vilambarathattiyil veedu short story written by raman mullippallam சிறுகதை:விளம்பரத்தட்டியில் வீடு - இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை:விளம்பரத்தட்டியில் வீடு – இராமன் முள்ளிப்பள்ளம்

பழைய பெயர் ஆறு முக்கு. இதை ஏற்படுத்த ஏழு சாலைகள் தேவை. பல கிராம மக்கள் ஏழு திசைகளில் இருந்து வந்து நகரில் விளை பொருட்களை விற்றனர். நாளடைவில் அது பெரும் சாலையாகி, ரோடாகி இறுதியாக அபாய சிக்னலாக ஆனது. அபாயங்களை…
sirukathai thogupu : thangam vilai thakkaali vilai-raman சிறுகதை தொகுப்பு : தங்கம் விலை தக்காளி விலை-இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை தொகுப்பு : தங்கம் விலை தக்காளி விலை-இராமன் முள்ளிப்பள்ளம்

கலைஞர் கருணாநிதி நகர் ஏற்ற தாழ்வு அற்ற ஒரு பகுதி. குறிப்பாக நீங்கள் காணப் போகும் பின் வரும் நிகழ்வுகளை விருந்தாக அளிக்க கூடிய இப்பகுதி ஒரு சம தர்ம சமூகம். ஏனெனில் அங்கு எல்லோரும் சம அளவில் செல்வந்தர்கள். ஆனால்…
குரங்கு கரடி திருமணம் சிறுகதை -இராமன்  முள்ளிப்பள்ளம்

குரங்கு கரடி திருமணம் சிறுகதை -இராமன் முள்ளிப்பள்ளம்


 

குரங்கு கரடி திருமணம் 

 

அன்று அடர்ந்த காட்டின் மையத்தில் இருந்த நீதி மன்றத்தின் முன் பெரும் கூட்டம், அதில் பெரும்பான்மையினர் மாண்பு மிகு குரங்குகள் மற்றும் மாண்பு மிகு கரடிகள். ஏன் இவர்கள் மிகுதி என்றால் அன்றைய தீர்ப்பு இவர்களை குறித்ததே.

மிகச் சில வருடங்களாகவே ஒரு புதிய, முற்றிலும் புதிய உறவு முறை வால் தூக்கியிருந்தது. மனிதர்கள் எனில் தலை தூக்கியிருந்தது எனலாம் ஆனால் இது குரங்குகள் கரடிகள் பற்றியது. ஆகவேதான் வால் தூக்கிய பிரச்னை. இதை பெரிது படுத்தாதீர்கள். அங்காங்கே நின்று பேசாதீர்கள். பிரச்னை இதுதான், சில குரங்குகளும் கரடிகளும் சேர்ந்து வாழ்ந்தன. ஒரே மரத்தில் சேர்ந்து வாழ்ந்தன. அயல் நாட்டு மொழியில் கொல்வார்களே லிவ் இன், அதுதான். பின் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. ஏன் இந்த உறவு முறை திருமணமாக அங்கிரிக்கப்படக்கூடாது ? இது கேள்வியாக எழவில்லை. உரிமைக் குரலாக எழுந்தது.. 

சிங்க அரசன் கர்ஜித்து கட்டளை இட்டான், ‘’ நான் இந்த ஓரின சேர்க்கையை என் காட்டில் அனுமதிக்க மாட்டேன்’’ மந்திரி மான் அறிவுரை கொடுத்தான், ‘’மன்னரே குரங்கும் கரடியும் ஓர் இனம் அல்ல வேறு வேறு இனம்’’

‘’மந்திரி மானாரே தாங்கள் எனக்கு நூறு நாட்களுக்கு மந்திரி,அதன் பின் என் முந்திரி, உங்கள் அறிவுரை தேவைப்பட்டால் கேட்கிறேன் இப்போது வேண்டாம். மான் நடுங்கி போனான். சிங்கத்திடம் மந்திரி வேலைக்கு சேர்ந்து ஐம்பது நாட்களே ஆகியுள்ளன, இப்போது அவனுக்கு சினம் வரும்  வகையில் பேசினால் நூறு நாட்கள் மந்திரி சேவைக்கு பின் உண்பதற்கு பதிலாக இன்றே கொன்று சாப்பிட்டு விடுவான். ஆம் அந்த சிங்க மன்னன் ஒரு மானை மந்திரி பதவியில் அமர்த்துவான், நூறு நாட்கள் கழிந்ததும் அந்த மானை கொன்று புசித்து விட்டு வேறு மானை தேடுவான். மான் வாயை இறுக மூடிக் கொண்டது.

ஒரு குரங்கு கரடி இணையர் ஒரு நரி வழக்கறிஞரிடம் சென்றனர். அதன் ஆலோசனை கேட்டனர். நரியின் அறிவுரைப்படி நீதி மன்றத்தில் மனு செய்தனர். 

’’நாங்கள் இருவர்; முதலாமவர் அயோத்தி காட்டை பூர்வீகமாக கொண்ட குரங்கு, இரண்டாமவர் கிஷ்கிந்த காட்டை பூர்விகமாக கொண்ட கரடி எஙளுக்குள் காதல் மலர்ந்தது, ஒருமித்து ஒரே மரத்தில் வசிக்கிறோம், மணம் புரிய விரும்புகிறோம், சிங்க அரசன் கர்ஜித்து வெளியிட்ட கட்டளை நாங்கள்  மணமக்கள் ஆவதற்கு தடையாக உள்ளது ஆகவே கணம் நீதியரசர்கள் சிங்க அரசனின்  கட்டளையை செல்லாதது ஆக்க வேண்டும்.’’

