ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் "சோசலிசம் ஏன்?" தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் அட்டைப்படம், எஸ்.வி. ராஜதுரை மொழிபெயர்ப்பு, நூல் அறிமுகம் – எஸ். பாலா.

எஸ்.வி.ராஜதுரை தமிழில் மொழிபெயர்த்த “ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் “சோசலிசம் ஏன்?” – நூல் அறிமுகம்

“ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் “சோசலிசம் ஏன்?” – நூல் அறிமுகம்

ஏகாதிபத்தியத்தை உலுக்கிய ஐன்ஸ்டைனின் இடதுசாரி அரசியல் பக்கம்! – எஸ்.பாலா

நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனித குலத்தின் விடுதலைக்காகவும் சமத்துவத்திற்காகவும் களமாடிய மகத்தான இடதுசாரிச் சிந்தனை யாளர். 1933-ல் ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெர்லினில் இருந்த ஐன்ஸ்டீனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹிட்லரின் அமைச்சர் கோய பல்ஸ் நடத்திய புத்தக எரிப்பு நிகழ்வில் ஐன்ஸ்டீனின் படைப்புகள் எரிக்கப்பட்டதோடு, அவரைக் கொலை செய்பவருக்குப் பெரும் தொகையும் வெகுமதியாக அறிவிக்கப்பட்டது.

நாஜி ஜெர்மனியின் இந்தத் துரோகத்திற்கு இணையாக, அமெரிக்க ஏகாதிபத்திய உளவுத்துறையும் அவரது இடதுசாரி அரசியல் கருத்துக்களுக்காக அவரை எப்போதும் பின்தொடர்ந்து வேவு பார்த்தது. வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஐன்ஸ்டீனை ஒரு சோசலிஸ்ட்டாகக் காட்ட விரும்பாமல், வெறும் தாராளவாதியாக மட்டுமே சித்தரிக்க முயன்ற திரிக்கப்பட்ட வரலாற்றை உடைக்கிறது பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள ‘சோசலிசம் ஏன்?’ என்னும் நூல்.

உலகின் மிகச்சிறந்த மார்க்சிய இதழான ‘மன்த்லி ரெவியூ’ (Monthly Review) பத்திரிகையின் முதல் இதழில், 75 ஆண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டீன் எழுதிய புகழ்பெற்ற “சோசலிசம் ஏன்?” (Why Socialism?) என்ற கட்டுரையையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் மையமாகக் கொண்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தோழர் எஸ்.வி. ராஜதுரையின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இந்நூலில், ஜான் பெல்லமி ஃபோஸ்டர் எழுதிய ஆழமான முகப்புரை மற்றும் வரலாற்று முன்னுரை, ஐன்ஸ்டீனின் மூலக் கட்டுரை, ஜான் ஜே. சைமன் எழுதிய ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், புரட்சியாளர்’ என்ற கட்டுரை உள்ளிட்ட மிக முக்கியமான ஆவணங்கள் அடங்கியுள்ளன.

“புவிப்பரப்பில் தேனீக்கள் காணாமல் போனால் அடுத்த நான்கு ஆண்டு களுக்கு மேல் மனித இனம் இருக்காது” என்று சூழலியல் பேரழிவை அன்றே எச்சரித்த ஐன்ஸ்டீனின் மனிதகுலத்தின் மீதான அளப்பரிய அன்பை இந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருட்கள் எப்படி முதலாளியின் தனிச்சொத்தாக மாறுகின்றன என்பதையும், தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் ‘ஒரு சிலரின் ஆட்சி’ எங்ஙனம் உருவாகிறது என்பதையும் ஐன்ஸ்டீன் இந்நூலில் விஞ்ஞானப் பூர்வமாக விளக்கியுள்ளார்.

எலான் மஸ்க் போன்ற தனிநபர் கார்ப்பரேட்டுகளின் இன்றைய ஆதிக்கச் சூழலில் ஐன்ஸ்டீனின் இந்த எச்சரிக்கை அச்சு அசலாகப் பொருந்துகிறது. மனிதகுலம் அழிவிலிருந்து தப்ப சோசலிசமே ஒரே வழி என்றும், திட்டமிட்ட பொருளாதாரத்தோடு கூடிய மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பது குடிமக்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும்போது மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்றும் ஐன்ஸ்டீன் முழங்குகிறார்.

அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீனின் அசாத்தியமான அரசியல் சமூகக் கருத்தியல் பார்வையைத் துல்லிய மாக அறியத் தரும் இந்த நூல், சமத்துவப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கையில் ஏந்த வேண்டிய அரிய தத்துவக் கையேடாகும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் “சோசலிசம் ஏன்?”
ஆசிரியர்:மூலம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் | தொகுப்பு: ஜான் பெல்லாமி ஃபோஸ்டர் | தமிழில்:
வெளியீடு:
விலை:₹.100 (10% Discount Price ₹.90.00)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ்.பாலா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *