நூல் அறிமுகம்: முஹம்மது யூசுப்பின் ’நுழைவாயில்’ (நாவல்) – அ. மு. நெருடா

நூல் அறிமுகம்: முஹம்மது யூசுப்பின் ’நுழைவாயில்’ (நாவல்) – அ. மு. நெருடா




தூத்துக்குடியை சேர்ந்த முஹம்மது யூசுப் கதை சொல்வதில் தனது அடையாளமாக விரித்துகொண்ட Docu-Fiction வகையில் கொடுத்த அடுத்த நாவல் நுழைவாயில்.

ஒவ்வொரு நாவலுக்கும் அவர் எழுத்தில் மாற்றம் தெரிவதை அவரது நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும். அவரது முதல் இரண்டு நாவல்களில் தான் சொல்ல வரும் வரலாற்று தகவல்களை வலிந்து திணித்தது போல தனியே தொக்கி நிற்கிறது என்கிற விமர்சனத்தை அடுத்த அவரது படைப்புகளில் மாற்றியிருக்கிறார். இந்த நாவலிலும் எந்த இடத்திலும் தகவல்கள் தனியே தொக்கி நிற்காமல் தொடர்ந்து வாசிக்க இலகுவாக இருக்கிறது.

அவரது ஒவ்வொரு நாவலிலும் ஏதோவொரு கதாப்பாத்திரம் நம்மை வெகுவாக கவர்ந்துவிடும். அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது நமக்கே அறியாமல் ஒரு மரியாதையையும் அவரது எழுத்துன் வாயிலாக வந்துவிடும். இது தோழப்பாவில் தொடங்கி இதோ இந்த நாவலில் ஷெரிப் பாய் வரை தொடர்கிறது.

நாவலில் ஷெரிப் பாய் பேசும் கருத்தே நாவலின் மையக்கருத்தாக நான் கருதுகிறேன்.

நபி பிறந்த வீடு சவூதி அரேபியால மெக்கால இன்னமும் இருக்கு. அதை லைப்ரரியா மாத்திட்டாங்க. உலகத்தில வேற எந்த சமயம் சார்ந்த தலைவருக்கும் மொதல்ல அவரு பிறந்த வீடுன்னு ஒன்னு கண்டுபிடிக்கப்பட்டிருக்கான்னு தெரியல. அப்படியே வீடு இருந்தாலும் அது லைப்ரரியா மாறி இருக்க வாய்ப்பே இல்ல. இதுல இருந்து என்ன தெரியுது? முஸ்லீம்ஸ் படிக்கனும், வாசிக்கனும் புத்தகம் சார்ந்து இயங்கனும் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த எல்லாத்தையும் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் நாட்டாரியல் வழக்காருன்னு ஒன்னு விடாம பதிவு செய்யணும். பழமைங்க்றது இந்த நிலத்துல முன்னாடி இருந்த உன்னோட அடையாளம் அதை மறந்திராத.

இதன் ஊடாக தூத்துக்குடியின் வரலாற்றை அதன் மாற்றத்தை அழகாக கதை வடிவில் 460 பக்கங்களில் சிறப்பாக வழங்கியிருக்கிறார். கொடுக்கப்பட்ட அனைத்து வரலாற்று தகவல்களையும் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து வாசிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.

– அ. மு. நெருடா

நூல் : நுழைவாயில் (நாவல்)
ஆசிரியர் : முஹம்மது யூசுப் 
விலை : ரூ.₹560/-
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]