குடியரசிலிருந்து சமமற்றவர்களின் குடியரசிற்கு (From a republic to a republic of unequals) - வெங்கடநாராயணன் சேதுராமன் | தமிழில்: ஆதிரன் ஜீவா

குடியரசிலிருந்து சமமற்றவர்களின் குடியரசிற்கு – வெங்கடநாராயணன் சேதுராமன் | தமிழில்: ஆதிரன் ஜீவா

குடியரசிலிருந்து சமமற்றவர்களின் குடியரசிற்கு - வெங்கடநாராயணன் சேதுராமன் | தமிழில்: ஆதிரன் ஜீவா அரசியலமைப்பு தினமான நவம்பர் 26,2024 அன்று, சுதந்திர இந்தியா அரசியலமைப்பு சட்டமும் அதன் அடிப்படையிலான ஆட்சியும் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வலதுசாரி, இடதுசாரி என…
கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா

கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா




சூரியன் மறைந்தாலும் அதன்
ஒளி மறையாத அந்திமாலை

வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,

கூடுதிரும்பும் இணை மைனாக்கள்,

இளம்தென்னை உரசலோசை,

முந்தாநாள் முடிந்துபோன
சண்டையை மீளக்கொணர
வாசலில் அமர்ந்து
வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,

காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்
கொஞ்சிப் பேசிடும் பூனைக் குருவிகள்,

நாள்பூரா உழைத்துத் திரும்பும்
தாயின் அன்பிற்காய்க் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,

தூரத்துக் குளமொன்றில்
பெருந்துணியொன்றை அடித்துத் துவைக்கும்
‘தொப்’ ‘தொப்’பெனும் ஓசை,

எல்லாம் ‘அழகு’ தான் கிராமத்தில்.

இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை.
ஜாதியை தங்கள் பெருமையென
நினைக்கும் பல ‘மனித’ மனங்களால்.

ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால்
அழகுக்கே அது அவமானம்.

-ஆதிரன் ஜீவா

கவிதை: அகண்ட தேசம் – ஆதிரன் ஜீவா

கவிதை: அகண்ட தேசம் – ஆதிரன் ஜீவா

அகண்ட தேசம் ~~~~~~~~~~~~~~~~ நினைத்தும் பார்த்தில்லை இந்தத் துயரம் எங்கள் தேசத்திற்கு வருமென்று. உலகத்தார் பலரைக் கொன்ற  கொடிய வைரஸ் எங்கள் இணை அதிபரையும் கொண்டு போனது. பத்தடுக்கு பாதுகாப்பெல்லாம் வைரஸுக்கு போதாதாமே! தேசத்திற்கு துயரென்றது மொத்த மக்களுக்குமல்ல, நூற்றுக்கு மூன்றெனும்…
ஆதிரன் ஜீவா கவிதை

ஆதிரன் ஜீவா கவிதை

புதுசா அறிமுகமாகிற சகமனுசனுடனான சந்திப்பில் அவன் சாதிய தேடுற நீ! இணையா பயணிக்கும் மனம் விரும்பும் பெண்ணுடனான இயல்பான காதல அணை போட்டுத் தடுக்குற நீ! நாட்டுக்கு பதக்கம் வாங்கிய விளையாட்டு வீரனின் பிறப்ப இணையத்தில் தோண்டுற நீ! பெத்தமகள அவ…