அந்த மனுவின் மீது காட்டு நீதி மன்றத்தின் நீதியரசர்கள் எடுக்கப்போகும் முடிவை அன்று சொல்ல இருக்கிறார்கள். கூட்டம் எப்படி என்றால் மணல் போட்டால் விழுகாது. ஒரே ஆராவாரம், குரங்குகளின் கூவல்கள், கரடிகளின் ஓலங்கள். மற்ற எல்லா வகை விலங்குகளும் வந்து இரச்சலை ஏற்படுத்தின. மிருக போக்குவரத்தை சீர் செய்த நாய்கள் குரைத்தே சோர்ந்து போயின. 

அமைதி அமைதி அமைதி

இதை கூறியது அமைதியின் எதிரியான ஒரு காகம். அது நீதி மன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பறந்த வண்ணம் இருந்தது, ஒரு முறை உள்ளே சென்று நீதியரசர்களை பார்க்கும், பின் வெளியே பறந்து வந்து விலங்கு சனங்களை பார்க்கும். 

அமைதி ஆட் கொண்டது. நீதியரசர் பெருத்த கனத்த குரலில் கூறினார். ஆனாலும் அது உள்ளே கேட்டது. வெளியே குரல் வரவில்லை. இதை எதிர் பார்த்தே முன் கூட்டியே ஒரு பச்சைக் கிளியை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அந்தக் கிளியும் தன் வேலையை செய்ய நீதி மன்றத்திலிருந்து பறந்து வெளியே வந்தது.

ஆவலாய் விலங்கு சனங்கள் கிளி அமர்ந்த உயர் மரக் கிளையின் கீழ் வாய் திறந்து நின்றனர்.

கிளி கூறியது, ‘’முதலில் எனக்கு நான்கு அல்லது ஐந்து கொய்யா பழங்கள் போடுங்கள்’’

உடனே குரங்குகள் தாவி ஓடி பின் வந்து நூறு கொய்யப் பழங்களை கிளியின் பக்கம் வீசின. மகிழ்வுற்ற கிளி கூறியது

‘’ ஏன் குரங்கும் கரடியும் மணம் புரியக் கூடாது, சிங்க அரசன் ஐம்பது நட்களுக்குள் பதில் விளக்கம் தர வேண்டும் தவறினால் தீர்ப்பு பிரதுவாதி  இன்றி வழங்கப்படும்’’  .. 

ஆராவாரம் விண்ணைப் பிளந்தது. பல குரங்கு கரடி இணையர்கள் அந்த பொது வெளியில் உதட்டு முத்தம் பரிமாறிக் கொண்டனர். தொலைக் காட்சி செய்தி சேகரிப்போர் படம் பிடித்தனர். கூட்டம் கலைந்து காட்டில் அமைதி திரும்பியது. 

சிங்க அரசிடம் விளக்கம் கேட்டு நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கி நாற்பத்தி ஒனபது நாட்கள் ஆகிவிட்டன. குரங்கு கரடி சமூகத்தின் இணையர்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். மிஞ்சியிருக்கும் ஒரு நாளில் சிங்கம் என்ன செய்ய முடியும் ?

சிங்கம் செய்ய வேண்டியதை செய்தான். அடுத்த நாள் மான் உண்ணப்பட வேண்டிய நாள் அதற்கு வழக்கத்திற்கு அதிகமாகவே புல் பூண்டு, கனிகள் தரப்பட்டது. கடைசி நாள் உணவு. அடுத்த நாள் மானுக்கு மஞ்சள் நீராட்டல் நடந்தது. பின் மந்திரி பதவியில் இருந்த மான் சிங்கத்திடம் அழைத்து செல்லப்பட்டான். சிங்க அரசனும் அவன் மனைவி மக்களும் மானைக் கொன்று புசித்தனர். அது அந்த அரச பரம்பரையின் குல வழக்கம். 

நூறாவது நாள் சிங்க அரசன் தனி ஒருவனாக நீதி மன்றம் சென்றான். அவன் தானே நீதி மன்றம் வருகிறான் என்பதை அறிந்த மற்ற விலங்குகள் நீதி மன்றத்தின் அருகாமையில் கூட வரவில்லை. 

நீதியரசர் எழுந்து நின்று ‘’கேட்டார் 

மன்னர் மன்னா விளக்கம் கொண்டு வந்துள்ளீர்களா’’ 

’’அடேய் நரி என் மந்திரியை எங்கள் குல வழக்கப்படி வராஹ ரூப கடவுளுக்கு படைத்து விட்டு புசித்து விட்டோம். அடுத்த மந்திரி நியமனம் செய்யப்பட்டபின் விளக்கத்தை அவனை எழுத வைத்து சமர்ப்பிக்கிறேன்’’ இப்படியாக பதில் அளித்தான் சிங்க அரசன்..

நின்றவாறே நீதியரசர் தீர்ப்பை படித்தார்

’’சிங்க அரசன் நாங்கள் கேட்ட விளக்கத்தை அளிக்க நூறு நாடகள் அவகாசம் தரப்படுகிறது’’

அடுத்த மந்திரியும் ஒரு மான். நூறாவது நாள் அவன் சிங்க குடும்பத்தின் முந்திரி. மீண்டும் நீதியரசர் தீர்ப்பை நூறு நாட்களுக்கு தள்ளி வைத்தார். ஆனால் எந்த தீர்ப்புக்கும் காத்திருக்காமல் சில குரங்குகளும் பல கரடிகளும் இணையர் ஆயினர். என்ன பிரச்னை எனில் அவர்களால் இனப் பெருக்கம் செய்ய முடியவில்லை