கவிதை : வேங்கைவயல் -எம்.ராம்குமார்

கவிதை : வேங்கைவயல் -எம்.ராம்குமார்



வேங்கைவயல்

நூறாண்டுகளுக்கு
முன்பில்லை
இன்றைக்கும்
வீசுகிறது துர்நாற்றம்
வான் முட்டும்
கோபுரங்கள்
வாயை அடைக்கும்
அதிசயங்கள் என
பெருமைப் பட்டுகொள்ளும்
உங்கள்
வரலாற்று மரபுகளில் இனி
குடிநீர் தொட்டிக்குள்
பீ கலந்தது முதன்மையாகட்டும்
மேல் கீழ்
ஊர் சேரி என்று பிளபடுத்தி
சகமனிதனை சாதியால்
ஒடுக்கும் உங்களுக்கு
தமிழன் என்ற பெயரெதுக்கு
எல்லாம் உதிரும் மயிருக்கு
சமம்
கோடிகளைக் கொட்டி
அகழாய்வு
கீழடி எதற்கு வேங்கைவயலே
போதும்
தமிழினின் சாதிவெறி(பெருமை)
அறிய
ஞாபகம் இருக்கட்டும்
நிச்சயம் ஒருநாள்
தலை முறை
கோபம் தன்னாலே வெடித்தெழும்
அதன் சூடு பொறுக்காமல்
அதிகார வர்க்கம் சுருண்டு
விழும்
  –எம்.ராம்குமார்