பூட்டில்லா…வீடு சிறுகதை- சக்தி ராணி

பூட்டில்லா…வீடு சிறுகதை- சக்தி ராணி




அகல்யா…உள்ள வரும் போது கதவை பூட்டிட்டு உள்ள வா…

சரிம்மா…பூட்டிட்டேன்…

ஏம்மா…வீட்டை பூட்டி பாதுகாக்கனும்…

நாம தான் உள்ள இருக்கோமே…

அப்புறம் யாரு வருவா…

சரி தான் உன் கேள்வி…ஆனா…நம்மை நாமே பாதுகாக்க பழகிக்கனும்.கலிகாலம் இது…எப்போதும் விழிப்பாக இருக்கனும்…

ம்ம்…ஆனா எதிர் வீட்டு பாட்டி வீடு எப்போதும் திறந்து தான் இருக்கு…அது பூட்டி நான் பார்த்தே இல்லை அம்மா…

ஆமாஅகல்யா…அவங்கலாம் அந்த காலத்துஆளுங்க…எப்போதும் பக்கத்து வீட்டுக்காரங்க…வழிபோக்கர்கள் யாருக்காவது உதவி செய்யனும்னு காத்திருப்பாங்க…பூட்டியிருந்தா…யாரும் வர மாட்டாங்க…ஆள் இல்லையோனு போயிடுவாங்க. அதனால தான் பாட்டி எப்போதும் வீட்ல பூட்டு போடாம இருக்காங்க…அந்த காலத்து பழக்கம்

ம்ம்…அம்மா…அப்போ உதவினு கேட்டு நம்ம வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்கல அம்மா…

நம்ம வீடு தான் எப்போதும் பூட்டியிருக்கே…

அகல்யா கேட்ட வினா சரியாக இருந்தாலும்…மௌனம் மட்டுமே பேசப்பட்டது… அந்நேரத்தில்.

– சக்தி

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பால்வண்ணம் பிள்ளை* | வாசித்தவர்: அகல்யா

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பால்வண்ணம் பிள்ளை* | வாசித்தவர்: அகல்யா

  சிறுகதையின் பெயர்: பால்வண்ணம் பிள்ளை புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: அகல்யா (Ss148)   [poll id="47"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காம தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.