நெஞ்சாங்குழியில் கவிதை -ம.செல்லமுத்து

நெஞ்சாங்குழியில் கவிதை -ம.செல்லமுத்து


அவள் நெஞ்சாங்குழி நீங்காமல் ..
அழியாத சுவடுகளில்
தெரியாமல் அழிந்து போன என்
முதல் காதல்  ..!!
யாரோ அவள்
யாரோ நான்
அல்ல ?
காலத்தால்
அறிந்தும்,புரிந்தும்,பிரிந்து,
போன காதல் நெஞ்சாங்குழி ..!!
காதலில் கயவன் ஆனதால்
வாழ்க்கையில் பல மாறுதல்கள்
அன்று
இருளில் கண் விழித்தது
இன்று பகலிலும் கண் விழிக்க முடியாமல்
ஏமாற்றப்படுவேன் என்று தெரியாமல்!!
பொய்யும் உண்மை என இன்று ஊமை ஆகினேன்!!
சாதிப்பதை அழித்து
சாக்கடையும் சாதி பார்த்தது
அன்று
அலட்சியமே வாழ்க்கையானது!!
இன்று வாழ்க்கையே அலட்சியமானது!!
     –ம.செல்லமுத்து