இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை மேம்பட… – பேரா. பிரபாத் பட்நாயக்
தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்று நம்முடைய அரசு அதிகாரிகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதில் ஒருபோதும் அவர்கள் சோர்வடைவதில்லை. அதேசமயம் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மிகக் கடுமை யாக சரிந்ததையும் தற்போதைய வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் சரிந்துள்ளதையும் அதிகாரிகள் ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. 2021-22 மொத்த உள்நாட்டு உற்பத்தியினை கோவிட்டுக்கு முந்தைய ஆண்டான 2019-20ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5 சதவிகிதம் மட்டுமே அதிகமாக இருந்தது.மேலும் 2022-23 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே உலக நிதி நிறுவனமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்தன. அதாவது 2022-23ஆம் ஆண்டின் ஜிடிபியின் வளர்ச்சி 2019-20ஆம் ஆண்டைக் காட்டிலும் 8.4 சத விகித உயர்வடையும் என்று தெரிவித்தன. எனவே 2019-20 மற்றும் 2022-23ஆம் ஆண்டுக்கு இடையே யான மூன்றாண்டுகாலத்தில் 2.7 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் இந்த சரிவிலிருந்து மீட்சிய டைவதற்கான வாய்ப்பும் இல்லை. 2023-24ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் 2022-23ஆம் ஆண்டைக் காட்டிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தரப்பு நிதி முகமைகளும் 2023-24ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் பற்றிய முன்னறிவிப்பில் குறைந்த அளவிலான வளர்ச்சி விகிதத்தையே தெரி விக்கின்றன. அவையனைத்தும் 2022-23ஆம் ஆண்டி னைக் காட்டிலும் குறைந்து 2023-24ஆம் ஆண்டில் 5.9 சதவிகித வளர்ச்சியே இருக்கும் என்றும் தெரி விக்கின்றன.
எண்ணெய் உற்பத்தி குறைவின் தாக்கம்
உண்மையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் கூட தற்போதைய புதிய நிலைமையின் காரணமாக மேலும் குறையும். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஒபெக் மற்றும் கூட்டணி நாடுகள் தற்போது மீண்டும் மே 1ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்படும் என்ற அறி விப்பும் நம்முடைய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது இரண்டு வழிகளில் நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவதாக இது அமெரிக்காவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும். அது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பை குறைப்பதற்கு வழி வகுக்கும். இதனைத்தொடர்ந்து இந்திய பணவீக்கம் உயரும். இதை கட்டுப்படுத்துவதன் பெயரால் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே சரிந்து வருகிற இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். இரண்டாவதாக அமெரிக்காவின் தாக்கத்தை யொட்டி ஏற்படும் விளைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு நிகர ஏற்றுமதி குறைவதன் மூலமாக தேசிய உற்பத்தியின் மீதான செலவினை குறைக்கும். இதன் மூலமாக வளர்ச்சி நேரடியாக பாதிக்கும். (எண்ணெய் விலை உயர்வு காரணமாக இறக்குமதிச் செலவும் அதிகரிக்கும்).
ஆனாலும் சமீபத்திய எண்ணெய் விலை உயர்வி னைக் கூட ஒதுக்கிவைத்தாலும் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் மந்தநிலையிலேயே இன்னும் இருக்கும்.இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்படி 2022-23ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மூன்றாவது காலாண்டின் வளர்ச்சியைக் காட்டிலும் குறைவு. அதாவது 4.4. சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிட்டால் நான்காவது காலாண்டில் 4.2 சதவிகிதமாகும். கேள்வி என்ன வென்றால் கோவிட் காலத்தின் உற்பத்தி பாதிப்பிலி ருந்து அற்ப விகிதத்தில் மீண்டு வருவது ஏன் என்பது தான்.
