அறை முழுதும் மக்கள் இருந்தும்
ஒருவகை தனிமையின் ராகம்
நின்று நிதானமான காலடி சத்தமோ
ஆளரவத்தைக் கேட்கச் செய்ய
மேசையின் சிறு அசைவும் அதிர வைக்கும்
மின்விசிறிச் சத்தமோ வேகம் காட்ட
கற்றோடு இணைந்த கற்பனைக் கோடுகள்
வண்ணம் தொட்டு வரைகிறது
வெள்ளைத் தாள்கள் திருப்பும் நொடியோ
சிறகு விரிதலை எதிரொலிக்கிறது
இத்தனையும் படம்காட்டும் கைபேசியோ
சுயமியின்றி மயான அமைதியில் உள்ளது
அலைபேசியில் அழைத்தவர்கள்
அலுத்துப் போனார்கள்
ஆம் தேர்வறையில் இதைத் தவிர
வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்
எழுதியவர்
அனு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

