அகவி கவிதைகள் | அகவி எழுதிய 5 புதிய தமிழ் கவிதைகள் | அகவியின் கவிதைகள் | Agavi Kavithaikal | www.bookday.in

அகவி கவிதைகள்

அகவி கவிதைகள் ******************************************************** 1. செருப்புகளின் பிறந்த நாள் கால்களுக்காகக் காத்திருக்கும் காலாபிமானத் தவம் உயரத்தில் அமர்ந்திருக்கும் தரைதொடா செருப்புகள் செருப்பற்ற பாதங்களைப் பார்க்க மனசின்றி கண்களை மூடிக்கொண்டன வாளிப்பு மினுமினுப்புகாட்டி சாய்வு ஆசனத்தில் அமர்ந்துள்ளன அவை! பணமுடித்து போன பிறகு…
Ganaththin Suvadu (The trace of wisdom) Poetry By Agavi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஞானத்தின் சுவடு – அகவி



மூன்று மாதத்திற்கு
முன்பு நிகழ்ந்த
மரணம் ஒன்றை
விசாரிக்க

குடும்பத்துடன்
வீட்டிற்கு வந்தார்
உறவினர் ஒருவர்

தகப்பனின்
உயிரை
தன் கண்ணீர் கோடுகளால்
வரைந்து வரைந்து பார்க்கும்
என் மனைவியை
அழவைக்காமல்
எதையும் நினைவூட்டாமல்
பேசி சென்றவர்
நிகழ்காலத்தை
அதிநிதானத்தில்
கையாள்கிறார்
என்று மட்டும்
வரையறுத்தல் தகுமா?

துக்கச் சொற்களற்று
துக்கத்தைப் பகிர்தல்
என்பது
நிகழ்ப்பொழுதைப்பாதுகாத்தல்

எதையுமே கட்டத் தெரியாமல்
எதையுமே
அவிழ்க்கத் தெரியாமல்
தொளதொள சொற்களால்
காலத்தைக கடப்பர் அனேகர்

அதிகம் பேசாமலேயே
உங்களை
இருகக் கட்டியும்
ஏதோ ஒன்றை
அவிழ்த்துவிடவும் செய்ய
உங்கள்
இல்லத்திற்கு
யாராவது வந்திருக்கின்றனரா?

எங்கள்
வீட்டிற்கு வந்த உறவினர்
இந்நேரம்
ஒரு மிகப்பெரிய
சந்தோசமான
ஒன்றை
மிகச்சாதாரன தொனியில்
பகிர்ந்து கொண்டிருப்பார்
யாரிடமாவது

 

 

– அகவி 

கவிதை: வடிவங்கள் – அகவி

கவிதை: வடிவங்கள் – அகவி

உலக உருண்டையின் நீட்சி வடிவங்களாய் எங்கெங்கும் தெரிகின்றன முட்டையிலிருந்து பிறக்கும் உயிரினங்கள் முட்டை வடிவத்தை வாழ்ந்து விட்டே வெளிவருகிறது நான் கூட அம்மாவின் கருவறையில் வட்டமாய் சுருண்டு அமர்ந்து வட்டத்தை வாழ்வாக்கிப் பார்த்து தான் வந்துள்ளேன் வட்டம் கைகட்டிய காட்சி சதுரம்…
அகவி கவிதைகள்

அகவி கவிதைகள்

ஒன்றுமற்றதின் ஒளி  ,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,.,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,     ஒன்று மற்றதில் நிரம்பியிருக்கும் நிஜம் உனக்குப் பிடிபடுகிறதா?   நேற்றிலும் நாளையிலும் பரவிப் பாய்கிறது உனது வேர்   வாழ்வை இருகப் பற்றுவ‍ தென்பது இன்றின் வேர்விடலில் உள்ளது!   உன் வீட்டிலிருந்து வெளியேறும்…