Cinema and the world of children - Article | சினிமாவும் சிறார் உலகமும்

சினிமாவும் சிறார் உலகமும் – சிந்துஜா

மனித நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டே நாம் வாழ்வியல் முறையில் பொழுதுபோக்கென்று பலவற்றை பின்பற்றி இருக்கிறார்கள். அவற்றுள் குகை ஓவியங்களும், ஆடல் பாடலுடனே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின் மொழி தோன்றியப்பின் ஓவியங்களுக்கு வடிவம் கொடுத்து எழுத்துக்களாக ஓலைகளில் பதித்து வரலாறாகவும் உருவம்…
Director Seenuramasamy - Tamil Cinem | சீனுராமசாமி

சீனுராமசாமியின் 17 ஆண்டுகள்: இரா.தெ.முத்து

இது குதிரைதான் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்க இயலும். ஓராண்டு ஐந்தாண்டு பத்தாண்டு பதினைந்து ஆண்டு என கடந்து திரையுலகில் நிற்பதற்கு வேறு எதையும் விட படைப்பூக்கமும் படைப்புத்திறனும் ஒருவருக்கு வேண்டும். இந்த…
"நாடு" - சினிமா விமர்சனம் { Naadu movie review }

‘நாடு’ – தமிழ் திரைப்பட விமர்சனம்

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து நவம்பர் 2023இல் வெளிவந்த திரைப்படம் "நாடு". தற்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம். எங்கேயும் எப்போதும்’, ‘ இவன் வேற மாதிரி’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர்…
தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

      கிழக்கு ஐரோப்பிய சினிமா செக்- திரைப்படங்கள் இந்நாளை செக் குடியரசு, அந்நாளில் செக்கோஸ்லோவாகியா, [CZECHOSLOVAKIA]. இப்பெயரை என் பள்ளி நாட்களில் மூன்று விதமாக நான்கு பையன்கள் உச்சரிப்பார்கள். அவ்வாறு நாங்கள் நான்கு பேருக்கும் இக் கிழக்கு ஐரோப்பிய…
pugarppettiyin meethu paduththu urangum poonai book reviewed by thozhar SAP நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - தோழர் SAP

நூல் அறிமுகம்: புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – தோழர் SAP

சினிமாவில் புகழ்மிக்கவராக விளங்கும் சீனுராமசாமியின் 170 கவிதைகளடங்கிய புகார்பெட்டியின்மீது படுத்துறங்கும் பூனை என்ற தலைப்பில் பெரும்தொகுப்பாக வந்துள்ளது, முப்பதாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தமுஎச குழுவில் பலமுறை நான் சந்தித்த இளைஞர் சீனு, அவரது தென்மேற்குப் பருவக்காற்றைவிட எனக்கென்னவோ இக்கவிதைத் தொகுப்பு இனிக்கிறது.…
திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள ... இக்கதை களம் கண்ணீருடன் கலங்க…
சினிமா விமர்சனம்  : Mrs Chatterjee Vs Norway -இரமணன்

சினிமா விமர்சனம் : Mrs Chatterjee Vs Norway -இரமணன்

  2023 மார்ச் 17 அன்று திரைக்கு வந்துள்ள இந்தி மொழிப்படம். 2011ஆண்டில் நார்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சங்கரிகா சாட்டர்ஜி என்பவரின் உண்மை அனுபவத்தின் திரையாக்கம். அஷிமா சிப்பர் இயக்கியுள்ள இப்படத்தில் ராணி முகர்ஜி, அனிர்பன் பட்டாச்சார்யா, ஜிம் சர்ப்,…
திரை விமர்சனம் :1232 kms கிலோ மீட்டர் -மு.ஆனந்தன்

