இரா. கலையரசியின் கவிதை

இரா. கலையரசியின் கவிதை

  என்னவன் சுட்ட தோசை அலுங்காமல் குலுங்காமல் இருந்தது மாவு. மெல்ல கரண்டியின் விளிம்பு பட்டதும், காதலில் இளக ஆரம்பிக்கிறது. சுழன்று ஆடும் காதலராய், சுற்றிப் பார்க்கிறது. வெயிலுக்கு இணையாய் தோசை சட்டியும் தகிக்கிறது காதலிலா? அனலிலா?? ஒரு கரண்டி மாவிற்குள்…
கவிதை - பேரம் | Bheeram Poem -இரா.கலையரசி

“பேரம்” கவிதை – இரா.கலையரசி

சாணி மெழுகிய கூடைக்குள் வெண்டைப் பிஞ்சுகள் எட்டிப் பார்த்தன. மூக்கு நீண்ட கிளிகளாக சிலவும் மூக்குடைந்த ஆந்தையாக பலவும் ஒன்றையொன்று பார்த்தபடி சாலையின் வெளிக்கு வந்தன. அவிழ்ந்த முடியை அரக்கிக் கட்டி பொச பொச மழைக்கு கணுக்காலில் சேர்ந்து இருந்த சேற்றுக்குச்…
இரா.கலையரசி கவிதைகள்

இரா.கலையரசி கவிதைகள்

      1.அழகு தொப்பை காற்றைடைத்த பலூனது என் கைகள் பட்டதும் எம்பிக் குதிக்கிறது. வழுக்குப் பாறைகள் தேடாது, உன் தொப்பை வழுக்கலில் வழுக்கி மகிழ்கிறேன் ஒற்றை விரல் அழுத்தத்தில், குழி பதிந்து சிரிக்கும் அழகை கண்களுக்குள் பதுக்குகிறேன். உன்…
கவிதை: மாமனார் – இரா. கலையரசி

கவிதை: மாமனார் – இரா. கலையரசி

      மாமனார் மகளின் பொழப்பப் பாக்க, விடிகாலையில் பஸ் ஏறி வெயிலுக்கு முந்தி வந்துட்டாரு அப்பா. கையில அஞ்சாறு பழத்தப் புடிச்சிக்கிட்டு, கருத்த உடம்பு வியர்வைய வாசனை திரவியமா பூசிருந்திச்சு. மருமகனுக்குக் காய்ச்சல். "பாத்தே ஆகணுமுன்னு பரிதவிச்சுப் போனாரு!…
kavithai : barotta - era.kaiarasi கவிதை : பரோட்டா - இரா. கலையரசி

கவிதை : பரோட்டா – இரா. கலையரசி

அழுக்கில் தோய்ந்த மனிதனவன் கைகளில் வெள்ளை பூச்சு விளையாடி மகிழ்கிறது.! எண்ணெய் ஊற்ற எடுத்த கரண்டியில் மழை சாரலாய் பட்டு தெறிக்கிறது வழியும் எண்ணெய் குட்டி வட்டத்தில் குதூகலமாய் உருவாகி வருகிறது. வெள்ளை உணவு.. விரல்கள் விரிந்து அழகிய சூழல் வீச்சை…
இந்த இரவு கவிதை – இரா. கலையரசி

இந்த இரவு கவிதை – இரா. கலையரசி


இந்த இரவு

***************
நட்சத்திரங்கள் மின்னும்
பின்னிரவில்,
விடியக் காத்திருக்கும்
அடுத்த நாளை
மனம் விரும்பவே இல்லை.
விரல் சூப்பியபடி
படுத்திருக்கும் மகள்
அல்லி மலரின் மென்மையாய்,
கண்களை மூடித் துயில்கிறாள்..
அவன் கைப் பிடித்து
கண்களில் கதை பேசி,
மல்லிகை தலை சரிய,
மாலை கழுத்திலாட,,
மஞ்சள் தாலி நெஞ்சில்,
அவன் உறவை
எழுதி இருந்தது..
இணை பிரியா ஜோடி
இவர்களென இசை பாடினோம்.
எங்கு வந்தது பிணக்கு?
தெரியவே இல்லை எனக்கு!
இறங்குகிறது பின்னிரவு
இணைந்த கைகள்
இரு வேறு பாதையில்!
மனமொத்த பிரிவிற்கு
சம்மதித்து நானும் நீயும்
பிரிகிறோம்.
இந்த இரவு!!?????