சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” – நூல் அறிமுகம்
ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய “குஜராத் திரைக்குப் பின்னால்” நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: “சபக்தனி” – இரா. சண்முகசாமி
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்” – இரா. சண்முகசாமி
நூல்அறிமுகம் : பூஜ்ஜிய நேரம் – இரா.சண்முகசாமி
வசிஷ்டரிடம் கல்வி பயில டொனேசனாக ஆயிரம் பசுக்கள் …!
அடடா இந்த நூல் 2012ல் வெளியாகி இருக்கிறது. ஆனால் 2023ல் தான் கண்ணில் பட்டது. இவ்வளவு நாள் எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியவில்லை. உண்மையிலே ஆசிரியர் தோழர் ச.சுப்பாராவ் அவர்களுக்கு நல்ல தேர்ந்த ஞானம் இருக்கு என்பதை இந்நூலின் வழியே உணர்கிறேன்.
தோழர்களே. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இப்படியும் வழங்க முடியுமா என்று ஒரு நிமிடம் ஆடிப்போனேன், ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு நேர்த்தியான தோழர் இவர். ஆம் இந்நூலில் 19 தலைப்புகளில் வந்துள்ள பதிவு கட்டுரையா, கதையா, சொந்த அனுபவத் தொகுப்பா, முக்காலம் உணர்த்தும் கொள்கை குறிப்பா என்றால் எல்லாம் கலந்த கலவை தான் தோழர்களே. படு பிற்போக்காக சிந்திப்பவர்கள் கூட இந்நூலை வாசித்தால் ஒருநிமிடம் முற்போக்கு சிந்தனைக்குள் வந்துபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒவ்வொரு ஞானக் கட்டுரையின் இறுதியிலும் குபுக் என்று சிரிக்க வைத்துவிடுவார் உடன் நல்ல சிந்தனையை தட்டியெழுப்பி விட்டு. நிச்சயம் “அடடா” என்று சொல்லாமல் அடுத்தக் கட்டுரைக்கு தாவ மாட்டோம். விமர்சனம் செய்வதில் தன் குடும்பத்தையும் விட்டு வைக்கமாட்டார். எனவே ஆச்சாரம், அனுஷ்காரம் என்று யாரும் தண்டால் பயிற்சி எடுத்து சண்டைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் கட்டுரையில் வச்சு செய்திருக்கும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் அமைதியாக அவர்களை திருப்பி அனுப்பிவிடும். அவ்வளவு யதார்த்தமான பதிவுகள்.
நிறைய சொல்லலாம் ஆனால் ஒன்றை மட்டும் உங்களோடு
‘என்றும் மாறாதது’
அந்தக் காலத்தில் குருகுலத்தில் குழந்தையை சேர்ப்பதை வைத்து வச்சு செய்திருப்பார். இன்றைக்கு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் படித்திருக்க வேண்டும், நல்ல பள்ளியை தேடி அலைதல், கட்டணம், பள்ளியில் இடம் இப்படி இருப்பதை குருகுல காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு காட்டியிருப்பார். அவ்வளவும் அசத்தலாக கொடுத்திருப்பார்.
ஆறு மாதத்திற்கு முன் ஜனகனின் யாகத்திற்குப் போய் தானம் வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில்தான் நமுசியும், கார்க்கியாரும் பேசிக்கொள்வார்கள். கார்க்கியார் தன் குழந்தையின் கல்விக்காக நல்ல குருகுலத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நமுசியிடம் சொன்னபோது, நமுசி வாய்விட்டு சிரித்துவிட்டு, “இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறீர்? போனவுடன் அப்படியே குருகுலத்தில் சேர்ப்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது குழந்தை பிறந்தவுடனே பரத்வாஜிடம் சொல்லி வைத்தால்தான் இடம் உண்டு. வசிஷ்டர் என்றால் ஆயிரம் பசுக்கள் தானமாக அளிக்க வேண்டும். உன்னுடைய அறியாமையை என்னவென்பது என்று சிரித்தார் நமுசி. இதேபோல் பத்து மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடைபெறும் குருகுலம் இப்படி வகை வகையான, தினுசு தினுசான குருகுல விவரங்களை கூறினார்.