பணக்காரர்களுக்கு வரி விதிப்பை உயர்த்தாமல்…
புதிய தாராளமயப் பொருளாதாரத்தின் இயல்பான போக்கு தான் இதற்கான அடிப்படை காரணமா கும். சமச்சீரற்ற வருவாய் அதிகரிப்பதன் காரணமாக தனியார் நுகர்வினை, இத்தகைய பொருளாதாரம், உற் பத்திக்கான பங்கீடுகளை குறைத்து விடுகிறது. இதன் பொருளானது சுயேச்சையான வருவாய் அல்லாத தனியார் நுகர்வு வருவாய் வளர்ச்சிக்கான பங்க ளிப்பிற்கு ஊக்கமளிக்காது. சந்தை அளவின் எதிர் பார்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதத்தினைச் சார்ந்தே தனியார் முதலீடு இருக்கும். தனியார் மூதலீடு சுயேச் சையான வளர்ச்சிக்கு ஊக்கமளிக்காது. அதேசம யம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சார்ந்த நிதிப்பற்றாக்குறை எல்லைக்கு உட்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் செலவு தன்னுடைய வருவாயிலிருந்து செலவிற்கான ஒதுக்கீடும் வரையறைக்கு உட் பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் வருவாயை அதி கப்படுத்த முடியாமல், அதாவது வரி மற்றும் ஜிடிபிக்கு இடையேயான விகிதாச்சாரத்தை உயர்த்தாமல், குறிப்பாக உலக நிதி மூலதனம் விரும்பாத பணக்கா ரர்களுக்கு வரி விதிப்பதை உயர்த்தாமல், வளர்ச்சியை எட்டமுடியாது. புதிய தாராளமயத்தின் கீழ் வளர்ச்சிக்கான தூண்டுதல் இரண்டு ஆதாரங்களின் மூலமாகத்தான் முடியும். ஒன்று நிகர ஏற்றுமதியின் மூலம்; இரண்டாவது சொத்து-விலை குமிழிகள் மூலமாக சுயேச்சையான வருவாய் நுகர்வினை அதிகப்படுத்த முடியும்.
ஆனால் உலக பொருளாதாரமானது பொதுவான தேக்கநிலையிலும் அது மேலும் நெருக்கடியை நோக்கியும் நகர்வதற்கான அறிகுறிகள் உள்ளன. ஏற்றுமதி அதிகரிப்பதிலிருந்து வெகுதொலைவில் உள்ளதை கவனத்தில் கொண்டால் வளர்ச்சி வேகம் மிகவும் மெதுவாகவே இருக்கும். சொத்து விலை குமிழிகள் நமது நாட்டின் பொருளாதா ரத்தில் கூடுதல் தேவை நுகர்வினை பெரிய அளவிற்கு ஏற்படுத்தாது. நுகர்வுத்தேவை பெருமளவில் வெளி நாட்டில் வெளியேறும் நபர்களை வளப்படுத்து கின்றன. எனவே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பிற்கு எந்த காரணமும் இல்லை. அதற்கு மாறாக முதலீட்டு வளர்ச்சி குணறைந்து வருவதும், சமச்சீரற்ற வருவாய் அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக சுருங்கி வரும் நுகர்வுத் தேவையும் வளர்ச்சி விகிதம் குறைவதற்கான அறிகுறிகளாக உள்ளன. தனியார் செலவுகள் நுகர்வு மற்றும் முதலீடு இரண்டிலும் குறைந்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்ற பன்னாட்டு நிதி நிறுவனத்தின் எதிர் பார்ப்பின்படியே இருந்தாலும் உலக பொருளாதா ரத்தில் உள்ள பொது நெருக்கடியானது ஏற்றுமதியின் வளர்ச்சியில் சரிவை ஏற்படுத்தும். இத்தகைய காரணங்களினால் அரசுகளின் செலவுகள் அதி கரித்து தானாகவே மந்தமடையும். ஆகவே வளர்ச்சி குன்றுவதை ஈடுசெய்ய முடியாது.
இரண்டு வித வழிகளில்…
எவ்வாறாயினும் பொருளாதாரத்தினை ஊக்கப் படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகள் வரையறை களுக்கு உட்பட்டவையே. அதற்கு அரசின் செல வினங்களின் மீதான சேர்மானத்தை மாற்றுவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசின் தற்போதைய அதே செலவினங்க ளைக் கொண்டே இரண்டு விதமான வழிகளில் மேற்கொள்ள முடியும். ஒரு 100ரூபாயை எடுத்துக் கொள்வோம். அது உழைக்கும் மக்களைச் சேரும் வகையில் செலவிடலாம். அல்லது 2023-24ஆம் ஆண்டின் பட்ஜெட் திட்டத்தின்படி, நவீன உட்கட்ட மைப்பு திட்டங்களுக்கு செலவு செய்யலாம். ஒரு 100 ரூபாய் உழைக்கும் மக்களிடத்தில் வழங்கப்பட்டால் அது முழுமையாக அல்லது அதிகபட்சமாக செலவிடப்படும். அது சரக்குகள் மற்றும் சேவைகள் மீது செலவிடப்படும். அது பெரும்பாலும் லாபம் குறைவாக வைத்து நடத்தப்படும் சிறு குறு தொழில்க ளினால் உற்பத்தியான பொருட்களாக இருக்கும். இத னால் தனி நபருக்கான சேமிப்பு வருவாய் உற்பத்தி யாகும். மறுபுறம் இதே தொகை நவீன உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடப்படுமானால் ஒவ்வொரு கட்டத்திலும் அது துவக்கக் கட்டத்திலோ அல்லது அடுத்தடுத்த கட்டங்களின்போதோ ஏற்படும் ஒவ்வொரு செலவும் அடுத்தடுத்து அதிகரித்து வரும். ஆனால் அதன் மூலமாக திருப்பி செலவிடப்படும் தொகை மிகக்குறைவாகவே இருக்கும். பெரும்பகு தியான தொகை சேமிப்பிற்கும் இறக்குமதிக்கும் திருப்பப்படும். இதன் பொருளானது அடுத்தடுத்து நடைபெறும் பணப்பரிமாற்றம் என்பது செலவுகளை உழைக்கும் மக்களிடத்திற்கு மாற்றுவதைக் காட்டி லும் நவீன உட்கட்டமைப்பு செலவில் குறைவாகவே இருக்கும்.
