தங்கேஸ் - கவிதை thangesh - kavithai

தங்கேஸ் கவிதை

களிமண் பொம்மையர்கள் பச்சைக் களி மண்ணைப் பிசைவது போல மனதைப் பிசைந்து உருவங்கள் செய்கிறாள் செய்த உருவங்கள் உயிர்பெற்று நடந்துவிட வேண்டி அவைகளின் காதில் ஓயாமல் மந்திரங்களை உருவேற்றிக் கொண்டிருக்கிறாள் மந்திரங்களின் தகிப்பில் பச்சைகளிமண்ணுக்குள் இருதயம் துடிக்கத் தொடங்குகிறது குருதியோட்டம் பாய்கிறது…