pinaikkaithi meetpum paalasstheena aatharavum web series written by a.bakkiyam தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் சுரண்டலை எதிர்த்த நாடுகள்…