மக்களுக்கு நேரடியாகவோ திட்டங்கள் மூலமாகவோ
இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் மொத்தச் செலவுகளை உயர்த்த முடியாவிட்டாலும் கூட அந்தச் செலவுகள் சரியான வகையில் செலவிடப்படுகிறதா என்பதை பொறுத்தே மொத்த நுகர்வின் வித்தியா சமும் அதையொட்டியே பொருளாதாரத்தின் வளர்ச்சி விகித வித்தியாசமும் இருக்கும். பொதுச் செல வினத்தை மற்ற வகையில் செலவிடுவதைக் காட்டிலும் உழைக்கும் மக்களுக்கு நேரடியாகவோ அல்லது உழைக்கும் மக்களின் நலன்களுக்கான வகையிலோ செலவிடும்போது விரிவான பன்மடங்கு விளைவு களை உருவாக்கும். இங்கே இரண்டு விதமான விமர்சனங்களை பற்றி விளக்க வேண்டிய தேவை உள்ளது. முதலாவதாக பொருளாதாரமானது வழங்கல் பக்கத்திலிருந்து சார்ந்து இருக்குமானால் இந்த விமர்சனம் பொருத்த மற்றதாக இருக்காது. உதாரணமாக உட்கட்டமை ப்பின் பற்றாக்குறை வளர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும். தற்போதைய இந்தியச் சூழலில் இந்தக் காரணம் பொருத்தமாக இருக்காது. நம்முடைய பொரு ளாதாரமானது நுகர்வை சார்ந்து இருக்கிறது. இதை ஐ.எம்.எப் கூட ஒப்புக்கொண்டுள்ளது.
இரண்டாவதாக ஏழைமக்களுக்கு அல்லது உழைக்கு மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் அளிக்கப்படும் நேரடிப் பயன்பாடு உணவு தானி யத்திற்கான தேவையினை மிகப்பெரிய அளவில் உரு வாக்கும். இது அரசாங்கத்தின் இருப்பில் உள்ள உணவு தானியங்கள் அவர்களிடத்தில் போய் சேரு வதற்கும் உதவி செய்யும். இவை இல்லாமல் மற்ற எந்தவொரு பரிமாற்றமும் இதைப்போன்ற பல்கிப் பெருகும் விளைவுகளை உருவாக்காது. இது தற்போ தைய சூழலில் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனெனில் பெருந்தொற்று காலத்தில் கூடுதலான அளவில் ஏழைமக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே வழக்கம்போல இருந்து வரும் பெருமளவிலான உணவு தானிய இருப்பு இப்போது குவிந்து இருக்காது. எனவே உழைக்கும் மக்களுக்கு நேரடியான பரிமாற்றம் தான் சரக்கு மற்றும் சேவைகளுக்கான தேவைகளை உருவாக்கி அவைகளின் உற்பத்தி யை விரிவுபடுத்துவதோடு மேற்கண்டவாறு பன்மடங்கு விளைவுகளை உருவாக்கும்.விரிவான வேலை வாய்ப்பினை உருவாக்கும்.
புதிய தாராளமய ஆட்சியின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு அரசின் செலவினத்தின் ஒதுக்கீடு இணைக்கப்பட்டுள்ளதாலும் இத்துடன் பெரும் நிதிப் பற்றாக்குறையும், செல்வந்தர்களின் மீதான வரியை ஏற்க மறுப்பதாலும் செலவுகளை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு பலவகையில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றான செலவு பரிமாற்றங்கள், வரு வாயை விரிவுபடுத்துவதோடு, தற்போது குறைந்து வருகிற வளர்ச்சி விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத் தும், இதனுடன் விரிவான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும். தற்போது பொருளாதார நெருக்கடியின் பிடியில் தவிக்கும் ஏழைமக்களுக்கு நிவாரணமாகக் கூட இருக்கும். ஆனால் மோடி அரசு எப்போதுமே தனது கூட்டுக்களவாணிகளின் நலன்களைப் பற்றியே கவலை கொள்கிறதே தவிர ஏழை மக்களை பற்றியல்ல.
தமிழில் : எஸ்.ஏ.மாணிக்கம்