அகவி கவிதைகள் | அகவி எழுதிய 5 புதிய தமிழ் கவிதைகள் | அகவியின் கவிதைகள் | Agavi Kavithaikal | www.bookday.in

அகவி கவிதைகள்

அகவி கவிதைகள் ******************************************************** 1. செருப்புகளின் பிறந்த நாள் கால்களுக்காகக் காத்திருக்கும் காலாபிமானத் தவம் உயரத்தில் அமர்ந்திருக்கும் தரைதொடா செருப்புகள் செருப்பற்ற பாதங்களைப் பார்க்க மனசின்றி கண்களை மூடிக்கொண்டன வாளிப்பு மினுமினுப்புகாட்டி சாய்வு ஆசனத்தில் அமர்ந்துள்ளன அவை! பணமுடித்து போன பிறகு…
agavi kavithai அகவி கவிதை

அகவி கவிதை

காட்சி திரிக்கும் காலம் ############### பயணத்தின்போது அருகமரும் நபரின் முகத்தை உற்று உற்றுப் பார்க்கிறேன் சில மணி நேரத்தில் அவர் இறங்கிப் போய்விடக்கூடும் அவரருகில் நானும் என் அருகில் அவரும் அமர இனி எப்போதும் வாய்க்காது நீண்ட நாட்களுக்குப் பிறகான வீடு…
மொழியற்ற பூக்களின் கவிதைகள் - அகவி mozhiyatra pookkalin kavithaigal - agavi

மொழியற்ற பூக்களின் கவிதைகள் – அகவி

சொர்க்கத்தின் உயிர்க்காற்று வேப்பமர இலைகளிலிருந்து கிளம்புகிறது மழையின் பச்சை நிறம் காற்றைச் சலிக்கும் சல்லடை மூச்சுக்காற்றிற்குக் கிடைக்கும் மூலிகைமுத்தம் வேப்பங்காற்று அதோ வரலாற்றுத் தொலைவில் புரவியில் தமிழ் ஒளிர சவாரித்து வரும் மாமன்னன்பாண்டியனின் அரசவைப் பூ நீதி தவறியதற்காய் கோபித்துக்கொண்டு கழுத்தை…
அன்பின் பதிலி கவிதை –  அகவி

அன்பின் பதிலி கவிதை – அகவி




கடிதம் எழுதுதல்
தன்னை எழுதுதல்

இப்போதெல்லாம்
கடித கர்ப்பிணி
யாய்
தினம்தினம் அலையும்
தபால்காரரை
காணவே முடியவில்லை

நொடியில்
குரல் கேட்கும்
முகம் பார்க்கும் காலமிது
அன்பின் கசிந்துணர்வை தரவோ பெறவோ
இயலுகிறதா
நவீன கரங்களால்.

அன்புள்ள
எனத் தொடங்கி
உயிருக்குள்
உயிர் ஊறவைக்கும்
கடுதாசி காலம்
அரிதாகிப்போனது

உறவுமுறைக் கடிதங்கள்
எனும் பாடத்தை
நடத்தி முடித்தேன்.
பின் பயிற்சிக்காக
ஐம்பது அஞ்சல் அட்டை வாங்கி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
கடிதம் எழுதுங்கள்
என்றேன்

சிலர் மட்டும்
மாமாவுக்கு
சித்தப்பாவுக்கு
தாத்தாவுக்கு என எழுதினர்
பிறகுதான் தெரிந்து
திடுக்கிட்டேன்
இவர்களுக்கு தாய் தந்தை
இல்லை என்று

பதிலித் தாய் தந்தையாய்
மாமா, தாத்தா
சித்தப்பா
போதுமா
மனிதராக இருக்கும்
எவரும் இருக்கலாம்
பதிலித்தாய் தந்தையாய்
இன்று
பதிலித் தபால்காரராய் இருக்கும்
கூரியர் இளைஞரைப் போல.

