மருதனின் *எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்* – அபுபக்கர் சித்திக்
எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்
மருதன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 60
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
புத்தகத்தைப் பற்றி எனக்கு புரிந்த ஒரு சில வார்த்தைகள்…
உண்மையாக கூற வேண்டும் என்றால் பல நாட்களுக்குப் பிறகு ஒரு மிகச்சிறப்பான வரலாற்று கதைகளை சுவைத்தேன்.. இந்த புத்தகத்தில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் வரலாற்று கதைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களை அனுபவித்தும் ரசித்தும் மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்திருந்தார் எழுத்தாளர்.
உண்மையைக் கூற வேண்டுமென்றால் முதல் சிறுகதையிலேயே ஆசிரியர் என்னை உள்நோக்கி அழைத்துச் சென்றுவிட்டார். வெறும் கதையாக மட்டுமல்ல, கேள்விகளோடும் தான். நம் அனைவருக்கும் வரலாறு எவ்வளவு முக்கியம் என்று இந்த சிறுகதைகள் நமக்கு உணர்த்துகிறது. இன்னும் கூற வேண்டும் என்றால் சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ஜோன் ஆஃப் ஆர்க், நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், கிரேசி ஹார்ஸ் போன்ற பல மாமேதைகளின் கதைகளை அரிய படுத்தும் வகையில் எழுதி இருக்கிறார்.
மேலும் கூற வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாழும் டகோடா மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் நேர்மையும் இன்னும் நுணுக்கமாக கூற வேண்டுமென்றால் , பழங்குடி மனிதர்கள் இவ்வுலகில் எதற்கும் ஆசைப்படாமல் எதையும் உன்னுடையது என்னுடையது என்று பாராமல் இயற்கையை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயற்கை அனைவருக்கும் சொந்தமானது என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உண்மையில் கிரேசி ஹார்ஸ் அந்த கதைகளில் கேட்கும் ஒரு ஒரு கேள்வியும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு கேலிக்கூத்தாக தான் தெரியும்…. ஆனால் அதனுள் உள்ள நுணுக்கங்களும் உண்மையும் உள்ளே சென்று பார்த்தால் தான் புரிகிறது அவர்களின் வலியும் வேதனையும்.
போராடாமல் எதுவும் கிடைக்கவில்லை கிடைக்கவும் கிடைக்காது… இந்தத் தத்துவத்தை நம்முள் விதைத்த மாமேதை காரல் மார்க்சின் கதையும் சிறுகதையில் அடங்கியிருக்கிறது தான் மிகச் சிறப்பான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் இக்கதையின் ஆசிரியர் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையை மேலோட்டமாக காண்பித்து மிக அழகாகவும் ஒரு குழந்தையை வைத்து தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அனைத்தையும் கேள்வி கேள் என்று நம்முள் கேள்வி கேட்கும் அறிவையும், சிந்தனையையும் மிகச் சிறப்பாக சார்லஸ் டார்வினின் சிறுகதை உணர்த்துகிறது..
ஒன்று பிடிக்கவில்லை ஆதலால் நான் மற்றொன்றை தேடிச் செல்வேன் என்று வாழும் இவ்வுலகில் என்னை மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக என் உரிமையையும் என்னுடைய சுயமரியாதையையும், என்னால் விட்டுக்கொடுக்க முடியாது நான் இங்கு இருந்தால் மட்டுமே அதை போராடி வாங்கிக் கொடுக்க முடியும் என்று மிக அழகாக தோழர் மண்டேலாவின் கதையையும் கூறியிருக்கிறார்…
மேலும் குழந்தைகளுக்கு பாட நூல்கள் மட்டும்தான் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டாக குழந்தைகளுடைய சிறுசிறு திறமைகளும் அவர்களை கண்டிப்பாக உயர்த்தி செல்லும் இன்று மிகச் சிறப்பாக எழுதி இருப்பார்….
கடைசியாக இப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்த கதைகளில் மிக அழகான ஒன்று பெண்ணியம்.. தற்போது நம் சமுதாயத்தில் யாரேனும் ஏதேனும் ஒரு சிறிய தவறு செய்தால் அல்லது யாரேனும் எதற்காவது பயந்தாள் நீ என்ன பொம்பளையா அப்படி என்று அவர்களைப் பார்த்து கேட்பார்கள் இப்போதும் இச்சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது… அப்படிப்பட்ட அழுக்கான ஒரு சிந்தனையை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக ஒரு கதையில் மிக அழகாக பெண்ணியத்தை உணர்த்தி இருப்பார் இக்கதை ஆசிரியர்….. அக்கதையில் குதிரை நினைக்கும் நான் இவ்வளவு நாளாக பெருமையாகவும் போராளியாகவும் ஆனை மட்டும் தான் பார்த்தேன். ஆனால் இப்பொழுது தான் எனக்கு புரிகிறது பெண்ணுக்குள் போராளி தனம் மட்டும் அல்ல, இயல்பாகவே அவளிடம் பொறுமையும் பொறுப்பும்,மணிதம்மும் சேர்ந்தே இருக்கிறது…
கண்டிப்பாக ஆணுக்கு நிகர் பெண்ணே…
இப்படிக்கு
அபுபக்கர் சித்திக்