இறுதியில் புதியதாக தொடங்க இருக்கும் குருகுலத்தில் குழந்தைகளுக்கு குடில் கட்டுவதற்கு மூங்கில் தேவையிருக்கும். ஒரு ரெண்டு கட்டு நல்ல மூங்கிலாக வெட்டிக்கொண்டு போனால் சீட்டு கிடைக்கலாம்” என்று நமுசி சொன்ன ஆலோசனையின் பேரில் எல்லாம் தயார் செய்து குழந்தையை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று கார்க்கியார் தன் குழந்தையுடன் தயாரான போது அவருடைய மனைவி, “ஏங்க பாடம் தொடங்கியிருப்பாங்களோ, என்ன சொல்லிக்கொடுப்பாங்க?” என்று கணவரை கேட்க, “போன உடனே பாடம் நடக்காது. குருவோட பசுக்களை ஓட்டிக்கொண்டு நன்கு மேய்த்து வரவேண்டும், நல்ல காய்ந்த விறகுகளை பொறுக்கி வரவேண்டும். அப்படி குரு சொல்வதை தட்டாமல் செய்து வந்தால்தான் குரு மகிழ்ந்து பாடம் நடத்துவார்” என்று கணவர் கூற உடனே மனைவி, “ஏங்க நம்ம பையனும் இங்க அந்த மாட்டைத்தானே மேய்ச்சுகிட்டிருக்கான். அங்கேயும் அதுதான்னா என்னாங்க அது?” என்று மனைவி புலம்ப “பே உனக்கு என்ன தெரியும் போய் சமையலை கவனி” என்று அதட்டுவார் கார்க்கியார். கதை முடியும். இதில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது, இன்றைய கல்விமுறையின் போதாமை பழைய குருகுல முறையிலிருந்து சற்றும் மாறவில்லை என்று நல்லா நெற்றிப்பொட்டில் அடித்தது போல் கூறியிருப்பார்.
ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல இன்னும் மீதம் 18 கதைகளும் இன்னும் டாப்பாக இருக்கும். கடவுள்கள் வந்து போவார்கள். ராமன், தசரதன் வந்து போவார்கள். இன்றைய பணி, குடும்பத்தில் பெண்கள் படும் சமையலறை சிறை என எல்லாமும் சும்மா வேற லெவலாக வந்து போவார்.
என்னுடைய ஞானத்தை கிளப்பிவிட்ட தோழருக்கு மனமார்ந்த நன்றி!
வாசியுங்கள் தோழர்களே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல்விமர்சனம் :
இரா.சண்முகசாமி- புதுச்சேரி.
நூல் : இரண்டாவது ஞானம்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : 2012 முதல் பதிப்பு (இந்நூல் பல பதிப்புகளை கண்டிருக்க வேண்டிய நூல்)
பக்கம் : 112
விலை : ரூ.70.
நூல் அறிமுகம்: கண்ணப்பன் கேட்ட கேள்வி -இரா.சண்முகசாமி
நூல் அறிமுகம் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு -இரா.சண்முகசாமி
1999 ஏப்ரல் 10 அன்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சென்னையில் வெளியிட முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள். சிபிஎம் தோழர்கள் என்.சங்கரய்யா, கே.வரதராஜன், ஜி.ராமகிருஷ்ணன், டி.லட்சுமணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜனநாயக மாதர் சங்கத் தோழர் மைதிலி சிவராமன் ஆகிய தலைவர்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்நூலின் தேவையின் முக்கியத்துவம் ஏன் தேவை என்பதற்கு வெளியீட்டு விழாவே சாட்சி தோழர்களே.
ஆம் 1801க்கு முன்பும், 19,20ஆம் நூற்றாண்டிலும் ஏன் இப்போதும் நால்வர்ண கோட்பாடு மக்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை பார்த்தோமானாலும் 1801ல் பிராமணிய தத்துவம் மக்களை எப்படி கெட்டித்தட்டி வைத்திருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம். ஆம் கிறிஸ்துவம் மட்டும் வராமல் போயிருந்தால் நமது சமூகம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பின்னோக்கி இருந்திருக்கும் என்பதை நினைக்கவும் சிரமமாகவே இருக்கும்.
தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று பயணச்சீட்டில் அச்சடித்த வரலாறு மறக்கமுடியாது.
தீண்டத்தகாதார் கோயிலில் நுழைந்தால் சிறை தண்டனை இந்து சட்டத்தில் இருந்தது.(இப்போதும் தமிழகக் கோயில்களில் குறிப்பாக கிராமங்களில் இன்னும் இருக்கிறது நுழைய முடியாத நிலை. ஒரு பெருந்திரள் மக்களே விழுப்புரம் அருகே மேல்பாதி என்னும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கோயில் முன்பு கூடி போராட்டம் நடத்திய சூடு இன்னும் ஆறவில்லை.