Tholainthathu Edhu Poem By Agavi. தொலைந்தது எது? கவிதை - அகவி

தொலைந்தது எது? கவிதை – அகவி




உங்கள் செல்பேசி எண்
தொலைந்துவிட்டது
என் எண்ணும்
தொலைந்துவிட்டதா

இதோ எண் ……….
நமது எண்கள்
நம் இருவரின்
கையில் இருந்தும்
ஓராண்டாய்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதன் காரணம்
விளங்கவில்லை
தொலைந்தது
நாமா? எண்களா?

என் மரணச்செய்தியை
நானே சொல்லமுடியுமா?
ஆனால்
என் இருப்பை
நான்தான் வெளிப்படுத்த வேண்டும்
உங்கள் இருப்பை
உங்களைப் போல
வெளிப்படுத்த யாருளர்
உங்களைத் தவிர ?

முகவரியிலிருந்து
எப்போது மனிதன்
எண்களால் அடையாளப்பட்டானோ
அப்போதிருந்துதான்
தொடங்கியது
கழித்தல்!

வாசல் வழி
மனிதம் வெளியேறத்
தொடங்கியது
பாஸ்வேர்டை தொலைத்ததனால்
அடைந்த நட்டத்தால்
பைத்தியமானான்
மெத்தப்படித்த ஒருவன்!

நீங்களும்
நானும்
சித்த நலத்துடன் இருக்கிறோம் இதுபோதும்
இப்போதைக்கு
எண்களாய் மாறி
என்ன
கிழிக்கப்போகிறோம்?

Ganaththin Suvadu (The trace of wisdom) Poetry By Agavi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஞானத்தின் சுவடு – அகவி



மூன்று மாதத்திற்கு
முன்பு நிகழ்ந்த
மரணம் ஒன்றை
விசாரிக்க

குடும்பத்துடன்
வீட்டிற்கு வந்தார்
உறவினர் ஒருவர்

தகப்பனின்
உயிரை
தன் கண்ணீர் கோடுகளால்
வரைந்து வரைந்து பார்க்கும்
என் மனைவியை
அழவைக்காமல்
எதையும் நினைவூட்டாமல்
பேசி சென்றவர்
நிகழ்காலத்தை
அதிநிதானத்தில்
கையாள்கிறார்
என்று மட்டும்
வரையறுத்தல் தகுமா?

துக்கச் சொற்களற்று
துக்கத்தைப் பகிர்தல்
என்பது
நிகழ்ப்பொழுதைப்பாதுகாத்தல்

எதையுமே கட்டத் தெரியாமல்
எதையுமே
அவிழ்க்கத் தெரியாமல்
தொளதொள சொற்களால்
காலத்தைக கடப்பர் அனேகர்

அதிகம் பேசாமலேயே
உங்களை
இருகக் கட்டியும்
ஏதோ ஒன்றை
அவிழ்த்துவிடவும் செய்ய
உங்கள்
இல்லத்திற்கு
யாராவது வந்திருக்கின்றனரா?

எங்கள்
வீட்டிற்கு வந்த உறவினர்
இந்நேரம்
ஒரு மிகப்பெரிய
சந்தோசமான
ஒன்றை
மிகச்சாதாரன தொனியில்
பகிர்ந்து கொண்டிருப்பார்
யாரிடமாவது

 

 

– அகவி 

அகவி கவிதைகள்

அகவி கவிதைகள்

ஒன்றுமற்றதின் ஒளி  ,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,.,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,     ஒன்று மற்றதில் நிரம்பியிருக்கும் நிஜம் உனக்குப் பிடிபடுகிறதா?   நேற்றிலும் நாளையிலும் பரவிப் பாய்கிறது உனது வேர்   வாழ்வை இருகப் பற்றுவ‍ தென்பது இன்றின் வேர்விடலில் உள்ளது!   உன் வீட்டிலிருந்து வெளியேறும்…