயலின் விளைவே . ஏஐன் காலநிலை மாற்றம் , அவசர நடவடிக்கை தேவை – கட்டுரை , மனிதன் செயல்பட உதவி செய்கிறது ஏஐ அனுபவமே, அறிவை வெல்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
இவள் அதிகாரம் 1……
பேத்தியை நேரத்திற்குத் தூங்க வைக்க சொல்லும் மகளிடம், தன்னுடைய மகளை நேரத்திற்குத் தூங்க அறிவுரை சொல்லும் அப்பாவின் மனநிலை கொஞ்சம் கனக்கிறது. கதையில் ரோட்டோர பழ வியாபாரியிடம் பணம் கொடுத்த பழம் வாங்கும் நடிப்பு போலீஸ், சமூகத்தில் காசு கொடுக்காமல் ரோட்டோர கடைகளில் மாமூல் வசூலிக்கும் போலீஸ் அதிகாரிகளை வெக்கி தலைகுனிய செய்கிறார்.
தன்னுடைய 4 நாள் சம்பளம் 20,000க்கு வவுச்சர் ல சைன் வாங்கிக்கொண்டு மேனேஜர் 10,000 மட்டும் கொடுக்கும் போது , மீதி தொகை கேட்க டைரக்டர் கிட்ட போய் கேளுங்க என்று சொல்கிறார் மேனேஜர். இவள், டைரக்டரிடம் வந்து பார்க்கும் போது , அடுத்த நடிப்பு வாய்ப்பு பற்றி சொல்கிறார். அந்த நேரத்தில் தன்னுடைய சம்பள பாக்கியை தைரியமாக கேட்க அவரும் ஓரிரு நாட்களில் தருவதாக சொல்கிறார். புன்னகையுடன் இவள், அடுத்த ஷூட்டிங்க்கு தயாராகிறாள் வீர நடையுடன்.
சுரண்டல்கள் பல வடிவில் எங்கும் இருக்கிறது , நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ
அப்படியே நமக்கானதை பெற முடியும். ஒன்றிய தலைவர் (அ ) எட்டு மணி ராசா இன்றைய நடப்பு அரசியல் 100க்கு 100 சதவீதம் அப்படியே நேரடியாக , ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உவமைகளுடன் யார் மனதையும் புண்படாமல் தைரியமாக ஆசிரியர்
விவரிக்கிறார்…
சுதந்திரம் எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் ஒவ்வொன்றும் அருமையாக படிக்க படிக்க சுவாரசியமாகவும், தினந்தோறும் நாம் சாதாரணமாக கடந்து செல்லும் இன்றைய சமுதாய நிகழ்வுகளை நமக்கு நினைவு படுத்தி, நமக்குள் கேள்வி கேட்கிறார் ஆசிரியர் இவள் பாரதி
ஞா . ஆனந்தன்
காட்டுப்பாக்கம் , சென்னை – 56.
புத்தகத்தின் தலைப்பு : சுதந்திரம் (சிறு கதைகள் )
ஆசிரியர் : இவள் பாரதி
வெளியீடு : நம் பதிப்பகம்
விலை : ரூ . 180.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்