பாங்கைத் தமிழன் கவிதைகள்

பாங்கைத் தமிழன் கவிதைகள்


பாதையில்
சில மின்னல்கள்
******

1

எரியாத விளக்கு
பிரகாசமாய் வழி காட்டுகிறது
அருள் வாக்கு.

2

நெய் மணம்
வாழையிலைச் சோறு
பால் கறவா கரம்

3

பெண் தேவை விளம்பரம்
மகிழ்ச்சியடைய முடியவில்லை
உடையார் பெண்.

4

உள்ளதும் இல்லை
வலை தளம் உழன்று
மொழியின் அறிவு.

5

போவெனத் தள்ளும் உறவு
வாவென அழைக்கும் மரணம்
முதுமை.

6

கருப்பு மனம்
வெள்ளைக் கொக்கு
அரசியல் வாதி

7

வார வாரக் குப்பைகள்.
சோர்ந்துபோன
தூய்மைப் பணியாளன்

8

வழி விடச் சொல்கிறது இடி
வழி காட்டுகிறது மின்னல்
திகைத்து நிற்கிறது மழைநீர்