கவிஞர் தேன்மொழி தினைப்புலம் கவிதை Thinaipulam

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தினைப்புலம்” – அன்பாதவன்

    ‘இன்னதை தான் எழுதவேண்டும் ;இவற்றையெல்லாம் எழுதலாகாது’ –என எந்தவொரு படைப்பாளிக்கும் ஆணைப்பிறப்பித்தல் அபத்தம்; அதிகாரக்குரல்களை ஏற்பதே இல்லை, படைப்பாளிமனம் எனும் காற்று. பூமிப்பரப்புக்குள் அதிர்வேற்படில் நிலம்பிளக்கும்; உயிர் மனிதரையும், உயிரற்ற கான்கிரீட் கட்டடங்களையும் ஒரே விழுங்கு! முடிந்தது கதை!…