தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி

தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி




எண்ணங்கள் எழுச்சிபெற்று எழுந்து நிற்கும் பேரோவியமாய்
வண்ணங்கள் பல தீட்டப்பட்டு வடிக்கப்பட்ட காவியமாய்
வாழ்க்கையை இன்பமயமாக்க இறுதிவரைப் போராடி
வேள்விகள் பல கடந்து உறுதியோடு வாதாடி
என்ன இந்த வாழ்வு என்றெண்ணி சோர்ந்து போகாமல்
எதையும் சாதிக்கும் என் நாட்டு பெண்மணிகள்
சாகசங்கள் பல நிகழ்த்தும் தன் நாட்டு கண்ணின் மணிகள்
வண்ணங்கள் இல்லாது போய்விட்டால் வானவில் ஏது
பெண்ணவள் இல்லாது போய்விட்டால் வாழ்கையே கிடையாது
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று
அனைத்துத் துறையிலும் பெண்கள்
அனைத்துத் துறையிலும் பெண்கள்.

மார்ச் – 8 – 2023

முகவரி:

சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988

தொடர் 4: சிறிது வெளிச்சம்– கு.ப.ராஜகோபாலன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 4: சிறிது வெளிச்சம்– கு.ப.ராஜகோபாலன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாற்பதுகளிலேயே இன்றும் பிரவேசிக்கத் தயங்குகின்ற தளங்களில் கதையெழுதியர் கு.ப.ரா.  நாலைந்து பக்கங்களுக்குள் சம்பவக் கோர்வையையும் சீரான உரையாடலையும்  வெளிப்படுத்தி கதையை முழுமையாக்கும் சித்தர் இவர் சிறிது வெளிச்சம் கு.ப.ராஜகோபாலன் சென்னை நகரில் உள்ள ஒரு வீட்டின் ரேழி உள்ளில் எழுத்தாளர் குடித்தனம்…