Tag: கஞ்சத்தனம்
கவிதை: நெஞ்சப் பட்டறையில்… – ஜலீலா முஸம்மில்
Bookday -
மிகவும்
பாதுகாப்பாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
நெஞ்சப்பட்டறையில்
சந்தர்ப்பங்கள்
அமையாது போகலாம்
அதைப் பயன்படுத்த
காற்றின் அலைகளில்
மூழ்கிக் கரைந்து போகலாம்
மூச்சுக்காற்றின்
அனலில் மறைந்து போகலாம்
முகவரி தெரியாமல்
அண்டவெளி எங்கும்
அலைந்து திரியலாம்
முட்டி முட்டி
மௌனமாக மேடை தேடி
ஓடிக்கொண்டிருக்கலாம்
கட்டவிழ்த்த சுதந்திரம் கேட்டுக்
கானகங்களில் கண்ணீர்
விட்டு விசும்பலாம்
ஆனால்...
நேசச்சுழலில்
சிக்கிய சில
கவிதைகளில் அது
நிச்சயம்
தஞ்சமடையும்
நேசத்தின் அச்செழுதும்
சில இதழ்களில்
நிச்சயம்
பவ்வியமாக உட்கார்ந்து...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...