குழந்தை மணம், பலதார மணம், உடன்கட்டை ஏறுதல் உட்பட பெண்கள் எல்லாவற்றையும் விட கொடுமையான வலியை சுமந்தது.
இந்நிலையில் தான் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பணி என்பது மக்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. அது கிறிஸ்தவம் தொடங்கி, பிரம்ம சமாஜம், வைகுண்ட சாமிகள்(அவர் வழியில் தற்போது பால பிரஜாபதி அடிகளார் உள்ளார்), வள்ளலார், வேதநாயகம் பிள்ளை, ஜி.சு.ஐயர், மாதவையா, அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், நாடார்களின் ஆலய நுழைவு போராட்டம், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார், நீதிகட்சி, பெரியார், சிங்கார வேலர், பாவேந்தர் பாரதிதாசன், மகாத்மா காந்தி, அம்பேத்கரின் தாக்கம், ராஜாஜியின் குலக்கல்வி, தீண்டாமை ஒழிப்பு சட்டம், திமுக ஆட்சி, மாதர் இயக்கம், அதிமுக ஆட்சி இறுதியில் 21ஆம் நூற்றாண்டில் என்னவிதமான மாற்றம் தேவை என்பதற்கான நிகழ்ச்சி நிரல் இப்படி மிகவும் சிறப்பாக பரிணாம வளர்ச்சியாய் நூலை வடித்துக் கொடுத்திருக்கிறார் பேராசிரியர்.
நிறைய கற்றுக்கொள்ள இந்நூல் என்னை தூண்டியுள்ளது. இதற்குமுன்பு பலமுறை வசந்தம் வெளியீட்டு நூல்களை பார்த்திருந்தாலும் இந்நூல் கண்ணில் படாமலே இருந்தது. மேதினத்தில் சென்னை பாரதி புத்தகாலயம் சென்றபோது கண்ணில் பட்டது. இந்நூலை முடிக்கும் வரை இடையில் வேறு நூலை எடுக்கவிடவில்லை பேராசிரியர் அவர்கள். அவ்வளவு தகவல் களஞ்சியங்கள் கொட்டிக்கிடக்கு. நான் வாழ்வது என்னவோ 21ஆம் நூற்றாண்டு. ஆனால் 19,20ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்த ஒரு அனுபவம் இந்நூலை வாசித்ததில் ஏற்பட்டது.
சீர்திருத்த இயக்கம் செய்த பணிகளை கண்டுணர்ந்த போதே அங்கங்கே எழுந்த முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆம் மகாத்மா காந்தி பெருந்திரள் மக்களை கவர வேண்டி இருபக்கமும் இருக்கும் மிதவாதிகளை கவரும் வண்ணம் தன்னுடைய செயல்பாட்டைக் கொண்டிருந்தார்.
விவேகானந்தர், “பெண்கள் அதிகம் இருந்ததால் தான் பலதார மணம் ஏற்படக் காரணமாகியது” என்றபோது பாரதியார் தன்னுடைய எழுச்சியை வெளிப்படுத்தியிருப்பார். “மனுஸ்மிருதி எழுதிய காலத்தில் மக்கள் தொகை கணக்கு இல்லையே எப்படி தெரியும் பெண்கள் அதிகமென்று?” என்று கேட்டிருப்பார். ஏனெனில் பலதார மணத்தை அதுவும் தவழும் குழந்தையிலிருந்து மணம் முடிக்கவேண்டும் என்று ஸ்மிருதி குறித்துள்ளதை நினைவுகூர்ந்திருப்பார் பாரதியார்.
நாம் இந்நூலை வாசிக்கும்போதே கிறிஸ்தவ பாதிரியார் 1789-1828 காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தபோது இங்கிருந்த மக்களின் வாழ்நிலையை நேரில் கண்டு எழுதிய நூல் ‘இந்திய மக்கள் (பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்)’. அதிலிருந்து பல மேற்கோள்களை நமக்கு வழங்கியுள்ளார். அந்த நூலையும் வாசித்துவிட வேண்டும் என்று எடுத்து வைத்துள்ளேன்.
நம் பழம்பெருமையை நாம் பேசும் முன்பு நமக்கு முன்பிருந்த வரலாற்றை வாசிக்க வேண்டும் என்று தூண்டிய பேராசியருக்கு மிக்க நன்றி. வைகை வெளியீட்டிலேயே மூத்த தோழர்கள் வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறைக்கு இந்நூல் மிகவும் தேவையாக இருக்கும். அனைவரும் வாசிக்க வேண்டும்.








