Tag: ஜலீலா முஸம்மில்
கவிதை: நெஞ்சப் பட்டறையில்… – ஜலீலா முஸம்மில்
Bookday -
மிகவும்
பாதுகாப்பாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
நெஞ்சப்பட்டறையில்
சந்தர்ப்பங்கள்
அமையாது போகலாம்
அதைப் பயன்படுத்த
காற்றின் அலைகளில்
மூழ்கிக் கரைந்து போகலாம்
மூச்சுக்காற்றின்
அனலில் மறைந்து போகலாம்
முகவரி தெரியாமல்
அண்டவெளி எங்கும்
அலைந்து திரியலாம்
முட்டி முட்டி
மௌனமாக மேடை தேடி
ஓடிக்கொண்டிருக்கலாம்
கட்டவிழ்த்த சுதந்திரம் கேட்டுக்
கானகங்களில் கண்ணீர்
விட்டு விசும்பலாம்
ஆனால்...
நேசச்சுழலில்
சிக்கிய சில
கவிதைகளில் அது
நிச்சயம்
தஞ்சமடையும்
நேசத்தின் அச்செழுதும்
சில இதழ்களில்
நிச்சயம்
பவ்வியமாக உட்கார்ந்து...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...