திரை விமர்சனம் :1232 kms கிலோ மீட்டர் -மு.ஆனந்தன்


1232 kms கிலோ மீட்டர்..  திரை விமர்சனம்..
கொரானா ஊரடங்கு கால  புலம் பெயர் தொழிலாளர்களின் ஊர் திரும்பும் நெடுந்தூர நடை Long March  குறித்து வந்துள்ள முதல் முழுநீள இந்தியத் திரைப்படம்/ஆவணப்படம் என நினைக்கிறேன்.
இந்தியாவின் பெருவழிகளெல்லாம்  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குஞ்சு குளுவான்களுடனும் மூட்டை முடிச்சுகளுடனும்  தவிச்ச வாய்க்கு ஒரு சொட்டுத் தண்ணீயில்லாமல் பசித்த வயிறுக்கு ஒரு வாய் சோறில்லாமல்  வேகாத வெயிலில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து கடந்த அலவத்தை உலகம் தன் அழகான கண்களால்  பார்த்துக்கொண்டிருந்தது.
3 கோடி இந்திய மக்கள் நடந்த நடையில் எத்தனை எத்தனை கதைகள்.  சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்தே இல்லாத இந்திய ரோடுகளில் செத்து மடிந்த கதைகள்தான் எத்தனை எத்தனை. அதில் ஒரு கதையாவது சினிமாவாக வந்துள்ளதா.
இந்தச் சமகால பேரலவத்தை அதன் அரசியலைப்  பேசும் படைப்புகள் எத்தனை வந்துள்ளன.  எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளன.   ஒரு சில சிறுகதைகள்.   ஆங்காங்கே சில திரைக்காட்சிகள்.  வீட்டிற்குள் முடங்கியிருந்த கதைகள் ஓரிரு வெப் சீரியல்களாக வந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் நடந்த கதைகளாக சில திரைப்படங்கள் வந்துள்ளன.  சமீபத்தில்கூட மோகன்லால் நடித்த அலோன் Alone என்ற மலையாள திரைப்படம்.  முழுக்க முழுக்க ஊரடங்கு காலத்தில் நடைபெறும் கதை.  ஆனால் அது கிரைம் ஸ்டோரி.  ஊரடங்கு கால அவலத்தை குறிப்பாக நெடுநடை அவலத்தைப் பேசுகிற முழுநீளப்படம் எந்த இந்திய மொழியிலாவது வெளிவந்துள்ளதா என தேடிக்கொண்டிருந்தேன்.
1232 KMs  படம்  டெல்லி புறநகர் பகுதில்  கூலித்தொழிலாளிகளாக  வேலை பார்த்த பிகாரைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஊரடங்கு வேலையிழப்பாலும் பட்டினியாலும்  தங்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள்.  1232 கிலோ மீட்டர் தூரத்தை அவர்கள் சைக்களில் பயணத்துத்து வீடு திரும்புவதுதான் கதை.
வழிநெடுக அவர்கள் படும் சிரமங்கள், சைக்கிள்கள் பஞ்சராவது,  போலீசுக்கு பயந்து குறுக்கு வழிகளில் செல்வது, வழி தவறிச்செல்வது,  தண்ணீர், உணவு இல்லாமல் தவிப்பது, இரவு உறங்க இடமில்லாமல் தவிப்பது, வெயிலாலும் பசியாலும் மயங்கி விழுவது, ஆங்காங்கே  மக்கள் தண்ணீர், உணவு கொடுத்தும் படுக்க இடம் கொடுத்தும் உதவுவது..  லாரிகளில் சைக்கிளை ஏற்றிக்கொண்டு செல்ல லாரி டிரைவர்கள் உதவுவது.    புலம் பெயர்பவர்களை போலீஸ் பிடித்து கரோனா டெஸ்ட் செய்வது,  முகாம்களில் தங்க வைப்பது, அடிப்படை வசதிகள்கூட இல்லாத தற்கால முகாம்களில் அவலங்கள், இறுதியில் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்கு வரும் சொந்தக்குடிகளை பஸ்களைல் அழைத்துச் செல்வது.  மீண்டும் கரோனா பரிசோதனை, முகாம்களில்  14 நாட்கள்  தனிமைப்படுத்துதல்,  இறுதியில் வீடு திரும்பும் அவர்களைப் பார்த்து உறவுகளின் அழுகையும் சந்தோசமும்..  என  பல அம்சங்களையும் பேசுகிறது.
2021 இல் வெளிவந்த இந்த இந்திப் படத்தை வினோத் காப்ரி இயக்கியுள்ளார்.  ஹாட் ஸ்டார் தளத்தில் காணலாம். தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில்  டப்பிங் செய்யப்பட்டுள்ளது,   ஆவணப்பட வடிவில் இல்லாமல் திரைப்பட வடிவில் வெகுஜன  மக்களும் ரசிக்கும் வகையில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஒன்றிய அரசின் திட்டமிடப்படாத தீடீர் ஊரடங்கு அரசியல் மற்றும்  கோடிக்கணக்கான மக்கள்  சாலைகளில் நடக்கத் தொடங்கிய பிறகும் அவர்களுக்கு உதவ முன்வராத அரசு பயங்கரவாதம் குறித்து இந்தப்படம் பேசவில்லை.   என்ன  இருந்தாலும் ஊரடங்கு  ஊர் திரும்புதல் நெடுந்தூர நடையைப் பேசியுள்ள இத்தப் படத்தை பாராட்ட வேண்டும்..
மு.ஆனந்தன்
9443749987