நூல் அறிமுகம்: காவிரி நீரோவியம் – இரா.சண்முகசாமி
காவிரி நீரோவியம்
(நிலவியல்-அரசியல்- சமூகவியல்- பொருளியல்)-உயிர்மை.
-ஆசிரியர் தோழர் #சூர்யாசேவியர்
“ஆடு மேய்ப்பவனின் கையில் இருந்த கோல்தான் அரசனின் கைக்கு மாறியது செங்கோலாக”- எவ்வளவு நுணுக்கமான வரலாற்றுத் தரவுகளாக இருக்கே.
இதனால் அரசன் யாருக்காக வேலை செய்திருப்பான் என்பதை நமக்குத் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறார்.
இங்கே தமிழக ஆறுகளின் பெயர்களை பாருங்களேன் அவரின் வார்த்தைகளிலே கேட்போம்
“தென்பெண்ணை, கெடிலம், மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர், அடையாறு, செய்யாறு, பாலாறு, கூவம், கொசத்தலையாறு, ஆரணியாறு, அமராவதி, பொன்னை, காவிரி, கொள்ளிடம், பாம்பாறு, வெட்டாறு, வெண்ணாறு, வைகையாறு, குண்டாறு, கிருதுமால் ஆறு, பாமணியாறு, குடமுருட்டி,
ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு,
சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு, சிறுவாணி, பவானி,
நொய்யலாறு, பம்பாறு, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, பச்சை ஆறு, கறுப்பா நதி, நம்பியாறு, கொடுமுடிஆறு, அனுமாநதி, கருமேனியாறு,
கரமணை ஆறு, சேர்வலாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு,
கோதையாறு, கோம்பையாறு, பெரியாறு, சுள்ளி ஆறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாந்தி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, உப்பு ஆறு, பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி, நங்கட்சியாறு,
குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளையாறு, பொன்னை, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு, உத்திரகோசமங்கை
ஆறு, தொப்பையாறு, வசிட்டாநதி, கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, அக்கினி ஆறு, அம்புலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டகரையாறு. இத்தனை ஆறுகள் தமிழ்நாட்டில்
ஓடுகிறது. இதில் மூத்த ஆறு எது என்ற கேள்விக்கான விடையைத்
தேடினால், நிலவியல் சார்ந்த ஆய்வுகளுக்குள் அது இழுத்துச் சென்றது.”- தோழர் Surya
அப்பப்பா எவ்வளவு ஆறுகள்!
இந்தத் தகவல்களை யெல்லாம் எப்படி திரட்டியிருப்பார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்காக அவர் எவ்வளவு தூரம் தேடினார் என்பதையும் பதிவு செய்திருப்பார்.
முன்னுரையே கலைகட்டும். சுதந்திரப் போராட்ட வீரர் அருமைத்தோழர் இரா.நல்லக்கண்ணு அவர்களின் மிகச்சிறப்பான அணிந்துரையுடன், ஓவியர் தோழர் #ரவிபேலட் அவர்களின் அருமையான ஓவியங்களுடன், எளிய நடையில் காவிரி நமது ஆழ்மனதில் ஓடி வருகிறாள் நீரோவியமாக. 100 தலைப்புகளில் இருக்கும் தோழரின் தகவல் திரட்டினை இனிமேல் தான் வாசிக்கத் தொடங்கனும். மீண்டும் நூலை முழுமையாக வாசித்து காவிரியின் விரிந்த தகவலுடன் வருகிறேன் தோழர்களே.
