Posted inPoetry
ச.சக்தியின் கவிதைகள்
1 ஒரு வாய் சோறு இருந்தா கொடு சாமி யென்கிற யாரோ ஒரு அம்மாவின் அழுகைக் குரல் போதும் போதும் என்று நான் தலையசைத்த போதும் இன்னும் கொஞ்சம் தான் சாமி சாப்பிடு என்று வாய் துருத்திய என் அம்மாவின் குரல்…
சைக்கிள் ….!
அப்பா
ஆசையாக
வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
பழுதாகி பழைய
இரும்புக் கடையில்
ஒரு மூளையில் கிடக்கிறது
அந்த
சைக்கிளில் தான்
பள்ளிக்கு சென்று வந்தேன்,
அம்மாவுக்காக
மளிகை கடைக்கு
போயிட்டு வந்தேன்,
அக்காவுக்காக
டைலர் கடைக்கு போயிட்டு வந்தேன்,
அண்ணனுக்காக
டிபன் கடைக்கு போயிட்டு வந்தேன்,
என் காதலிக்காக
களத்துமேட்டுக்கு போயிட்டு வந்தேன்,
எல்லா இடத்திற்கும்
போயிட்டு வந்த
அப்பா வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
போகாத
இடத்திற்கு போய்விட்டது
பழுதடைந்த
பழைய சைக்கிளாய் ……!!!!
கவிஞர் ச.சக்தி
பண்ருட்டி.