Posted inPoetry
கவிதைகள் : சசிகலா திருமால்
யாரிடமும் பேசிடா மௌனம்.. நீயில்லா நொடிகளனைத்தும் மொட்டவிழ்த்த மலரின் அழகோ மழலையின் மெல்லிய புன்னகையோ இரசனையின் எட்டா பிடிக்குள் சிக்கியே மரணிக்கின்றது... யாரிடமும் பேசிடா நின் மௌனம் கூட என்னோடு முட்டி மோதுகிறது.. உந்தன் நினைவொன்றையே ஆடையெனச் சுற்றிக் கொள்ளும் மனம்…