Vagupparai Anupavangal; Adi Vaangum Kandrukutty - Magudeeswaran. Its a Personal Experience of School Teacher. வகுப்பறை அனுபவங்கள்: அடி வாங்கும் கன்றுக்குட்டி

வகுப்பறை அனுபவங்கள்: அடி வாங்கும் கன்றுக்குட்டி – மகுடீஸ்வரன்



நான் வேலைக்குச் சேர்ந்து ஓராண்டு இருக்கும். நான் பணிபுரிந்த பள்ளியில் ரேணுகா என்று மாணவி என்னிடம் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். வேலைக்கு சேர்ந்த புதிதில் நான் மிகவும் கண்டிப்பானவர். குழந்தைகளுக்கு அவர்களுக்கு தண்டனையாக குச்சியை பயன்படுத்தி அடிப்பது வழக்கம்.

சிறிய வகுப்பு குழந்தைகள் கூட நான் அழைத்தால் என்னிடம் வர பயபடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரேணுகாவும் என்னிடம் அடிக்கடியும் அடிவாங்குவது உண்டு. ஆனாலும் ஒரு நாள் அந்த மாணவி தங்கள் வீட்டு கன்றுக்குட்டிக்கு எனது பெயர் வைத்துள்ளதாக பெருமையாகக் கூறினார். நானும் ஒரு சின்னஞ் சிறு குழந்தையிடம் நாம் எவ்வளவு பாசமாக பழகியிருந்தால் அக்குழந்தை தனது கன்றுக்குட்டிக்கு எனது பெயரை வைத்திருப்பார் என்று என்னை நானே பெருமையாக நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் சில நாட்கள் கழித்து ரேணுகாவின் பாட்டி பள்ளிக்கு வந்து யார் அந்த மகுடீஸ்வரன் சார் என்று விசாரித்தார். நானும் நான் தான் என்று பெருமையாக கூறினேன். அதற்கு அவர் ஏன் அப்பா பிள்ளையை போட்டு அடிக்கிறீர்கள் ஒவ்வொரு நாளும் நீ அடிக்கும் அடிக்கலாம் பதிலடியாக எங்கள் வீட்டு கன்றுகுட்டி தினந்தோறும் எனது பேத்தி இடம் அடி வாங்கி துன்பப்படுகிறது என பதில் மொழி கூறினார்.

அப்போதுதான் நான் செய்யும் தவறு எனக்கு புரிந்தது அன்றிலிருந்து மாணவர்களை அடிப்பதை நிறுத்திக் கொண்டேன். என்னில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சின்னஞ்சிறு குழந்தையின் செயலை என்னால் இன்றும் மறக்க இயலாது

– மகுடீஸ்வரன், திண்டுக்கல்